கண்களில் உட்புறத்தில் பட்டன் மாதிரி வட்ட வடிவில் ஒரு லென்ஸ் இருக்கிறது. இந்த லென்ஸ் தூரத்தில் உள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது விரிந்து கொடுக்கும். கிட்டத்திலுள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது சுருங்கும். இதுதான் இந்த லென்ஸின் வேலை. இதன் மூலம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். எழுத்தைப் பார்க்கிறோம். லென்ஸ் இந்தச் சக்தியை இழந்துவிட்டால் நாம் பார்க்கும் பொருள்கள் மங்கலாகவும், தெளிவில்லாமலும் புகைமண்டலம் போல் வெள்ளையாகவும் தோன்றும். இது நோய் அல்ல. கண் பார்வையில் உண்டாகும் கோளாறு. இதைக் கிராம மக்கள் சாலேசரம் என்றும் வெள்ளெழுத்து என்றும் கூறுகிறார்கள். பிரஸ்பியோப்பியா என்று கண் மருத்துவர்கள் இதைக் குறிப்பிடுவார்கள். வெள்ளெழுத்து என்று இதை ஏன் சொல்லுகிறார்கள்? படிக்கும் போது புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவில்லாமல் வெள்ளையாகத் தோன்றும். கண்களுக்கு வெகு தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் தான் எழுத்து தெரியும். படிக்க முடியும். அருகில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்தால் சரியாகத் தெரியாது. இதேபோன்று உருவங்களும்...
Google Ads
Health tips, natural medicine tips, health consultations,tamil health medical tips, இயற்கை மருத்துவ குறிப்புகள், உடல் ஆரோக்கிய குறிப்புகள், அழகு குறிப்புகள்,