Skip to main content

Google ads

பற்களை உறுதியாக வைத்திருக்க சாப்பிட வேண்டிய உணவுகள்

 உடம்பு உறுதியாக இருக்க வேண்டுமானால் பற்கள் உறுதியாக இருக்கவேண்டும் என்று பல்நோய் நிபுணர்கள் கூறுகிறார்கள். பல்லுக்கும் உடம்புக்கும் என்ன சம்பந்தம்? உணவைப் பக்குவப்படுத்துவது வாய். 

பற்கள் கடினமான உணவுகளை உடைத்து எச்சிலோடு கலக்கப்பட்டு இரைப்பைக்குச் செலுத்தப்படுகிறது. உணவு ஜீரணமாவதற்குப் பற்கள் ஆற்றும் பணி மிகமிக முக்கியமானது. 

உணவுப் பொருள்கள் அரைக்கப்படாமல் அப்படியே விழுங்கப்பட்டால் இரைப்பைக்கு வேலை அதிகமாகிறது. இதனால் ஜீரண உறுப்புக்கள் சீர்கேடு அடைவதால் உண்டாவதுதான்.

பற்கள் எப்போது உருவாகின்றன?

 தாயின் வயிற்றில் குழந்தை உருவாகி ஆறு வாரங்களில் பல்லுக்கு அஸ்திவாரம் போடப்படுகிறது. குழந்தை பிறந்த ஆறாவது மாதத்தில் பால் பற்கள் தோன்றுகின்றன. குழந்தையின் வளர்ச்சியில் இரண்டு ஆண்டுகளில் இருபது பற்கள் தோன்றுகின்றன.

 பிறகு பன்னிரெண்டு ஆண்டுகளில் எல்லாப் பற்களும் முளைத்து விழுந்து விடுகின்றன. அதன் பிறகு நிலையான பற்கள் முளைக்க ஆரம்பித்து முழு மனிதன் ஆகும்போது முப்பத்திரண்டு . பற்களும் வளர்ச்சியடைந்து உறுதிபெறுகின்றன.

சிறு வயதில்தான் பல்லுக்குப் பல நோய்கள் உண்டாகின்றன. பல்சொத்தை, பல் ஆட்டம், பல்லரணை பயோரியா இன்னும் பல சிறிய நோய்கள் தோன்றி பற்கள் உறுதியாக வளரமுடியாமல் பலமிழந்து போகின்றன. 

ஊட்டச் சத்துக் குறைவு ஒருபுறம் இருந்தாலும், பற்களைச் சுத்தமாக வைத்துக்கொள்ளும் பாங்கு இந்தப் பருவத்தில் கவனிக்கப்பட்டாமல் பலவிதப் பல் நோய்களுக்குச் சிறுவர்களும் சிறுமிகளும் ஆளாகிறார்கள். உறுதியான வளர்ச்சிக்கு இடமில்லாமல் வயதிலேயே தவறான பழக்கங்களால் பற்கள் பாதிக்கப்படுகின்றன.

பற்களை உறுதியாக வைத்துக் கொள்வது எப்படி ?


இன்றைய நாகரிக வளர்ச்சியால் சிறுவர்களின் தின்பண்டங்களில் புதுமை பெருகிவருகிறது. இதுவே பற்களுக்குத் தீமையைக் கொடுக்கிறது. மிட்டாய்களில் எத்தனை பெயர்கள், எத்தனை இரகங்கள்! பற்களில் ஒட்டிக்கொள்ளும் சாக்லெட், பல் இடுக்களில் அடைத்துக்கொள்ளும் பிஸ்கெட், கேக் வகைகள். விதவிதமான ஐஸ் புரூட்கள், ஐஸ் க்ரீம்கள் இவை எல்லாம் சிறுவர்களின் பல் வளர்ச்சிக்கு எமன்களாக மாறிக் கொண்டிருக்கின்றன.

இதனால் பயோரியா நோய் உண்டாகிறது. இனிப்புச் சாப்பிட்ட உடனே தண்ணீரில் வாய் கொப்பளித்துப் பற்களைச் சுத்தம் செய்பவர்கள் எத்தனைப் பேர் இருக்கிறார்கள்?

பற்கள் உறுதியாக இருக்க, நாம் சாப்பிடும் உணவில் சுண்ணாம்புச் சத்தும், கந்தகச் சத்தும், வைட்டமின்-D சத்தும் தேவைப்படுகிறது. பற்கள் தேயாதபடி, சொத்தை விழாதபடி ஆட்டம் காணாதபடி பல் சிதைவு ஏற்படாதபடி பற்களைப் பாதுகாக்க வேண்டும் என்றால் பல்லும் அதன் உறுப்புக்களும் பலம் பெறவேண்டும். 

இதற்கு உயிர்ச் சத்துக்கள் உணவில் இருந்தே தாடைப் பகுதியும், எகிறு, ஈறு பகுதியும் இழுத்துக்கொண்டு பலம் பெறுகிறது. கால்ஷியம், பாஸ்பரஸ், கந்தகச் சத்துக்கள் நிறைந்த உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தால் பற்கள் உறுதியாக வளர்ந்து நிலைபெற்று நிற்கும். 

இந்தச் சத்துக்கள் குறைந்தால் பலமிழந்து கிருமிகளின் தாக்குதலுக்கு இலக்காகிச் சொத்தைப் பல், பல் அரணை, பயோரியா நோய்களுக்கும், வாய்ப் புற்று நோய்களுக்கும் ஆளாகி விழுந்துவிடுகிறது.

 பற்கள் வலுவடைய முக்கியமான சத்துப் பொருட்கள் பால், முட்டை, மீன் எண்ணெய், கீரைகள், தக்காளி, ஆரஞ்சு, கேரட் ஆகியவற்றில் வைட்டமின் ஏ, பி, சி, டி கால்ஷியம் ஆகிய சத்துக்கள் நிறைய இருக்கின்றன.

வைட்டமின்-டி சத்தைப் பெற வேர்க்கடலை, பட்டாணி, பச்சைப் பட்டாணி, முந்திரிப் பருப்பு, காய்கறிகளில் தக்காளி, பீன்ஸ், பழங்களில் 'திராட்சை, ஆரஞ்சு, மீன் எண்ணெய் ஆகியவற்றைச் சாப்பிட வேண்டும். இவை பற்களுக்கு உறுதி தருபவை.

பற்கள் உறுதி இழக்க உணவில் சில விஷயங்களை நீக்கவேண்டும். மிளகாய்க் காரம் கூடாது. புளிச் சுவை கூடாது. பல்லுக்கு அதிகச் குளிர்ச்சிதரும் பானங்களையும் அதிகச் சூடு தரும் உணவு வகைகளையும் சாப்பிடக்கூடாது. வாயினால் சுவாசிப்பதும் பல்லுக்குக் கேடு தரும். வெற்றிலை பாக்கு, பான் பீடா போடக் கூடாது. இவை

இரத்தச்சோகை-ஏன்? புற்று நோய்களைக்கூட உண்டாக்கும். ஆகவே பற்கள் உறுதியாக நிலைபெற்று நிற்க வாய்ச் சுத்தம் மிக மிகத் தேவை.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...