Skip to main content

Posts

Showing posts with the label யோகாசனம்

Google ads

நாடிசுத்திப் பிராணயாம பயிற்சி செய்முறை-பலன்கள்

 நாடிசுத்திப் பிராணயாம பயிற்சி   வியாதிகளைப் போக்குவதற்குக் இந்த ஆசனங்களைப் பயின்று வருவதுடன், முக்கியமாகப் பயிற்சிகள் ஆரம்பிக் கும் போதும் முடிக்கும் போதும், பத்து நிமிடம் வரை நாடி சுத்திப் பிராணாயாமம் செய்து வரவும்.  எல்லா வியாதி களுக்குமே ஆசனப் பயிற்சிகளுடன் அவசியம் நாடிசுத்தி செய்ய வேண்டுமென்பதால் அதனுடன் சேர்க்காமல் தனி யாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. கோபம், பயம், கவலை, மன அதிர்ச்சி இவைகளைப் போக்க எந்த மருந்துகளினாலும் முடிவதில்லை. ஆனால் யோகப் பயிற்சியின் மூலம் இதை அனைத்தையுமே நீக்கி பூரண பலன் கிடைக்க செய்யலாம்.  மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு தனியாக ஓர் இடத்தில் அமர்ந்து ஐந்து நிமிடம் நாடிசுத்தி அல்லது உஜ்ஜயி பிராணாயாமம் செய்வதுடன் ஐந்து நிமிடம் சாந்தி ஆசனமும் செய்ய வேண்டும்.  இந்த ஆசனங்கள் செய்யும் போது மனதை எங்கும் சிதற விடாமல் ஒரு நிலைப் படுத்த வேண்டும்.  மனதாக வியாதி உள்ளவர்கள் ஆரம்பத்தில் தாமே இப்பயிற்சியை செய்வதை விட யோகாசன நிபுணரைக் கலந்து கொண்டு அவரின் ஆலேசனையின் பேரில் உடல் நிலைக்குத் தக்கவாறு பயிற்சிகள் செய்ய வேண்டிய நேர அளவைத் ...

யோகாசன பயிற்சியாளர் கடைப்பிடிக்க வேண்டிய விஷயங்கள்- medical tamizha

 மையோப்பியா - கிட்டப்பார்வை (Myopia) ஒரு மனிதன் குறைந்தது எட்டு மணி நேரமாவது தூங்க வேண்டும். அல்லது ஆறு மணி நேரமாவது தூங்க வேண்டும்.  அவ்வாறு இரவில் தூங்க முடியவில்லையென்றால் அதனை ஈடு செய்யும் வகையில் பகலில் தூங்கும் நேரத்தை சரி செய்ய வேண்டும்.  தூக்க நேரம் குறைவு படும்போது உடல் நலப் பாதிப்பும் ஏற்படச் செய்யும். குளிர்ந்த நீரில் குளிப்பது நல்லது. அதே போல் வெகு நேரம் குளியல் எடுத்துக் கொள்வது நல்லதல்ல. அதை விடுத்து குளியல் என்று அரை மணி நேரமாகத் தண்ணீரில் கிடப்பதும் உடல் நலக்குறைவை ஏற்படுத்தும்.  ஆசனம் செய்பவர்கள் காபி, டீ, கோகோ, குடி, பொடி, புலால் உட் கொள்ளக் கூடாது. பசியெடுக்காது உண்ணல் முதலியவற்றைத் தவிர்க்க வேண்டும்.  பிற மாதரை விரும்புதல், மாதம் இரு முறைக்கு மேல் மனைவியோடு கூடுதல் கூடாது. ஆசனம் செய்பவர்கள் இறுக்கமான உடைகளை அணியக் கூடாது. ஆண்கள் ஜட்டி, மற்றும் பனியன் அணியலாம். பெண்கள் பைஜாமா, சுடிதார் அல்லது நீச்சல் உடையிலும் செய்யலாம்.  ஆசனம் செய்யும் போது ஆரம்பத்தில் கண்களை திறந்து வைத்துக் கொள்ளவும். அப்போதுதான் எங்கே தவ்றாக செய்கிறோம். என்பதை அறிந்து...

யோகாசனம் என்றால் என்ன? அறிமுகம்

 யோகாசனம் - ஓர் அறிமுகம் யோகா என்ற சொல் " யுஜ் " என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும். அதன் பொருள் இணைதல், சேர்தல், ஒருமுகப்படுத்துதல் என்பதாகும். அப்படி ஒன்று சேர்க்கப்படுகிற ஆற்றலை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி யோகா கற்றுக் கொடுக்கிறது. சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுதமுடியும். என்பது போல நல்ல உடல் நலம் இருந்தால் தான் நீண்ட காலம் வாழ முடியும்.   அத்தகையை உடல் உறுப்புகளைக் கட்டுக் கோப்புடன் வைத்திருக்க ஆசனப்பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அதே போல மனத்தூய்மையைப் பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பயிற்சியே யோகம்.  யோகாசன பயிற்சியின் விதிமுறைகள் : அதிகாலை 5 மணிக்குள் விழித்து கொஞ்ச தூரம் சென்று உலாவுதல், மலஜலம் கழித்தல், பல் துலக்குதல் ஆகிய கட மைகளை முடித்த பின்பே பயிற்சியை தொடங்க வேண்டும். ஆசனங்களை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். அல்லது எட்டு மணிக்குள் செய்ய வேண்டும். அதே போல் மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிக்குள் செய்து முடிக்க வேண்டும்.  வீட்டிற்குள்ளானாலும் வெளியிடமானாலும் சுத்தமான காற்றோட்டமுள்ளதாக இருக்கவும். வெறும் செய...