Skip to main content

Posts

Showing posts with the label General knowledge

Google ads

பாம்பு சட்டையை உரிப்பதற்கு காரணம் தெரியுமா?

 பாம்பு அதன் சட்டையை உரிப்பதற்குக்காரணம் அதன் வளர்ச்சியே! பழைய தோல் அதன் வளர்ச்சிக்குத்தடையாக இருக்கும் போது நிகழ்கிறது.  ஒட்டுண்ணித் தொற்றைத் தவிர்ப்பதற்காகவும், தனது ஆரோக்கியம் பேணுவதற்காகவுமே பாம்புகள் தோலை உரிக்கின்றன. பழைய தோலுக்குக் கீழேயே புதுத்தோல் வளர்ந்திருக்கும். தனது தோலை உரிப்பதற்கு முன் பாம்புகள் தண்ணீரில் நீந்தும். அதன் காரணமாக உரியப்போகும் தோல் இளக்கம் கொடுக்கும்.  பின் தன் மூக்கை ஒரு கடினமான பாறையிலோ அல்லது மரத்திலோ வைத்துத்தேய்க்கும் போது கிழியும். பின் பாம்பு அதன் பழைய தோலை விடுத்து லாவகமாக வெளியேறும்.  இளவயதுப் பாம்புகள் இரண்டு வாரத்திற்கு ஒருமுறை தோலை உரிக்கும். பருவ வயதை அடைந்த பாம்புகள் ஆண்டுக்கு நான்கிலிருந்து எட்டு முறை தான் வாழும் சூழலைப்பொறுத்து சட்டையை உரிக்கும். வயதான பாம்புகள் வருடத்திற்கு ஒரு முறை தோலை உரிக்கும்.