Skip to main content

Posts

Showing posts with the label மருத்துவக் குறிப்புகள்

Google ads

குளிர்காலத்தில் கர்ப்பிணிகள் இதையெல்லாம் செய்ய வேண்டும்!

 பெண்கள் கர்ப்பமாக இருக்கும் போது, குளிர்காலம் அச்சுறுத்தல் நிறைந்தது. காய்ச்சல் அல்லது மூக்கில் சளி வருவது பொதுவானது. நீங்கள் தொற்று, இருமல், ஜலதோஷம், வறண்ட சருமம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவீர்கள்.  சுகாதாரத்தை பேணுதல், சோப்புடன் கைகளை தவறாமல் கழுவுதல் மற்றும் கூட்டமாக கூடுவதைத் தவிர்ப்பது ஆகியவை கிருமிகளிலிருந்து பாதுகாப்பதற்கான பொதுவான நடவடிக்கைகளாகும். சமச்சீர் உணவு நோய் எதிர்ப்பு சக்தியை பராமரிக்க மிக முக்கியமானது.

சரிவிகித உணவு என்றால் என்ன ? சிறந்த உணவு எது ? Medical Tamizha

 சிறந்த உணவு என்று சொல்லும்போது குழந்தைகளுக்குத் தாய்ப் பால் தான் குழந்தைப் பருவத்தில் சிறந்த உணவாகிறது. தாய்ப் பாலில் நோய்த் தடுப்புச் சக்தி அதிகம் இருக்கிறது. ஆகவே நோய் வராமல் தடுக்கக் குழந்தைக்குத் தாய்ப் பாலைத் தவிர வேறு சிறந்த உணவு கிடையாது. தாயின் மூலமே குழந்தைக்கு உணவு கிடைப்பதால் தாய் சிறந்த உணவு வகைகளைச் சாப்பிடவேண்டும். தாயின் உணவில் புரதச் சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து தேவையான அளவில் இருந்தால் குழந்தை நல்ல எடையுடன் பிறக்கும். பிறக்கும் குழந்தையும் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியுடன் பிறக்கும். இதையும் படிக்க : குளிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் பிறந்த குழந்தையை மருத்துவமனைகளில் முதலில் எடை போடுகிறார்கள். குழந்தையின் எடை நான்கு கிலோவுக்கு அதிகமாக இருந்தால் தாய்க்குச் சர்க்கரை வியாதி இருக்குமோ என்று சந்தேகித்துச் சோதனை செய்வதுண்டு.  இரண்டு கிலோ எடைக்கும் குறைவாக இருந்தால் குழந்தையை உன்னிப்பாகக் கவனித்துச் சிகிச்சை அளிக்கிறார்கள். குழந்தை பிறந்த பத்து நாட்களில் குழந்தையின் எடை குறையும். உடம்பிலுள்ள நீர்ச் சத்துக் குறைவதால் எடை இழப்பு ஏற்படலாம். இ...

பி.சி.ஜி நோய்த் தடுப்பு பற்றி மருந்து உங்களுக்கு தெரியாத தகவல்கள் -

 காச நோய் என்றும், உருக்கி நோய் என்றும், இராஜ ரோசும் என்றும் தமிழில் பல பெயர்களால் அழைக்கப்படும் டியூபர் குளோசிஸ் டி.பி. நோயைப்பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கிறோம்.  இந்த நோயை க்ஷயரோகம் என்றும்சிலர் அழைக்கிறார்கள். க்ஷயம் என்ற வடமொழிச் சொல்லுக்கு பலியிடுதல், முடித்துவைத்தல் என்று பொருள். சுமார் 102 வருஷங்களுக்குமுன் காச நோய்க் கிருமியை ராபர்ட் காக் என்பவர் கண்டுபிடித்தார். இந்த நோய்க்குப் பலியாகும் மக்களைக் குணப்படுத்த பல விஞ்ஞானிகள், பல்வேறு சிகிச்சை கண்டுபிடித்து வைத்தியம் செய்துவந்தார்கள். முறைகளைக் இந்த நோய் வராமலே தடுப்பது எப்படி என்று இரண்டு மருத்துவ விஞ்ஞானிகள் பாரிசிலுள்ள பாஸ்டர் நிலையத்தில் ஆராய்ச்சி செய்துவந்தார்கள். ஒருவர் மனித டி.பி. நோய்களுக்கு ஆராய்ச்சி செய்தார். இவர் பெயர் கால்மெட் என்பது. இன்னோருவர் மிருகங்களைத் தாக்கும் டி.பி.கிருமிகளை ஆராய்ச்சி செய்து வந்தார். இவர் பெயர் கெரின். இருவரும் பிரெஞ்சு விஞ்ஞானிகள். இவர்கள் கண்டுபிடித்த வாக்சின் மருந்திற்கு நோய்க் கிருமியின் பெயரோடு இந்த இரண்டு பேர்களின் பெயரையும் சேர்த்து வைத்து விட்டார்கள். Bacillus Calmette Gueri...

வலிப்பு நோய்க்கு என்ன முதல் உதவி கொடுக்க வேண்டும் ?-

 ஒருவர் சாலையில் நடந்து செல்கிறார். திடீரென்று கீழே விழுகிறார். வாயிலிருந்து நுரை தள்ளுகிறது. கை கால்களை உதைத்துக்கொள்கிறார்.  கைகளை உதறுகிறார் சில நிமிடங்களில் அப்படியே அமைதியாக இருந்துவிட்டுச் சோர்வுடன் எழுந்து செல்கிறார். இது என்ன நோய்?  இதற்குக் கைகால் வலிப்புநோய் என்று சொல்லுகிறார்கள் டாக்டர்கள். ஆங்கிலத்தில் எலிலெப்சி என்கிறார்கள். இதில் இன்னொரு வகை வலிப்பும் உண்டு. நோயாளி கீழே விழுவதில்லை. சில நிமிடங்களில் விழித்தது விழித்தபடியே இருப்பார்கள் கை கால்களை மட்டும் அசைப்பார்கள். பேச மாட்டார்கள்.  தலையையும் வலது இடது புறங்களில் திருப்பிக்கொண்டே இருப்பார்கள். இதுவும் ஒருவகை வலிப்பு நோய். இது குழந்தைகளுக்கும் வரும். இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் வரும். மூளையில் ஏற்படும் ஒருவகை உறுத்தலே இதற்குக் காரணம் என்று பொதுவாகச் சொல்லலாம். இது போன்ற நோய்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கோ அல்லது பெரியவர்களுக்கோ என்ன உதவி செய்யலாம், எப்படி உதவலாம் என்பதை எடுத்துச் சொல்வதே இந்தக் கட்டுரை. ஒரு நோயாளி வலிப்பால் துடிக்கும்போது வேடிக்கை பார்ப்பவர்கள் தாம் அதிகம். உதவி செய்பவர்க...

எக்ஸ்ரே வால் உடம்புக்கு தீமை உண்டா ?அறியாத தகவல்கள்- Medical Tamizha

 கதிர் வீச்சுக்களின் மூலம் நோயைக் கண்டு பிடிக்கவும். அதைக் குணப்படுத்தவும் கூடிய சிகிச்சை முறையான எக்ஸ்-ரே சாதனத்தைக் கண்டுபிடித்து அதைச் செயல்முறைக்குக் கொண்டுவந்தார் ராஞ்சன் என்ற விஞ்ஞானி.எக்ஸ் ரே கண்டுபிடிக்கப்பட்டுச் சுமார் 90 ஆண்டுகள் ஆகின்றன. உடல் உறுப்புக்களில் கதிர் ஊடுருவும் விதத்தைக் கொண்டு சாதாரண எக்ஸ்ரே அல்லது பிளெயின் எக்ஸ்-ரே என்ற ஒரு முறையும், கதிர் ஊடுருவ முடியாத சூழ் நிலையில் மருந்துகளைப் பயன்படுத்தி உறுப்பின் தோற்றத்தைத் தெளிவாக்கும் இன்னொரு முறையும் ஆகிய இரண்டு முறைகள் நடைமுறையில் இருந்து வருகின்றன. இதில் இரண்டாவது முறை எக்ஸ்-ரேவை (Contrast studies) என்றும் எக்ஸ்-ரே நிபுணர்கள் இனம் பிரித்து வைத்திருக்கிறார்கள். எக்ஸ்-ரே கதிர் சில உறுப்புக்களில் பாய்ச்சப்படும் போது அது தங்கு தடையில்லாமல் வெளியே சென்று விடும். இதனால் உள் உறுப்பின் தோற்ற அமைப்பு கண்ணுக்குத் தெரியாது. ஆகவே என்ன பாதிப்பு ஏற்படிருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியாமல் போய்விடுகிறது. உள் உறுப்பின் தோற்றமும். அந்தப் பகுதியில் தோன்றியிருக்கும் பாதிப்பும் என்னவென்று தெரிந்து கொள்ள சிலவகை மருந்துகளைச் செலுத்த...

ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்-

 நோயாளிகள் என்று சொல்லும் போது நோய் குணமாக அந்த நோயாளி தள்ளத்தக்கது எது? கொள்ளத் தக்கது எது? என்று டாக்டர்கள் கூறுவதுண்டு. அது உணவாகவும் இருக்கலாம். அல்லது சில பழக்க வழக்கங்களாகவும் இருக்கலாம்.  நாட்டு வைத்தியர்கள் இவற்றைப் பத்தியங்கள் என்று கூறுகிறார்கள் மருந்து சாப்பிடுங்காலத்திலும் குணமான பிறகும் சில நாட்கள் சில உணவு வகைகளை உடல் சம்பந்தமான சில பழக்கவழக்கங்களை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று யோசனை கூறுகிறார்கள். பொதுவாக, எல்லா நோய்களூக்கும் இன்னின்னது ஆகாது. என்று சொல்வது வழக்கம். சாப்பிடக் கூடாதவற்றைச்சாப்பிட்டால் நோய் குணமாகாது. மருந்தும் வேளை செய்யாது. எந்த வைத்தியமானாலும் உணவுக் கட்டுப்பாடுகள் உண்டு என்பதால் அவற்றை நோயாளிகள் தெரிந்து வைத்திருப்பது நல்லது அல்லவா?. ' நோய் குணமாக வாயைக் கட்டு, வயிற்றைக் கட்டு என்று நாட்டு வைத்தியர்கள் சொல்லுவது இயற்கை. உணவு வகைகள் சில வயிற்றைப் பாதிக்கின்றன.  உணவே மருந்து, மருந்தே உணவு என்று கிரேக்க மருத்துவத் தந்தை என்று அழைக்கப்படும் ஹிப்போகிரேட் சொல்லுவார். ஆஸ்துமா நோய் பரம்பரையில் இல்லாமலும் வரலாம். எந்தக் காரணத்தால் வந்தாலும் குடிப்ப...

நீரிழிவு நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் ? -

 நீரிழிவு நோய் என்று மொத்தமாக ஒரு நோயைப் பற்றிச் சொன்னாலும் இதில் நூற்றுக்கு மேற்பட்ட நோய் வகைகள் இருப்பதாகச் சித்தவைத்தியர்கள் சொல்லுகிறார்கள்.  இதில் நோயாளிகள் அனுபவிக்கும் நீரிழிவு நோய் எந்த வகையைச் சேர்ந்தது என்பது அவர்களுக்கே தெரியாது. நீரிழிவு நோயைப்போல் தோன்றும் சில நோய்கள் உங்களிடத்தில் இருக்கலாம். குறி குணங்கள் சில, நீரிழிவை ஒத்திருக்கும். இவற்றை ஆராய்ச்சி செய்து கொண்டு காலத்தைக் கடத்த வேண்டாம். முதலில் பெற்றோருக்கு நீரிழிவு நோய் இருந்ததா என்று தெரிந்துகொள்ளுங்கள். இருந்தது என்று அறிந்தால் இந்த நோயைப்பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருங்கள்.  பெற்றோருக்கு இருந்தால் அது பிள்ளைகளுக்கும் வரலாம் என்று வைத்திய சாஸ்திரம் சொல்லுகிறது. முப்பது வயதிற்குப் பிறகு அது தலையை நீட்டும். சிலருக்கு இளவயதிலும் தோன்றலாம். நீரிழிவு நோய் வராமல் இருக்க என்னென்ன செய்ய வேண்டும் ?  1) இளவயதிலிருந்தே உணவு விஷயத்தில் சில கட்டுப்பாடுகளுடன் செயல்பட்டால் இந்த நோயினால் உங்களுக்குத் தொந்தரவு ஏற்படாது. 2)  சர்க்கரை, இனிப்புப் பண்டங்களை, மாவுப் பண்டங்களைக் கூடுமான அளவுக்குக் குறைக்க இப்போதி...

பேதி மருந்து சாப்பிடுவதால் உடம்புக்கு கெடுதலா ? நன்மையா? -

 நாம் உண்ணும் உணவு ஜீரணமாகி அது மலமாக வெளியே தள்ளப்பட 30 அடி நீளமுள்ள பாதையைக் கடக்கவேண்டியிருக்கிறது. இதன் வழியாகத்தான் காலை உணவு, மதியஉணவு, இரவு உணவு ஆகிய மூன்று வேளை உணவுகளும் செல்கின்றன.  அப்போது தேவையான சத்துக்கள் ஆங்காங்கே எடுக்கப்பட்டுச் சக்கையாக வெளியேற்றப்படுகின்றன. உணவு இரைப்பைக்குக் கடக்கச் சுமார் நான்கு மணி நேரம் முதல் ஆறுமணி நேரம் ஆகிறது.  அதன் பிறகு சிறுகுடல், பெருங்குடல், மலக்குடலைச் சென்றடைய 36 மணிநேரம் முதல் 48 மணி நேரம் ஆகிறது. இதன் பிறகுதான் இயல்பான சூழ்நிலையில் வெளியேற்றப்படுகிறது. காத்திருக்கவேண்டும்.  அதுவரையில் நாம் இயற்கையின் தூண்டுதல் ஏற்படும்போது நாமே உணர்ந்துகொண்டு வெளியேற்றும் வேலையைச் செய்கிறோம். நாம் அடிக்கடி சாப்பிடுவதால், அதிக அளவு சாப்பிடுவதால், சற்றுக் கடினமான உணவுகளைச் சாப்பிடுவதால் மலத்தை வெளியேற்றும் வேலைகள் சில, சமயங்களில் தாமதமாகிறது. இன்னும் சிலருக்கு அடுத்த நாள் வெளியேறாமல் அதற்கு அடுத்த நாள் வெளியேறுகிறது. இது தொடரும்போது பேதி மருந்து சாப்பிடலாமா என்ற எண்ணம் உண்டாகிறது. இயல்பான முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்கை முறையில் வெள...

கண் நோய் குணமாக கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் - தமிழ் சித்த மருத்துவம்

 குழந்தைப் பருவத்தில் கண்களைப் பாதிக்கும் நோய்கள் பல. இவற்றுள் கண் சூட்டு நோய் என்று சொல்லப்படும் (Conjunctivitis) கன்ஜங்டிவிடிஸ் என்பது ஒன்று. இது ஒரு தொற்றுநோய். குழந்தைகள் நெருங்கிப் பழகி விளையாடும்போது இந்த நோய் மற்ற குழந்தைகளுக்குப் பரவுகிறது. கண் சூட்டு நோய் விஷக் கிருமிகளால் உண்டாகிறது. விஷக் கிருமிகள் காற்றில் பறந்து வந்து கண்ணில் ஒட்டிக்கொள்கின்றன. ஒரு மெல்லிய சவ்வு விழி வெண்படத்லத்தையும் இமைகளின் உட் பகுதியையும் மூடிக்கொண்டிருக்கிறது. கண் நோய் குணமாக  இந்த சவ்வு விஷக் கிருமிகளால் தாக்கப்படும் போது சவ்வு வீக்கம் அடைகிறது. கண்களில் எரிச்சல் உண்டாகிறது. இமைகள் சிவந்து தடித்துவிடுகின்றன. கண்ணிலிருந்து ஒருவித்த திரவம் வெளிவருகிறது. இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதைப் பீளை என்றும் சொல்லுவார்கள்.  கண் இந்த நோயால் பாதிக்கப்படும் போது கண் கூசும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாது. இதைக் கவனிக்காவிட்டால் விழி வெண் படலத்தில் புண் உண்டாகும். பார்வைகூடப பாதிக்கும். இந்த நோயை ட்ரக்கோமா என்றும், இமை இணைப்படல் நோய் என்றும் சொல்லுவார்கள். குறிப்பாகக் குழந்தைகளை இந்த நோய் தாக்க...

டயாலிசிஸ் சிகிச்சை முறை என்றால் என்ன ?அறியாத தகவல்கள்- Medical Tamizha

டயலிசிஸ் என்றால் என்ன?  ✷ சிறுநீரகம் சீர்குலைந்தால் வயிற்றைக் கழுவிச் சுத்தம் செய்யவேண்டும். அதுபோல் இரத்தத்தைக் கழுவி சுத்தம் செய்யவேண்டும்.  ✷வயிற்றைக் கழுவும் முறையை பெரிடோனியல் டயலிசிஸ் என்று பெயர். ஹீயோ டயலிசிஸ் என்றால். இரத்தத்தை சுத்தம் செய்யும் முறை என்று பொருள். சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இரண்டு வகைகளில் சுத்தம் செய்து சிறுநீரகத்தைச் செயல்பட வைக்கிறார்கள்.  ✷சிறுநீரகம் என்ன காரணங்களால் பாதிக்கப்படுகிறது. என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். கிருமிகளால் சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை தாக்கப்படுகிறது. சில சமயம் மருந்துகளினால் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் பாதிக்கப்படலாம். டயாலிசிஸ் சிகிச்சை முறை   ✷நீரழிவு நோய் இருந்தாலும் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படும். இரத்தக் கொதிப்பு அதிக அளவில் இருந்தாலும், மிதமான அழுத்தம் நீண்ட நாள் இருந்தாலும் பாதிப்பு ஏற்படும். சிறுநீரகப் பாதையில் கல்லடைப்பு இருந்தாலும் கோளாறு உண்டாகும்.  ✷சிறுநீரகத்திலிருந்து பைக்கு வரும் குழாயின் அடிப்பாகம் மூடித் திறக்கும் அமைப்பு உடையது. அது இயங்காமல் திறந்து இருந்த...

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவ...

மலத்தில் ரத்தம் வருவதை தடுப்பது எப்படி?அறியாத தகவல்கள்- Medical Tamizha

  ✷கழிவுப் பொருள்களோடு சில வேளைகளில் இரத்தமும் வெளியேறுவது உண்டு. சாதாரணமாகச் சிரமத்துடன் மலம் கழிக்கும் போது சில துளிகள் இரத்தம் வரலாம்.  ✷இதுவே தொடர்ந்து நடந்தால் உடலுக்கு மட்டுமல்ல,  ✷உயிருக்கும் ஆபத்து. மலத்தில் இரத்தம் வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. இதற்குக் குடல் நோய்களும் ஒரு காரணம்.  ✷குடல் நோய்களில் அமீபியாசிஸ் என்று சொல்லப்படும் அமீபா கிருமிகளால் உண்டாகும் நோயும்.  ✷ஷீகெல்லா என்று சொல்லப்படும் கிருமிகளால் உண்டாகும் நோயும், மலம் கழிக்கும்போது இரத்தம் வரக் காரணமாக இருக்கின்றன.  ✷இந்த நோயாளிகளில் ஒரு நாளைக்குப் பல தடவை மலம் கழிப்பார்கள். மலத்தில் சளியும் இரத்தமும் வரும். மலத்தை சோதித்துப் பார்த்தால் அமீபா கிருமிகளும் ஷீகெல்லா கிருமிகளும் காணப்படும்.   ✷அமீபா கிருமிகளால் உண்டாகும் மலப் போக்கில் இரத்தம் குறைவாகவும் மலம்; அதிகமாகவும் வெளியேறும். துர்நாற்றம் கடுமையாக இருக்கும். மலத்தில் ரத்தம் வருதல்  ✷அமீபா கிருமியால் இன்னோர் ஆபத்தும் உண்டு. இந்தக் கிருமி கல்லீரலுக்குப் போய் அந்த இடத்தில் புண்ணை உண்டாக்கும். இதனால் பலவிதக் கெடுதல்கள் உண்...

மருந்தும் விஷம் ஆகலாம்! உஷாராக இருங்கள்!அறியாத தகவல்கள்- Medical Tamizha

 ஒரு நோயைக் குணமாக்கும் ஒரு மருந்து, நோயாளிகளின் உடலில் பதுங்கி இருக்கும் நோயைக் காலப் போக்கில் தூண்டிவிடும். Drug என்றாலே விஷம் கலந்த மருந்து என்று மருத்துவ அகராதி கூறுகிறது. சில நோய்க் கிருமிகளைக் கொல்ல மருந்தில் விஷம் ஒரு குறிப்பிட்ட அளவு சேர்க்கப் இந்த பட்டிருக்கிறது. சில மருந்து பாட்டில்களில் விஷம் என்று குறிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். மருந்துகளை டாக்டர்களின் சிபாரிசுச் சீட்டு இல்லாமல் சில மருந்துக் கடைகளில் கொடுக்கமாட்டார்கள்.  சில மருந்துகளை டாக்டர்கள் அளவோடு சாப்பிடும்படி ஆலோசனை கூறுவார்கள். காரணம், இந்த மருந்துகளில் விஷம் கலக்கப்பட்டிருக்கும்.  குறிப்பிட்ட தினங்கள் வரை மட்டுமே சில மருந்துகளை டாக்டர்கள் நோயாளிக்குக் கொடுக்கும் படி கட்டளை போடுவார்கள். காரணம், குறிப்பிட்ட தினங்களுக்கு மேல் தொடர்ந்து சாப்பிட்டால் மருந்து விஷமாகிவிடுகிறது. ஆனால் சில நோயாளிகள் டாக்டர் சொல்லும் அறிவுரைகளை,ஆலோசனைகளைக் கேட்பதில்லை. நோய் குணமாகிச் சீக்கிரம் விடுதலை பெறலாம் என்கிற ஆசையில் அதிகமாக,அளவுக்கு மீறிச் சாப்பிட்டு விடுகிறார்கள்.  ஒரு மருந்து, தலைவலி, காய்ச்சல், உடம்புவ...

புற ஊதாக் கதிர்களால் உடலுக்கு ஏற்படும் தீமைகள் என்னென்ன?

 விஞ்ஞான வித்தகர்கள் பல நாடுகளின் சூரியக் கதிர்களை ஆராய்ந்தனர். சூரியனின் கதிர்களில் ஏழுவித நிறங்கள் இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள். ஊதா. அவுரி நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்கள் இருப்பதைக் கண்டார்கள். இதை ஹீலியோ பயாலஜி என்றும் தமிழில் சூரிய ஒளி உயிரியல் ஆய்வு என்றும் கூறுகிறார்கள். உலக நாடுகளின் பிளேக் நோய், காலரா நோய், டி.பி. நோய், இன்புளுயன்சா ஆகிய நோய்கள் பரவி இருந்த கால கட்டங்களை ஆராய்ந்த போது சூரியனில் ஏற்படும் கொந்தளிப்பே இதற்குக் காரணம் என்று உலக நாட்டு விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். தக்க ஆதாரங்களுடன் சான்று. சூரியனிலிருந்து வெளிப்படும் ஊதா நிறக் கதிர் வீச்சுக்கு அல்ட்ரா வயலட் ரேஸ் என்று பெயர். இந்த ஊதா நிறக் கதிர் உச்சி நேரத்தில் வெளிப்படுகிறது. கிழக்கே உதிக்கும் சூரியன் படிப்படியாக உயர்ந்து உச்சிக்கு வரும் நேரத்தில் ஊதா நிறக் கதிர்களை குளித்துப் பாய்ச்சுகிறது. இந்த நேரத்தில் அல்ட்ரா வயலெட் கதிர்கள் பூமியைத் தாக்குகின்றன. உச்சி நேரத்தில் நாம் வெளியே செல்லக் கூடாது. அப்படியே வெளியே செல்வதாக இருந்தால் குடை பிடித்துக் கொண்டு போவது நல்லது. உடல் மூடப்பட்ட...

அலர்ஜி கொப்புளங்கள் என்றால் என்ன? அதை குணப்படுத்தும் வழிமுறைகள் என்னென்ன?

 குழந்தைகளுக்கு எவ்விதக் காரணமும் இல்லாமல் உடம்பில் கொப்புளங்கள் உண்டாவதைப் பார்க்கிறோம். இவை எப்படி வந்தன என்பதை அறிய முடிவதில்லை. டாக்டரிடம் காட்டினால் இது ஒரு வகை அவர்ஜியினால் உண்டாகிறது என்று சொல்லுகிறார். இதற்கு அர்டிகாரியா அழைக்கிறார்கள். என்று மருத்துவப் பெயரிட்டு ஏற்றுக் கொள்ளாத ஒரு பொருள் உடம்பில் சேர்வதால் இது உண்டாகிறது. இதை அலெர்ஜன்கள் என்றும் அழைக்கிறார்கள். உணவு வகைகளில் சில கொப்புளங்களை காற்றில் மிதந்து வரும் மகரந்தப் பொடிகளும் கொப்புளங்களை உண்டாக்கலாம். அல்லது குழந்தைகள் நோய் வாய்ப் படும் போது கொடுக்கப்படும் மருந்து வகைகளும் காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதோ ஒன்றாகவும் இருக்கலாம். இவை உடம்பில் புகுந்து அலர்ஜி விளைவுகளை உண்டாக்கிக் கொப்புளங்களாக வெடிக்கும். பொதுவாகக் குழந்தைகளையே அலர்ஜி அதிகமாகப் பாதிக்கிறது. யுர்டிகாரியா கொப்புளங்கள் என்று ஒரு வகை உண்டு. இது மருந்துகளால் குழந்தைகளின் தோலில் சிவப்பு இளஞ். சிவப்புக் கலந்த புள்ளிகள் முதலில் தோன்றும். பிறகு இதுவே சிறுசிறு கொப்புளங்களாக மாறும். ஓரிடத்தில் தோன்றும். பிறகு வற்றிவிடும். இன்னோர் இ...

கண்களில் ஏற்படும் வெள்ளெழுத்து பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 கண்களில் உட்புறத்தில் பட்டன் மாதிரி வட்ட வடிவில் ஒரு லென்ஸ் இருக்கிறது. இந்த லென்ஸ் தூரத்தில் உள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது விரிந்து கொடுக்கும். கிட்டத்திலுள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது சுருங்கும். இதுதான் இந்த லென்ஸின் வேலை. இதன் மூலம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். எழுத்தைப் பார்க்கிறோம். லென்ஸ் இந்தச் சக்தியை இழந்துவிட்டால் நாம் பார்க்கும் பொருள்கள் மங்கலாகவும், தெளிவில்லாமலும் புகைமண்டலம் போல் வெள்ளையாகவும் தோன்றும். இது நோய் அல்ல. கண் பார்வையில் உண்டாகும் கோளாறு. இதைக் கிராம மக்கள் சாலேசரம் என்றும் வெள்ளெழுத்து என்றும் கூறுகிறார்கள். பிரஸ்பியோப்பியா என்று கண் மருத்துவர்கள் இதைக் குறிப்பிடுவார்கள். வெள்ளெழுத்து என்று இதை ஏன் சொல்லுகிறார்கள்?  படிக்கும் போது புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவில்லாமல் வெள்ளையாகத் தோன்றும். கண்களுக்கு வெகு தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் தான் எழுத்து தெரியும். படிக்க முடியும். அருகில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்தால் சரியாகத் தெரியாது. இதேபோன்று உருவங்களும்...

உடைகளால் வரும் உடல் கோளாறுகள்/அறியாத தகவல்கள்- Medical Tamizha

 வெப்பத்தையும் குளிரையும் சமாளிக்கவும் உடம்பின் உஷ்ணத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும். மனிதனுக்கு உடை தேவைப்படுகிறது. இதனால் பருவ மாறுதல்களுக்கு ஏற்ப உடைகளைத் தைத்துப் போட்டுக் கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்தார்கள் நம் முன்னோர்கள். உடை, உடம்பின் பாதுகாப்பிற்காக என்ற நிலைமாறி உடல் அழகுக்காகவும் தோற்றப் பொலிவுக் காகவும் புதிய புதிய பாஷன்கள் என்ற முறையில் உடை அலங்கார நிபுணர்கள் சில மாறுதல்களைச் செய்தார்கள். இதனால், ஒருபக்கம் நன்மை உண்டானது என்றாலும் இலைமறை காய்போல் சில தீமைகளும் தொடர்ந்துவந்து உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன. இந்தியா வெப்பமான நாடு. இதற்கு மாறுபாடான சீரோஷ்ண நிலைமைகளை உடையவை மேலைநாடுகள். குளிர்ச்சியான நாட்டின் உடை அலங்காரம் வெப்ப நாட்டில் புகுந்தது. காழுத்தை இறுக்கும் காலர், டைப் பழக்கம், பாதங்களை மூடும் ஷூப் பழக்கம் ஆகியவற்றை  இங்குள்ள இந்தியர்கள் பின்பற்றவேண்டிய கட்டாயத்திற்கு வந்த பிறகு, புதிய நாகரிகத்தால் புதிய நோய்கள் சில தோன்றின. குறிப்பாகத் தோல் தொல்லைகள் அதிகமாயின. இரத்த நாளங்கள் அழுத்தப்படுவதால் வலி, வீக்கம், நரம்புக் கோளாறுகள் உண்டாய...

திக்குவாய் பிரச்சனையை சரி செய்வது எப்படி? அறியாத தகவல்கள்- Medical Tamizha

 வாய் உள்ள அத்துணை பேரும் பேசவேண்டிய விஷயங்களைப் பிறர் விளங்கிக் கொள்ளும் படி பேசுவதில்லை.ஆனால், சிலரோ தட்டுத் தடுமாறிப் பேசுகிறார்கள். சொல்லுகிறார்கள். இதை ஸ்டட்டரிங் என்று ஆங்கிலத்தில் இன்னும் சிலர் சொற்களையோ, வாக்கியங்களையோ முழுவதும் சரியாக உச்சரிக்க முடியாமல் விழுங்கிவிழுங்கிப் பேசுகிறார்கள். இதை ஸ்டாமரிங் என்று ஆங்கிலத்திலும் திக்கித் திக்கிப்  பேசுதல் என்று தமிழிலும் சொல்லுகிறார்கள். தமிழ்நாட்டின் சில கிராமங்களில் இதைக் கொன்னை வாய்ப் பேச்சு என்று கூறுவர். இந்தியாவில் திக்குவாய்ப் பேச்சாளர்கள் சுமார் ஒருகோடிப் பேர் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள். இது ஒரு நோயா? இல்லை. சிலருக்குச் சில காலங்களில் இப்படி ஒரு குறைபாடு ஏற்படுகிறது. இது ஒன்றைத் தவிர இவர்களின் உடலில் வேறு எவ்விதக் குறைபாடும் இருப்பதில்லை. இந்தக் குறைபாட்டையும் இவர்கள் வாயைத் திறந்து பேசும் போதுதான் அறிய முடிகிறது. பெண்களைவிட ஆண்களையே இந்தக் குறைபாடு அதிகமாகச் சோதித்துவிடுகிறது. மேலும் குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களைத்தான் இந்தக் குறைபாடு அதிகமாகப் பாதிக்கிறது. குழந்தைப் பருவத்தில் கண்ணால் கண்ட...

மருந்து விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியவை!

 டாக்டருக்கும் நோயாளிக்கும் இடையில் மருந்து விற்பனையாளர் ஒருவர் இருக்கிறார். இவர் விற்பனை செய்யும் மருந்தை வாங்கி நோயாளி சாப்பிடுகிறார். மருந்து விற்பனையாளருக்கு மேலே, மருந்தை உற்பத்தி செய்பவர் இருக்கிறார்.  இவர் தயாரித்து அனுப்பும் மருந்தை, மருந்துக் கடைக்காரர்கள் விற்பனை செய்கிறார்கள். மருந்து வியாபாரம் ஓர் இலாபகரமான வியாபாரம் என்று இப்போது இந்தத் தொழிலில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள். இதனால் போலி மருந்துகளின் நடமாட்டம் இந்தியாவில் பெருகிவருகிறது என்ற அச்சம் தரும் செய்திகள் தினசரித் தாள்களில் படிக்கிறோம். நோயிலிருந்து விடுதலை பெற எந்தவிலை கொடுத்தும் மருந்துகளை வாங்கும் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதோடு. சீக்கிரமாகவே இந்த உலகத்தை விட்டுப் போய் விடுகிறார்கள்.  மருந்து விற்பனையில் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள் சட்டத்தின் சந்துகளில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசும் அதிகாரிகளும் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களுக்கு வருவோம்:  ஒரு நோயாளி, டாக்டரிடம் சிகிச்சை செய்து கொள்ளும் போது டாக்டர் எழுதிக் கொடுக்கும் ...

குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பதை தடுப்பது எப்படி?

 குழந்தைகளைப் பாதிக்கும் எத்தனையோ தொந்தரவுகளில் Bed wetting என்று சொல்லப்படும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் தொந்தரவும் ஒன்று. சாதரணமாக குழந்தைகள் இரண்டு வயது முதல் நான்கு வயதிற்குள் சிறுநீர் மற்றும் மலத்தைக் கட்டுப் படுத்தும் சக்தியைப் பெற்று விடுகிறார்கள். ஆனால் ஒருசில குழந்தைகள் சில நேரங்களில் தங்களைக் கட்டுப் படுத்த முடியாமல் படுக்கையில் சிறுநீர், கழித்துவிடுகிறார்கள். இது பெற்றோருக்குத் தர்மசங்கடமான நிலைமையை ஏற்படுத்திவிடுகின்றன. பிள்ளையைப் பெற்றுவிட்டால் போதுமா? அதைப் பேணி வளர்க்க வேண்டும் தெரியுமா? என்று பெரியவர்கள் சொல்லுவார்கள். பேணி வளர்ப்பதில் குழந்தைக்கு " டாய்லட் டிரைனிங்" என்று சொல்லப்படும் சிறுநீர், மலம் கழிக்கும் பயிற்சியும் ஒன்று. குறிப்பிட்ட நேரத்தில் குழந்தைகளுக்கு மலம் சிறுநீர் கழக்கும் பழக்கத்திற்குத் தாய்தான் உதவ வேண்டும். பொதுவாக இடுப்புக் கீழே உள்ள உறுப்புக்கள் தன்னிச்சையாகச் செயல்படுவதில்லை. வயிறு, குடல், சிறுநீரகம் இவை எல்லாம் பழக்கத்திற்கு அடிமையான உறுப்புக்கள். குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட செயலைச் செய்யும்படி பழக்கப் படுத்தினால் அந்தப் பழக்...