Skip to main content

Google ads

பி.சி.ஜி நோய்த் தடுப்பு பற்றி மருந்து உங்களுக்கு தெரியாத தகவல்கள் -

 காச நோய் என்றும், உருக்கி நோய் என்றும், இராஜ ரோசும் என்றும் தமிழில் பல பெயர்களால் அழைக்கப்படும் டியூபர் குளோசிஸ் டி.பி. நோயைப்பற்றி நாம் தெரிந்து வைத்திருக்கிறோம். 

இந்த நோயை க்ஷயரோகம் என்றும்சிலர் அழைக்கிறார்கள். க்ஷயம் என்ற வடமொழிச் சொல்லுக்கு பலியிடுதல், முடித்துவைத்தல் என்று பொருள்.

சுமார் 102 வருஷங்களுக்குமுன் காச நோய்க் கிருமியை ராபர்ட் காக் என்பவர் கண்டுபிடித்தார். இந்த நோய்க்குப் பலியாகும் மக்களைக் குணப்படுத்த பல விஞ்ஞானிகள், பல்வேறு சிகிச்சை கண்டுபிடித்து வைத்தியம் செய்துவந்தார்கள். முறைகளைக்

இந்த நோய் வராமலே தடுப்பது எப்படி என்று இரண்டு மருத்துவ விஞ்ஞானிகள் பாரிசிலுள்ள பாஸ்டர் நிலையத்தில் ஆராய்ச்சி செய்துவந்தார்கள். ஒருவர் மனித டி.பி. நோய்களுக்கு ஆராய்ச்சி செய்தார். இவர் பெயர் கால்மெட் என்பது. இன்னோருவர் மிருகங்களைத் தாக்கும் டி.பி.கிருமிகளை ஆராய்ச்சி செய்து வந்தார். இவர் பெயர் கெரின்.

இருவரும் பிரெஞ்சு விஞ்ஞானிகள். இவர்கள் கண்டுபிடித்த வாக்சின் மருந்திற்கு நோய்க் கிருமியின் பெயரோடு இந்த இரண்டு பேர்களின் பெயரையும் சேர்த்து வைத்து விட்டார்கள். Bacillus Calmette Guerin என்று. 

இதன் முதல் எழுத்துக்களைக்கொண்டே B.C.G மருந்திற்குப் பெயர் வைத்துவிட்டார்கள். டாக்டர் கால்மெட் டாக்டர் கெரின் கண்டுபிடித்த டி.பி. தடுப்பு மருந்து இன்று உலகம் பூராவும் ஊசிமருந்தாகப் பயன்பட்டுவருகிறது.

இந்த இரு விஞ்ஞானிகளும் கண்டுபிடித்த தடுப்பு மருந்தை ஆரம்பத்தில் வாய் மூலம் கொடுத்துவந்தார்கள். பிறகு ஊசிமருந்தாக உடலில் செலுத்தி வந்தார்கள். இந்த ஊசி மருந்தைச் செலுத்தினால் டி.பி. வருவதில்லை. என்பதை முதலில் மிருகங்களுக்குச் குத்திப் பரிசோதனை செய்துபார்த்தார்கள். 

மிருகங்களுக்கு டி.பி. நோய் வரவில்லை. பிறகு 1912இல் 664 குழந்தைகளுக்கு ஊசி போட்டார்கள். குழந்தைகளுக்கு டி.பி. வரவில்லை. ஆரம்பத்தில் பிரான்ஸ் நாட்டில் மட்டும் டி.பி.தடுப்பு ஊசியைப் பயன்படுத்தினார்கள். நல்ல பலன் கிடைத்தது. பிறகுதான் உலக நாடுகளுக்கு இந்த மருந்து பரவியது.

இதற்கிடையில் 1930இல் ஜெர்மனியிலுள்ளலூபெக் நகர ஆராய்ச்சிக் கூடத்தில் இந்த மருந்து தயாரிக்கப்படும் போது ஒரு தவறு நடந்துவிட்டது. ஜெர்மன் நாட்டில் இந்த மருந்து ஏற்றப்பட்ட 60 குழந்தைகள் இறந்து விட்டனர். இந்தச் சம்பவத்தை 'டிராஜடி ஆஃப் லூபெக்' என்று இன்றும் ஜெர்மன் நாட்டுச் சரித்திர ஏடுகளில் குறித்து வைத்திருக்கிறார்கள்.

லூபெக் ஆராய்ச்சிக் கூடத்தில் நடந்த தவறு என்ன? டாக்டர் கால்மெட், டாக்டர் கெரின் கண்டுபிடித்த பி.சி.ஜி. மருந்து என்ன? என்பதைத் தெரிந்துகொண்டால் இந்தத் தவறு புரியும்.

 டாக்டர்கள் இருவரும் மிருகங்களுக்கு டி.பி.யை உண்டாக்கும் கிருமியைத் தனியாகப் பிரித்து எடுத்து அதில் மாட்டின் பித்த நீரோடு கலந்து, அதில் கிளிசரின் சேர்த்து டி.பி. கிருமிகளை வளரவிட்டார்கள். கடைசியில் பலம் குன்றிய டி.பி. கிருமி உண்டானது. இதை வாக்சினாக (தடுப்புப் பால்) தயாரித்து வெளியிட்டார்கள்.

ஆனால் ஜெர்மனியிலுள்ள லூபெக் ஆய்வு கூடத்தில் பலம் குன்றிய டி.பி. கிருமிகளுக்குப் பதிலாக, சக்தியுள்ள, வீரியம் உள்ள டி.பி. கிருமிகளை ஞாபக மறதியாகக் கலந்து பி.சி.ஜி. ஊசி மருந்து தயாரித்துக் குழந்தைகளுக்குப் போட்டுவிட்டார்கள். இதன் விளைவுதான் அறுபது குழந்தைகளின் உயிர்பலி.

 ஊசி போடுமுன் சோதனை செய்து பிறகு ஊசி போட்டிருந்தால் இந்தத் துயரச் சம்பவம் நடந்திருக்காது. இந்த சம்பவத்திற்குப் பிறகு பி.சி.ஜி. மருந்து தயாரித்த இரு டாக்டர்களுக்கும், இந்தத் தடுப்பு மருந்திற்கும் எதிர்ப்பு கிளம்பியது. இதற்கு டாக்டர் கால்மெட், டாக்டர் கெரின் விளக்கம் கொடுத்த பிறகு இந்த மருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டது.

1948இல் அகில உலக பி.சி.ஜி. காங்கிரஸ் நடந்தது. இதில் 300 பிரதிநிதிகள் கலந்துகொண்டு தடுப்பு ஊசி அபாயமில்லாதது, நோய்தடுக்கும் சக்தி இதற்கு உண்டு என்று சான்று கொடுத்தார்கள். இப்போது உலகில் உள்ள எல்லா நாடுகளும் பி.சி.ஜி. மருந்தை ஏற்றுக்கொண்டு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை உபயோகித்து டி.பி. வராமல் தடுத்து வருகிறார்கள்.

டி.பி. நோய்க் கிருமிகளை அழிக்கும் ஆற்றல் பி.சி.ஜி. மருந்துக்கு உண்டு என்று அறிந்து உலக நாடுகளின் சுகாதார ஸ்தாபனம் சென்னையில் பி.சி.ஜி. தடுப்பு மருந்து தயாரிக்கும் நிலையத்திற்கு நிதி உதவி செய்து வருகிறது.

பி.சி.ஜி. பயன்படுத்தாத நாடுகளில் 4 மடங்கு அதிகமான டி.பி. பரவிவருகிறது என்பதை ஒரு கணக்கெடுப்பின் மூலம் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்தியாவில் ஐந்து இலட்சம் மக்கள் டி.பி. நோயினால் இறக்கிறார்கள் என்ற நிலை இருந்தது. இப்போது அந்த எண்ணிக்கை இந்தத் தடுப்பு முறையால் குறைந்துவருகிறது.

இயற்கை முறையில் டி.பி. வராமல் தடுக்கச் சீரான உணவும், சூரிய ஒளியும், காற்றோட்டமும், உடற்பயிற்சியும் தேவை. செயற்கை முறையில் டி.பி. வராமல் தடுக்கப் பி.சி.ஜி.யை விட்டால் வேறு தடுப்பு மருந்து இல்லை என்றே சொல்லலாம்.

இது ஒரு காப்பு மருந்து. இந்த மருந்தின் விலை மலிவு. ஆனால் செயல் திறன் அதிகம். எனவே உலகம் ஏற்றுக் கொண்ட இந்த மருந்தை நாமும் ஏற்று உருக்கி நோயை ஒழிக்கவேண்டும்.

Comments

Popular posts from this blog

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்

ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன?

   ஹோமியோபதி மருத்துவ முறை என்றால் என்ன ஹோமியோபதி மருத்துவம் என்றால் என்ன? ஹோமியோபதி மருத்துவம் என்பது 200 ஆண்டுகளுக்கும் மேலாக நடைமுறையில் உள்ள சிகிச்சைமுறைக்கான ஒரு முழுமையான அணுகுமுறையாகும். இது லைக் க்யூர்ஸ் லைக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டது, அதாவது ஒரு ஆரோக்கியமான நபருக்கு அறிகுறிகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பொருளை உடல்நிலை சரியில்லாத ஒருவருக்கு இதே போன்ற அறிகுறிகளுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தலாம். ஹோமியோபதியில் பயன்படுத்தப்படும் மருந்துகள் தாவரங்கள், தாதுக்கள் மற்றும் விலங்குகள் போன்ற இயற்கை மூலங்களிலிருந்து பெறப்படுகின்றன, மேலும் அவை மிகக் குறைந்த அளவுகளில் நீர்த்தப்படுகின்றன. ஹோமியோபதியின் முக்கிய கருத்துக்களில் ஒன்று தனிப்படுத்தல் ஆகும். ஹோமியோபதிகள் ஒவ்வொரு நபரின் அறிகுறிகளும் தனிப்பட்டவை என்றும் அதற்கேற்ப சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் என்றும் நம்புகிறார்கள். எனவே, மருந்துகளை பரிந்துரைக்கும் போது, ஹோமியோபதி நோயாளியின் ஆரோக்கியத்தின் உடல் அறிகுறிகளை மட்டுமல்ல, உணர்ச்சி மற்றும் மன அம்சங்களையும் கணக்கில் எடுத்துக்கொள்கிறார். சில விமர்சகர்கள் ஹோமியோபதி மருந்துகள் அவற்றின் மிகவும