Skip to main content

Google ads

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன.

இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன.

ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம்.



ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள்.

முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று.

முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது.

மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது.

சில சமயங்களில் அரிப்பு ஏன் ஏற்படுகிறது என்கிற காரணத்தைக் கண்டுபிடிப்பதே கஷ்டம் என்றும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

இந்தத் தொல்லைகளால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறவர்கள் குழந்தைகள். குறிப்பாகப் பெண் குழந்தைகள்.

ஜீரணக் கோளாறுகளால் பாதிக்கப்படும் ஆண்களும், பெண்களும், வயதானவர்களும் இந்த அரிப்புத் தொல்லைகளுக்கு ஆளாகிறார்கள். சிறுவர்கள்-சிறுமிகள் அசுத்தமான பண்டங்களை வாங்கிச் சாப்பிடுகிறார்கள்.

இதனால் வயிற்றுப் பூச்சிகள் குடல் வழியாக ஆசன வாய்க்கு வந்து ஒருவிதத் தினவை உண்டாக்குகின்றன. மலத்தோடு சேர்ந்துள்ள கொக்கிப் புழுக்கள் ஆசனத்தில் குடைச்சலை உண்டாக்குகின்றன. 

அவர்களின் விரல்களில் பூச்சிகள் ஒட்டிக் கொண்டுவிடுகின்றன. கைகளைச் சுத்தமாகக் கழுவாமல் சாப்பிடுகிறார்கள். இதனால் பூச்சிகள் வாய் வழியாக வயிற்றுக்குள் சென்று நிரந்தரத் தொல்லையைக் கொடுக்கின்றன.

சொரிந்து பெண் குழந்தைகளுக்கு ஆசன உறுப்பும், பெண் உறுப்பும் அருகில் அமைந்திருப்பதால் அரிப்புத் தொல்லை 

இன்னும் அதிகமாகிறது. வயிற்றுப் பூச்சிகள் சிறுநீர் உறுப்புக்குத் தாவுகின்றன. இதனால் இரட்டைத் தொந்தரவுகளை அனுபவிக்கிறார்கள்.

 குழந்தைகள் செல்லப் பிராணிகளான நாய், பூனை இவற்றோடு கொஞ்சி விளையாடும் போது பிராணிகளிடத்தில் உள்ள குடல் பூச்சிகள் அவர்களுக்கு ஒட்டி அதுவே தொந்தரவைத் தொடர்கதையாக்கி விடுகின்றன. இதனால் குழந்தைகள் அரிப்புத் தொல்லைக்கு நிரந்தரமாக ஆளாகிறார்கள்.

குழந்தைகள் தெருவோரங்களில் புழுதி மேடுகளில் மலம் கழிப்பதால் மண்ணோடு கலந்துள்ள பூச்சிகள் குழந்தைகளை அதிகமாகப் பற்றிக் கொண்டு பல்வேறு நோய்களுக்குப் பலியாகிறார்கள்.

குழந்தைகளின் கைவிரல்களைச் சுத்தமாக வைத்திருக்கவும், விரல் நகங்களை வெட்டிவிட்டு அழுக்கு சேராமலும் பாதுகாப்பது பெற்றோர் கடன்.

பெரியவர்கள் குடல் பூச்சிகளால் பாதிக்கப்படுவதற்குக் காரணம் குடலைச் சுத்தமாக வைத்துக் கொள்ளாமல் இருப்பதே.

இதனால் மலச்சிக்கல், மூல நோய், பிஸ்டுலா போன்ற தொந்தரவுகள் உண்டாகின்றன.

கிராமப் பகுதிகளில் வாழ்கிறவர்கள்தாம் அரிப்பு நோய்க்கு அதிகமாக உள்ளாகிறார்கள். கழிப்பிடங்கள் சுத்தமாக இருப்பதில்லை.

பலர் மலம் கழித்த இடங்களில் மேலும்மேலும் மலம் கழிப்பதால் கக்கூஸ் பத்து என்ற நோயால் பாதிக்கப்படுகிறார்கள். குளம் குட்டை என்று தேங்கிய தண்ணீர்களில் கைகால் கழுவுகிறார்கள்.

திறந்த சதைப் பகுதி, ஆசனம் ஆதலால் நோய் எளிதில் பற்றிக் கொள்கிறது. அரிப்புத் தொல்லை அதிகமாகிறது. இதற்கு மலப் பரிசோதனை செய்துகொண்டு பூச்சித் தொந்தரவு என்று கண்டால் பூச்சிகளை ஒழிக்கும் மருந்துகளைச் சாப்பிட வேண்டும்.

மலம் கழித்த பிறகு சுத்தமாகக் கழுவி இரண்டு கரண்டி வாசலைன் 50 சொட்டு கார்பாலிக் ஆஸிட் குழைத்து ஆசனப் பகுதியில் தடவிவிட வேண்டும். அரிப்பு அடங்கும். கைகளைச் சுத்தமாகச் சோப்புப் போட்டுக் கழுவ வேண்டும்.

இதனால் அரிப்புத் தொந்தரவு உள்ளவர்கள் மலச் சிக்கலை ஒழிக்க லிக்விட் பாரபின் சாப்பிடலாம். இது எல்லா மருந்துக் கடைகளிலும் கிடைக்கும்.

புளிப்பு ஏற்படாமல் இருக்க மில்ச் ஆப் மெக்னீஷியா சாப்பிடலாம்.அதைவிட உணவோடு சுண்டை வற்றல், வேப்பம்பூ துவையல் ஆகியவற்றை அடிக்கடி சேர்த்துக் கொண்டு வந்தால் பூச்சித் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம்.

கசப்புச் சுவையை நாம் ஒதுக்கித் தள்ளுவதால் நமக்கு எத்தனையோ பாதிப்புக்கள் உண்டாகின்றன.

அரிப்பை அடியோடு ஒழிக்க கசப்புச்சுவை நிறைந்த உணவுகளைச் சாப்பிடுங்கள்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...