இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.
மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன.
ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை.
இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது.
நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம்.
ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு.
ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணைக்கப்பட்டு நோயாளியின் ஆசனத் துவாரத்தில் செலுத்தப்படுகிறது. பாத்திரத்தில் தண்ணீர் அல்லது வெந்நீர் அல்லது மருந்து கலந்த நீர் ஊற்றப்பட்டு அந்த நீர் மலக் குடலுக்கு வர ஏற்பாடு செய்கிறார்கள்.
இதனால் அடிக் குடலில் தங்கியுள்ள மலம் கரைந்து வெளியேறுகிறது. இதுவே எனிமா சிகிச்சை முறை.இந்தத் தண்ணீர் அடிக் குடலைத் தாண்டிப் பெருங்குடலுக்குப் போவதில்லை.
அப்படியே அதிகமாக நீர் போனாலும் அதனால் பாதிப்பு ஒன்றும் ஏற்படுவதில்லை. எனிமா சிகிச்சை முறை இயற்கையான சிகிச்சை அல்ல.செயற்கை சிகிச்சை.
ஆகவே இதை பழக்கத்திற்குக் கொண்டு வரக்கூடாது அடிக்கடி எனிமா எடுத்துக் கொள்வதும் உடலுக்கு நல்லது அல்ல.
எனிமாக்களில் ஆறு வகை உண்டு.
சாதாரணமாகத் தண்ணீரை ஊற்றிக் குழாய் மூலம் பீச்சுவது ஒரு வகை.
இரண்டாவது வகை, வெந்நீரை ஊற்றி மலக்குடலைச் சுத்தம் செய்வது. சாதாரணச் சூடு இதற்குப் போதும், காய்ச்சல், வயிற்று வலி, வாயுக் கோளாறு இருந்தால் மிதமான வெந்நீர் எனிமா நல்லது. நீரின் வெப்பத்தால் அணுக்கள் விரிவடைந்து இரத்தம் ஓட்டம் துரிதடைந்து மலத்தை வெளியே கொண்டு வந்துவிடும்.
கடு நீர் எனிமா கொடுக்க நல்ல அனுபவம் பெற்ற வர்கள் மட்டுமே கையாள வேண்டும்.
அதிகச் சூடு இருந்தால் அது இதயத்தைப் பாதிக்கும். கடுமையான வயிற்று வலி, வாயுத் தொல்லை, சிறுநீரகக் கோளாறு, இடுப்புவலி உள்ளவர்களுக்குச் சுடுநீர் எனிமா கொடுக்கப்படுகிறது.
டானிக் எனிமா என்று ஒரு வகை உண்டு. பலவீன மானவர்களுக்கு டானிக் கொடுப்பதுபோல இரண்டு அல்லது மூணு அவுன்ஸ் தண்ணீரை ஓரடி உயரத்தில் வைத்துக் கொண்டு மெல்லமெல்ல இரவு நேரங்களில் கொடுக்கப்படும். இதனால் காலையில் மலம் வெளியேறும். கெட்டினாய மலம் உள்ளவர்களுக்கு இந்த முறை எனிமா நல்லது.
மெடிக்கேட்டட் எனிமா, என்று ஒரு வகை உண்டு.வயிற்றில் பூச்சிப் புழுத் தொல்லை இருந்தால், தோல் சம்பந்தமான நோய் இருந்தால்,டைபாய்டு ஜூரம், சின்னம்மை நோய்கள் இருந்தால் தண்ணீரில் வேப்பிலையைப் போட்டுக் கொதிக்கவைத்து ஆறவைத்துப் பிறகு கொடுக்கிறார்கள். உப்பு அல்லது எலுமிச்சம் பழச் சாறு அல்லது கிளிசரின் ஆகியவற்றுள் ஏதாவது ஒன்றைத் தண்ணீருடன் கலந்து எனிமா கொடுப்பார்கள்.
இதனால் பூச்சிப் புழுக்கள் செத்துவிடும். நோய்களும் தணிந்துவிடும்.
ஆசனக் குழாய் சிலருக்கு பலவீனம் அடைந்து விடலாம். இதனால் ஆசனக் குழாய்க்கு வலுவூட்ட ஒரு வகை எனிமா கொடுக்கப்படுகிறது.
குளுகோஸ், பழச்சாறு ஆசனக் குழாய் மூலம் செலுத்தி எனிமா கொடுப்பதால் இதை ரெக்டம் பீஃடிங் எனிமா என்றும் சொல்லுகிறார்கள்.
வாய்மூலம் உணவு செல்லாதவர்களுக்கு முறையைக் கையாளுகிறார்கள்.
இந்த எனிமா யாருக்குக் கொடுக்கக் கூடாது என்று விதி படுக்கையை விட்டு எழுந்திருக்க முடியாதவர்களுக்கு உள்ளது.
டாக்டர்கள் எனிமா கொடுப்பதில்லை.ஆசன வாயில் புண் இருந்தால் கொடுப்பதில்லை. மன நோயாளிகளுக்குக் கொடுப்பதில்லை.
இவை தவிர, காய்ச்சல் சளித் தொல்லை உள்ள நேரங்களில் தண்ணீர் எனிமா கொடுப்பதில்லை. எனிமா சிகிச்சை மகப்பேறு பெறும் தாய்மார்களுக்கு மட்டுமின்றிப் பல்வேறு பிரிவினருக்கும் அது பயன்படுகிறது.
என்பது பலர் அறியாத உண்மை. நோய்களைக் குணப்படுத்தும் எத்தனையோ சிகிச்சை முறைகளில் எனிமா சிகிச்சையும் ஒன்று,
இதைக் கவனத்தோடு செய்தால் மலச்சிக்கல், வயிற்று வலி, பேதி, அஜீரணக் கோளாறுகளை அடியோடு போக்கிவிடலாம்.
Comments
Post a Comment