செவித்துணைக் கருவிகள் மனிதர்களுக்கு ஏற்படும் உடல் குறைகளை, உடல் உறுப்புக்களில் உண்டாகும் ஊனங்களைச் சரிசெய்து மீண்டும் இயங்கவைக்க விஞ்ஞானிகள் புதியபுதிய கருவிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து வருகிறார்கள். கண்பார்வைக் குறைவானவர்களுக்குக் கண்ணாடியும், வாய்ப் பற்கள் இழந்தவர்களுக்குச் செயற்கைப் பற்களும். கை, கால் இழந்தவர்கள் நட மாட, செயல்பட செயற்கைக் கை, கால் ஊன்றுகோல் போன்ற துணைக் கருவிகளைத் தயாரித்து உடலோடு பொருத்தி ஊனங்களை, குறைகளை ஓரளவு நிவர்த்தி செய்து வருகின்றனர். இதுபோல் காது கேளாதவர்களுக்கும் செவித் துணைக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுக் காதுகளில் பொருத்தி மற்றவர்களைப் போல் அவர்களும் வாழ வழி செய்து கொடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள், மனிதனுக்கு எந்தக் குறை இருந்தாலும் அதைப் போக்க விஞ்ஞானம் அற்புதமான செயற்கை உறுப்புகளை உருவாக்கிச் சாதனைகள் பல செய்து வருகிறது. செவித் துணைக் கருவிகளைப் பொருத்திக் கொள்வதில் செலவு கொஞ்சம் அதிகம் என்பதைத் தவிர மனிதர்களின் மனக் குறைகள் இப்போது குறைந்து கொண்டு வருகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது. ஒலிகளைக் கிரகிக்கு...
Google Ads
Health tips, natural medicine tips, health consultations,tamil health medical tips, இயற்கை மருத்துவ குறிப்புகள், உடல் ஆரோக்கிய குறிப்புகள், அழகு குறிப்புகள்,