Skip to main content

Google ads

நீரிழிவு நோய் என்றால் என்ன ? அதன் பாதிப்பு மற்றும் தடுக்கும் வழிமுறை - Medical Tamizha

 சில நோய்களுக்கு உலகப் புகழ் உண்டு. நீண்ட சரித்திரமும் உண்டு. அப்படித் தோன்றிய நோய்களுள் ஒன்று நீரிழிவு.

கி.பி. இரண்டாம் நூற்றாண்டில் இந்த நோயைக் கண்டு பிடித்து அதற்குப் பெயரிட்டவர்கள் கிரேக்கர்கள். இதற்கு  ( டயாபெடிஸ் மெலிட்டஸ்) என்று பெயர் வைத்தவர் அரிடாய்ஸ் என்ற கிரேக்கத் தத்துவஞானி.

டயாபெடிஸ் என்பது கிரேக்கப் பெயர். இதிலிருந்து நீரிழிவு நோய் நீண்ட காலப் புகழ்பெற்ற நோய் என்று தெரிகிறது.

உலகத்தில் 25 கோடி மக்கள் இந்த நீரிழிவால் தூண்டப்பட்டு இப்போது இன்சுலின் என்ற மருந்தால் ஓரளவு நோயைக் கட்டுப் படுத்திக்கொண்டு வாழ்கிறார்கள்.

நீரிழிவு என்றால் என்ன என்பதை இப்போது எல்லோரும் தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு வீட்டுக்கு வீடு இந்த நோயாளிகள் அதிகமாகிக் கொண்டு வருகிறார்கள். சர்க்கரை நோயால் பாதிக்கப் படாத குடும்பங்கள் அபூர்வம். 

இரைப்பைக்குப் பின்னால் நாக்கு வடிவத்தில் ஓர் உறுப்பு இருக்கிறது. இந்த உறுப்பு பைக்குக் கனையம் (ஆங்கிலத்தில் பாங்கிரியாஸ்) என்று அழைக்கிறார்கள்.

இந்த உறுப்பிலிருந்து இரண்டு வகைத் திரவங்கள் சுரக்கின்றன. ஒன்றிற்குப் பெயர் கணைய நீர். இதைக் கைமோட்ரைப்சின் என்று ஆங்கிலத்தில் அழைக்கிறார்கள். இன்னொன்றை இன்சுலின் என்று அழைக்கிறார்கள்.

ஜீரண வேலை நடக்கும்போது மாவுச் சத்து, சர்க்கரை, கொழுப்புச் சத்து ஆகியவற்றைப் பிராண வாயுச் சக்தியால் எரிப்பதும், எரிக்க முடியாதவற்றைச் சேமித்து வைப்பதும் இன்சுலின் என்ற திரவத்தின் முக்கிய வேலை.


இந்த உடலாகிய அடுப்பில் சூடு இருக்கவேண்டும் என்றால் அதற்கு இன்சுலின் என்ற நெருப்புத் தேவை. ஆகவே இன்சுலின் ஓர் இன்றியமையாத சுரப்பு நீர்.

கணையத்தில் பத்தாயிரத்திற்கும் அதிகமான உயிரணுக்களின் தொகுதிகள் இருக்கின்றன. இந்த உயிரணுக்களுக்கு ஊட்டம் தருவது இன்சுலின். கணையத்தில் இன்சுலின் உற்பத்தி ஆவது குறைந்தால் அல்லது உற்பத்தி ஆவது தடைப்பட்டால் பல்வேறு கோளாறுகள் உண்டாகின்றன.


அவற்றுள் மிகமிக முக்கியமான தொல்லை நீரிழிவுத் தொல்லை, அதாவது, சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகமாக சேர்ந்து சிக்கரை உண்டாக்கிவிடுகிறது. உடல் இயக்கத்திற்குத் தேவையான சக்தியைப் பறித்துவிடுகிறது.

நீரிழிவு நோயின் கை ஓங்கி விட்டால் நீரிழிவு நோயாளியைக் கோமாவில் தள்ளிவிடுகிறது. 

இதற்கு முடிவுகட்ட ஆராய்ச்சிகள் நடந்தன. அதன் பயனாய். இந்தக் கொடுமையிலிருந்து மனிதனைக் காப்பாற்றக் கண்டுபிடிக்கப்பட்ட அற்புத மருந்துதான் இன்சுலின்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைத்து நீரிழிவைக் கட்டுப்படுத்த செயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட மருந்து இது.

இயற்கையாகச் சுரக்கவேண்டிய இன்சுலின் குறைந்தால், அல்லது சுரக்காமல் போனால் செயற்கை முறையில் அதைத் தயாரித்து ஊசிமூலம் உடம்பில் செலுத்தி உடம்புக்கு இயக்கத்தையும் சக்தியையும் அளித்து மனிதனை நடமாடவைக்கிறது.

1921 இல் பிரடிரிக் கிராண்ட் பாண்டிங் என்ற மருத்துவ ஆராய்ச்சியாளரும், சார்லஸ் எச்பெஸ்ட் என்ற மருத்துவ நிபுணரும் இணைந்து இன்சுலின் மருந்தைக் கண்டு பிடித்து 1923 இல் மக்களின் நீரிழிவைக் கட்டுப் படுத்த உபயோகித்தனர்.

இந்த மருந்து கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, நீரிழிவு நோயாளிகள் ஓரளவு சுகம் கண்டார்கள், சாதாரணமாக இரத்தத்தில் 100 மில்லி கிராம் முதல் 120 மில்லி கிராம் வரை சர்க்கரையின் அளவு இருக்கலாம். அதற்கு மேல் போனால் நீரிழிவு நோய் பாதிப்பை ஏற்படுத்தும்.


இன்சுலினை ஆடு, மாடு பன்றி ஆகியவற்றின் கணையத்திலிருந்து எடுத்து அதைத் திரவமாகவும். ஸ்படிகமாகவும் செய்து தயாரித்திருக்கிறார்கள். 

ஐந்து வகை இன்சுலின்கள் இப்போது கிடைக்கின்றன. ஊசி மருந்தாகவும், வாய்மூலம் சாப்பிடும் பில்ஸ் களாகவும் இரண்டு முறைகளிலும் நீரிழிவைக் கட்டுப்படுத்த உதவுகின்றது.

இன்சுலின் மருந்துகள் ஊசி மூலம் செலுத்தப்படுவது தன் சிறந்த பயனைத் தருகிறது. வாய் மருந்துகள் அவ்வளவு சிறப்பாகச் செயல்பட வில்லை என்கிறார்கள். நீரிழிவால் உண்டாகும் மயக்கத்தை இன்சுலின் கட்டுப்படுத்துகிறது.

ஆனால் இன்சுலின் அதிர்ச்சி என்று சொல்லப்படும் ஹைப்போகிளிசீமியா என்ற ஆபத்தும் சிலருக்கு உண்டாகிறது. மருந்து அளவுக் அதிகமானால், நோயாளி தாங்கும் சக்தியை இழந்தால் இன்சுலின் அதிர்ச்சி ஏற்பட்டு ஆபத்தான கட்டத்தை அடைய நேரிடுகிறது.

ஆகவே நீரிழிவு நிபுணர்களின் ஆலோசனைப்படி நடந்துகொண்டால் இன்சுலின் மருந்துகளின் ஆபத்தைத் தடுக்கலாம். நீரிழிவு நோயாளிகளுக்கு இப்போது இன்சுலினைத் தவிர வேறு சிறப்பான மருந்துகள் ஆங்கில வைத்தியத்தில் இல்லை.

 சித்த, ஆயுர்வேத வைத்தியத்தில் நீரிழிவைக் கட்டுப் படுத்த நிறைய மருந்துகள் உண்டு என்று சொல்லப்படுகிறது.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...