Skip to main content

Posts

Showing posts with the label குழந்தை நல குறிப்புகள்

Google ads

தாய் பால் நல்லதா ? புட்டி பால் நல்லதா ? குழந்தை ஆரோக்கியத்திற்கு ?

 WHO என்று சுருக்கமாக அழைக்கப்படும் அகில உலகச் சுகாதார நிறுவனத்திற்கும். டின் பால், புட்டிப் பால் தயாரிக்கும் வியாபார நிறுவனங்களுக்கும் இடையில் இப்போது ஒரு போராட்டமே நடந்து கொண்டிருக்கிறது. குழந்தைகளுக்கு ஊட்டும் செயற்கைப் பாலுணவைக் கட்டுப் படுத்த உலக சுகாதார நிறுவனம் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. தாய்மார்களின் உள்ளங்களில் ஒரு தவறான எண்ணத்தை குழந்தைப் பால் தயாரிப்பாளர்கள் சிலர் பத்திரிகை, சினிமா விளம்பரங்கள் மூலம் பிரசாரம் செய்து வருகிறார்கள். தாய்ப் பாலை விடப் புட்டிப் பாலே புஷ்டி அளிப்பது, ஆரோக்கியம் அளிப்பது என்றெல்லாம் கருத்தைப் பரப்பிப் பாலுணவு விற்பனை மூலம் இந்தியாவில் மட்டும் 100 கோடி ரூபாய்க்கு மேல் ஆதாயம் தேடி வருகிறார்கள். இந்திய அரசு, டின்களில் விற்பனை செய்யும் குழந்தைப் பால் உணவை நான்கு மாத குழந்தைகளுக்குக் கொடுக்கக் கூடாது என்று கட்டுப் பாடும் விதித்திருக்கிறது. புட்டிப் பால் கொடுப்பதால் குழந்தைகளுக்கு அப்படி என்ன கெடுதல்கள் ஏற்படுகின்றன? என்ற உண்மையை நாம் அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும்.  விளம்பரத்தால், வியாபாரத் தந்திரத்தால் தாய்ப் பாலின் சிறப்பைத் தெர...

பிறவி கோளாறுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் - தமிழ் சித்த மருத்துவம்

 குழந்தை பிறந்தவுடன் குழந்தையும் தாயும் இரண்டு உடல்களாக, இரண்டு உயிராகப் பிரிந்ததும் தாய் மகிழ்ச்சி அடைகிறாள். கணவனும் மகிழ்ச்சி அடைகிறான். இது எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதான். ஆனால், இதற்கு மாறாகச் சில தாய்மார்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் பிறந்த குழந்தை கண்ணோ, மூக்கோ, வாயோ, உதடோ, கைகால்களோ கோரமாக அமைந்துவிட்டால் பெற்றவள் முகம் சுளிக்கிறாள்.  குழந்தை பிறந்தவுடன் சில குழந்தைகள் அங்கஹீனமாகவும், பிறந்த சில காலத்திற்குள் அவலட்சணமாகவோ அமைந்து விடுவது உண்டு. இந்தக் குறைகளைப் பிறவிக் கோளாறு என்று சொல்லுவார்கள். ஜீன்கள் என்று சொல்லப்படும் பாரம்பரியத்திற்கு ஆதாரமான ஒரு பொருளில் கோளாறு ஏற்பட்டுத் தோன்றுகின்ற குறைபாடுகளே இவை. ஜீன்களில் ஏற்படும் விபரிதங்களால் உதடுகள் பிளந்தும், நாக்கு ஒட்டியும். காதுகள் சிதைந்தும், விரல்கள் ஒட்டியும் ஆறு விரல்களாகப் பிரிந்தும், கவட்டைக் கால்களுடனும் சில குழந்தைகள் பிறக்கின்றன.  இவை கண்களுக்குத் தெரிந்த பிறவிக் கோளாறுகள். சில கண்களுக்குத் தோன்றாமல் மறைந்து நின்று குழந்தைகளுக்குத் துன்பம் தருபவை. நீர்க் கட்டிகள் என்று சொல்லப்படும் (Cysts) நுரையீரலி...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...

குழந்தைகளின் மந்த தன்மையை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் ?

 சில பெற்றோர், தங்களின் குழந்தையைப் பற்றிச் சொல்லும் போது, எல்லாக் குழந்தைகளும் ஓடியாடி விளையாடுகிறார்கள் என் குழந்தை மட்டும் எப்போதும் டல்லாக இருக்கிறான் என்பார்கள்.  இன்னும் சில தாய்மார்கள் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் மண்டையில் ஏறுவதில்லை. மந்தமாக இருக்கிறான். இதற்கு என்ன காரணம்? என்று கேட்பதுண்டு. பிறக்கும்போதே ஏற்படும் சில கோளாறுகளே மந்த புத்திக்குக் காரணங்களாகச் சொல்லலாம். கர்ப்பமாக இருக்கும் சில தாய்மார்கள் ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல் இருப்பதால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மந்த புத்தியுள்ளவர்களாகப் பிறவியிலேயே உருவாகிறார்கள். கர்ப்பிணிகளின் உணவில் அயோடின் சத்தக் குறைவதால் மந்த நிலை ஏற்படலாம். ஆகவே கர்ப்பமான பெண்கள் அயோடின் உப்புச் சேர்ந்திருக்கும் உணவுகளை நன்கு சாப்பிடவேண்டும். கர்ப்பமான காலத்தில் அதிகமாக மருந்துகளைச் சாப்பிட்டாலும் குழந்தை மந்தமாகப் பிறக்கிறது என்று மகப்பேறு மருத்துவர்கள் சொல்லுகிறார்கள். குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கல் காரணமாகச் சில சமயங்களில் மூளை பாதிக்கப்படலாம். குழந்தைக்கு வலிப்பு உண்டாகலாம். இதனாலும் மந்த புத்தி...

குழந்தை நோய்களுக்கு தடுப்பூசிகள் எவ்வாறு உதவுகின்றன ?

 நோய்களைத் தடுக்கும் சக்தியை நம் முன்னோர்கள் பெற்றிருந்தார்கள். குழந்தை பிறந்குமுன் பிறக்கப்போகும் குழந்தைக்கு நோய் வராமல் தடுக்கத் தாய்மார்கள் முன்னோற்பாடாகக் கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தார்கள். இதனால் குழந்தை நோய்கள் அதிகமாக வருவதைத் தடுத்துவந்தார்கள். இடைக்காலத்தில் போதுமான கவனிப்பு இல்லாமல் அந்த முன்னேற்பாடுகளைச் செய்யாமல் விட்டு விட்டார்கள். இதனால் பிறக்கும் குழந்தை நோயோடு பிறக்கிறது. வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் தாய்க்கு மட்டுமல்ல. குழந்தைக்கும் இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன. குழந்தை பிறந்ததும் தட்டம்மை என்று சொல்லப்படும் மணல்வாரி, சின்னம்மை, வைசூரி, மற்றும் டிப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ், டி.பி..போலியோ என்னும் இளம்பிள்ளை வாதம் ஆகிய நோய்கள் தடுக்கக் கூடும்.  மருத்துவத்தில் நவீன மருந்துகளைக் கண்டுபிடித்துக் குழந்தைகளுக்கு வரும் நோய்களைத் தடுத்து நிறுத்த வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். வாரக் கணக்கில், மாதக் கணக்கில்,வருடக் கணக்கில் இப்போது மருந்துகளைக் கொடுத்துக் குழந்தைகளைக் காப்பாற்றும் காலமாக இந்தக்...