Skip to main content

Google ads

குழந்தைகளின் மந்த தன்மையை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும் ?

 சில பெற்றோர், தங்களின் குழந்தையைப் பற்றிச் சொல்லும் போது, எல்லாக் குழந்தைகளும் ஓடியாடி விளையாடுகிறார்கள் என் குழந்தை மட்டும் எப்போதும் டல்லாக இருக்கிறான் என்பார்கள். 

இன்னும் சில தாய்மார்கள் குழந்தைக்கு என்ன சொல்லிக் கொடுத்தாலும் மண்டையில் ஏறுவதில்லை. மந்தமாக இருக்கிறான். இதற்கு என்ன காரணம்? என்று கேட்பதுண்டு.

பிறக்கும்போதே ஏற்படும் சில கோளாறுகளே மந்த புத்திக்குக் காரணங்களாகச் சொல்லலாம்.



கர்ப்பமாக இருக்கும் சில தாய்மார்கள் ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிடாமல் இருப்பதால் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தை மந்த புத்தியுள்ளவர்களாகப் பிறவியிலேயே உருவாகிறார்கள். கர்ப்பிணிகளின் உணவில் அயோடின் சத்தக் குறைவதால் மந்த நிலை ஏற்படலாம். ஆகவே கர்ப்பமான பெண்கள் அயோடின் உப்புச் சேர்ந்திருக்கும் உணவுகளை நன்கு சாப்பிடவேண்டும்.

கர்ப்பமான காலத்தில் அதிகமாக மருந்துகளைச் சாப்பிட்டாலும் குழந்தை மந்தமாகப் பிறக்கிறது என்று மகப்பேறு மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.

குழந்தை பிறக்கும்போது ஏற்படும் சிக்கல் காரணமாகச் சில சமயங்களில் மூளை பாதிக்கப்படலாம்.

குழந்தைக்கு வலிப்பு உண்டாகலாம். இதனாலும் மந்த புத்தி உண்டாகும்.

பிரசவத் ன்போது சிலருக்கு கடுமையான இரத்தப் போக்கு ஏற்படும். இதைத் தடுக்க ஒருவகை ஊசி மருந்து கொடுக்கப்படும். இது கர்ப்பப் பையையும் இரத்த நாளங்களையும் கருங்க வைத்து விடுவது உண்டு.

 சிலருக்கு இந்த ஊசி பருந்தினால் பாதிப்பும் ஏற்படுவதாகச் சொல்லுகிறார்கள். இதன் காரணமாகப் பிறக்கும் குழந்தை மந்த புத்தியாக பிறக்க வாய்ப்பிருக்கிறது.

பெண்கள் நம் தேசத்தைப் பொறுத்த வரையில் புகைப்பதும், மதுக் குடிப்பதும் மிகமிகக் குறைவு. ஒரு சில நாடுகளில் நாகரிகத்தின் மோகத்தில் மூழ்கிப் புகைக்கிறார்கள். மது அருந்துகிறார்கள். இந்தப் பழக்கமுள்ள தாய்மார்கள் மந்த புத்தியுள்ள குழந்தைகளைத் தங்கள் தீய பழக்கத்தின் காரணமாக உருவாக்குகிறார்கள்.

கருத்தரித்த பெண்களுக்கு மணல்வாரி என்று சொல்லப்படும் மீசில்ஸ் நோய் தோன்றினால் குழந்தைக்கு மந்த புத்தி ஏற்படலாம். இது தவிர மஞ்சள் காமாலை நோய் தோன்றினாலும் இது போன்ற விளைவுகள் ஏற்படலாம்.

40 வயதிற்குமேல் பெண்கள் குழந்தை பெற்றாலும் மந்த புத்தியுள்ள குழந்தைகள் தோன்றலாம் என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். 

இதைவிட இன்னொரு காரணமும் சொல்லப் படுகிறது நெருங்கிய சொந்தத்தில் பெண் எடுப்பதும் திருமணம் செய்து கொள்வதும்கூட மந்த புத்தியுள்ள குழந்தைகள் பிறக்கக் காரணம்.

இவை எல்லாம் பிறவிக் காரணங்கள், குழந்தை வளர்ந்த பிறகும் சோகை நோயினால் பாதிக்கப்பட்டால் குழந்தைகள் வெளுத்துப் போய்ச் சோர்வாக இருக்கும். 

அயச்சத்துள்ள உணவு வகைகளைக் கொடுத்து வந்தால் இந்தக் குறை நீங்கும். தாயும் ஊட்டச் சத்துள்ள உணவைச் சாப்பிடவேண்டும். வளரும் குழந்தைகளும் சத்துள்ள உணவுகளைச் சாப்பிட வேண்டும். மந்தநிலை மாறும்.

வளரும் குழந்தைகளுக்கு வயிற்றில் பூச்சித் தொல்லை இருந்தாலும் குழந்தை மந்தமாக இருக்கும். படிப்பில் ஆர்வமில்லாமல் படித்தாலும் மூளை ஏற்றுக்கொள்ளாத நிலையில் மந்த புத்திக்காரர்களாய் வளர்வதும் உண்டு.

பெற்றோர் டாக்டரிடம் காட்டி, பரிசோதனை செப்து இதற்கு மருந்து கொடுத்தால் பூச்சித் தொல்லை ஒழியும்.

பொதுவாக மாவுப் பண்டங்களை, இனிப்புப் பண்டங்களை அதிகமாகச் சாப்பிடும் குழந்தைகள் மந்த புத்திக்காரர்களாக மாறுகின்றன. காரணம், உடலின் இயக்கத்தை மாவுப் பண்டங்கள் மந்தப்படுத்தும் தன்மை வாய்ந்தவை. மாவுச் சர்க்கரை குளுகோசாசு மாற்றப்படுகிறது. குளுகோஸ் முழுவதும் எரிக்கப்படாமல் போனால் கழிவுகள் எஞ்சி நிற்கின்றன.

 இதிலிருந்து பைவிக் அமிலம் உற்பத்தியாகிறது. இது நரம்பு மண்டலத்தைப் பாதிக்கிறது. மூளையை மந்தப்படுத்துகிறது. இதன் காரணமாகவும் சிறுவர் சிறுமிகள் மந்த புத்திக்காரர்களாக ஆகிறார்கள் என்று கண்டு பிடித்திருக்கிறார்கள்.

மந்த நிலையில் இருக்கும் குழந்தைகளின் மனதில் பெற்றோர் மகிழ்ச்சியையும் கிளர்ச்சியையும் தூண்டிக் கொண்டிருந்தால் நிலைமை மாறலாம். குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தை முறையாக கொடுத்து விளையாட்டிலும் பயிற்சி கொடுத்து வந்தால் மந்த நிலையை மாற்றி அமைக்கலாம்.

மூளைக்கு வேலை கொடுத்தால் முயற்சியோடு முன்னேறுவார்கள். துள்ளித் திரிகின்ற பருவத்தில் அவர்களை ஒன்றுக்கும் உதவாதவர்கள் என்று முத்திரை குத்தி நில் என்று ஒதுக்கி வைக்காதீர்கள். இதனால் மந்தம் அவர்களை நிரந்தரமாகச் சொந்தமாக்கிக் கொள்ளும்!

Comments

Popular posts from this blog

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவ...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...