Skip to main content

Posts

Showing posts with the label யோகாசன வகைகள்

Google ads

பிறை ஆசனம் - செய்முறை,பலன்கள் யோகாசன வகைகள்

 பிறை என்றால் பாதி நிலவு. இந்நிலையில் உடலின் வெளிப்புற வளைவு நிலவின் அரைவட்டம் மாதிரி தெரிவு தால் இப்பெயர் செய்முறை: முதலில் நின்ற நிலையில் காலைச் சற்று அகலமாக வைத் துக் கொள்ளவும் பின்னர் கைகளினால் முதுகைப் பிடித்துக் கொண்டு மெதுவாக பின்னால் முடிந்த அளவிற்கு வளைய வேண்டும். இப்போது உடல் எடை முழுவதும் தொடையிலும் கால் விரல்களிலும் இருக்கவும். மெல்ல மெல்ல முதுகை சாய்த்து கைகளை கீழறக்கி கணுக்காலைப் பிடித்துக் கொள்ளவும், கண்களை திறந்து வைக்கவும்.   நேர அளவு: பத்து முதல் பதினைந்து வினாடிகள் இருக்கவும். இதை இரண்டு மூன்று முறை செய்யலாம்.  பலன்கள்: முதுகுத்தண்டு பலம் பெறும். முதுகின் கூனல் நிலை அகன்று நிமிர்ந்த மார்பு பெறுவீர்கள். நெஞ்சக் கூடு நன்கு விரிவதால் மார்பும், நுரையீரலும் அகன்று சுவாச உறுப்பு கட்கு மிகுந்த பலம் கொடுக்கும்.   பயிற்சியாளர் கவனத்திற்கு: முதலில் இந்த ஆசனம் செய்யும் பொழுது முழுவதும் வளைய வராது. ஆனால் பயிற்சியை விடாமல் தொடரத் தொடர சில நாட்களிலேயே ஒன்றாக இரு கால்களையும் கையினால் பிடித்த படி பின்னால் வளையும் நிலை கிட்டும். முழங்கால்கள் வளையாமல் பார்த்துக் கொள...

அர்த்த சிரசாசனம்- செய்முறை, பலன்கள் யோகாசன வகைகள்

 அர்த்த என்றாவ் பாதி. சிரசு என்றால் தலை. இந்நிலை பாதி தலை கீழாக நிற்பது ஆகும்.   செய்முறை: விரிப்பை நான்காக மடித்து தரையில் வைக்கவும். வஜ்ரா சனம் நிலையில் முட்டி போட்டு இருக்கவும். முழங்கையை தரையில் ஊன்றவும்.  இரண்டு முழங்கைக்கும் இடையில் உள்ள இடைவெளி இரண்டு தோளுக்கும் உள்ள இடை வெளியை விட சற்று அதிகமாக இருக்க வேண்டும்.  இரண்டு கை விரல்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும். அப்போது இரண்டு உள்ளங்கைக்கும் இடைவெளி இருக்கும்.  இப்போது தலையை இடைவெளி இருக்கிற இடத்தில் ஊன்றவும். தலை நேராக விரிப்பில் அழுத்தும். இப்போது மெல்ல முட்டியை உயர்த்தி கால்விரல்களை தலையை நோக்கி கொண்டு வரவும்.  உடலை முக்கோண வடிவில் வைத்திருக்கவும். தரையில் தலை, கால்விரல், கை கள் மட்டும் பதிந்திருக்கும். கண்ணை மூடி உடலை தளர் வாக வைக்கவும். ஆசன நிலையில் இயல்பான சுவாசம் போதும்.  நேர அளவு: ஒரு நிமிடம் அல்லது இரண்டு நிமிடங்கள் செய்யலாம். ஒரு முறை செய்தால் போதுமானது. பலன்கள்: சிரசாசனத்தின் பாதி பலன்கள் இதன் மூலமும் கிடைக்கும்.  பயிற்சியாளர் கவனத்திற்கு: ஆரம்ப நிலை பயிற்சியாளர்களும், வயதானவர்களு...

மத்ஸ்யாசனம்-செய்முறை ,பலன்கள்-யோகாசன வகைகள்

 மத்ஸியா என்றால் மீள் என்று பொருள். இந்த ஆசனம் நீரில் மீன் போல் மிதக்க உதவுவதால் இப்பெயர்.   செய்முறை: பத்மாசனத்தில் அமரவும். பின் அப்படியே கால்கள் தரை யில் இருக்க மெல்ல பின் பக்கமாக படுக்கவும்.  கைகளை தலைப்பக்கம் தரையில் ஊன்றி உடம்பை மேலே உயர்த்தி பின்புறம் ஒரு வளைவு போல இருக்க நெஞ்சுப்பகுதி, கழுத்து உயர்ந்து இருக்க வேண்டும். உச்சந்தலையை தரையில் பதிய வைக்க வேண்டும். குறுக்காக உள்ள கால்களை கைகளால் பற்றிக் கொண்டு தலையை மேலும் பின்னால் இழுத்து முதுகு வளைவை அதிகப்படுத்தவும். நேர அளவு:  பத்து - முதல் இருபது வினாடி செய்யவும். ஒரு முறை செய்தால் போதுமானது. பலன்கள்: இந்த ஆசனம் நுரையீரல், பீட்யூட்டரி, தைராய்டு கோளங் கள் போன்றவற்றின் செயல்பாட்டிற்கு ஊக்கமனிப்பதாகும். இரத்த ஓட்டத்தை சுறுசுறுப்படையச் செய்யும். மார்புக்கூடு அகன்று விரியும் இந்த ஆசனத்தின் மூலம் நுரையீரல் தொடர்பான நோய் கள், சுவாசகாசம் எனப்படும். ஆஸ்துமா, கஷயரோகம், இருமல், மற்றும் வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.  பயிற்சியாளர் கவனத்திற்கு: பருமனாக உள்ளவர்கள் பத்மாசனம் செய்ய முடியா விட்டால் சாதாரண நிலையி...

திரிகோண ஆசனம் | யோகாசன வகைகள்-medical tamizha

 இந்த ஆசனம் முக்கோண தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது.    செய்முறை:     முதலில் நேராக இரண்டு கால்களையும் சேர்த்து நிற்க வேண்டும். பிள் இரண்டு கால்களுக்கும் இடையே சுமார் ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரை இடைவெளி விட்டு கால்களை அகலப்படுத்தி நிற்க வேண்டும். மெல்ல காற்றை உள்ளுக்கிழுத்துக் கொண்டே கைகளை பக்கவாட்டில் நீட்ட வேண்டும்.  இப்போது இழுத்த மூச்சை மெல்ல வெளியே விட்டுக் கொண்டே கைகளை நீட்டிய நிலையில் அப்படியே வைத்துக் கொண்டு உடலை இடது பக்கமாக வளைக்க வேண்டும். உடலை இடது பக்கமாக வளைக்கும்போது முழங்காலை யோ, உடலின் மற்ற பாகங்களையோ வளைக்கக் கூடாது. இடுப்பை மட்டும் வளைக்க வேண்டும். நீட்டிய இடது கையின் நுனிவிரலால் இடது பாதத்தைத் தொட வேண்டும். இந்த நிலையிலேயே சில விநாடிகள் இருக்க அந்தச் சமயம் மூச்சுக் காற்றை உள்ளுக்குள் இழுக் கக் கூடாது. அச்சமயம் முகத்தை மேல்பக்கம் திருப்பி வலது கைவிரல் நுனியைப் பார்க்க வேண்டும்.  இப்போது நீட்டிய நிலையில் உள்ள வலதுகை வானத்தை நோக்கி நிற்கும். அண்ணாந்து பார்க்கும்போது முகவாய்க் கட்டை வலது புறத்தை ஒட்டியிருக்க வேண்டும். பிறகு மூ...

"பத்மாசனம்" செய்முறை-யோகாசன வகைகள்

 பத்மா என்றால் தாமரை என்று பொருள். இந்த ஆசனம் செய்யப்படும்போது தாமரை பூ போல தோற்றம் கிடைக்கும். ஆகவே இந்தப் பெயர்.  செய்முறை :  சமமான தரையில் கால்களை நன்றாக நீட்டி தளர்த்தவும் முதலில் வலது காலை இழுத்து மடித்து இடது தொடையின் மீது வைக்கவும் பிறகு அதே போன்று இடது காலை மடித்து வலது தொடையின் மீது வைக்கவும்.  குதிகால்கள் இருபுறமும் அடிவயிற்றை நன்கு தொட்டுக் கொண்டிருப்பது போல் அமைய வேண்டும். இடது கை இடது முட்டியில் வைக்கவும். வலது கை வலது முட்டியில் வைக்கவும். உள்ளங்கை மேல்நோக்கி இருக்கவும் ஆள்காட்டி விரல் கட்டை விரலை தொட்டுக் கொண்டிருக்கவும். (சின்முத்ரா) முதுகை சற்றும் கோணல் இல்லாத நிலையில் நன்றாக நிமிர்த்தி வைக்கவும் கண்களை மூடி மனதை அமைதியாக வைக்கவும். ஆசன நிலையில் இயல்பான சுவாசத்தில் இருக்க வேண்டும்.  நேர அளவு: 'முதலில் 1-5 நிமிடங்கள் வரை செய்யலாம். பழகின பிறகு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.  பலன்கள்: பிராணாயமம், ஜபம், தியானம் செய்வதற்கு மிகவும் உயர்ந்த ஆசனம். இடுப்புப் பகுதிக்கு மிகுந்த இரத்த ஓட்டம் அளித்து தண்டுவிட அடி எலும்பு மற்றும் முதுகு தண்டு ...

"உட்கட்டாசனம்" யோகாசன வகைகள்-Medical Tamizha

  உட்கட்டாசனம்   செய்முறை: முதலில் நேராக நிமிர்ந்து நிற்க வேண்டும். பின் கால் களுக்கு இடையே ஒரு அடி அகலம் இருக்குமாறு காலை விரித்து வைத்துக் கொள்ளவும். கைகளை நேராக தோள்பட்டை அளவுக்கு முன்னே நீட்டவும். உடம்பை மெதுவாக கீழே கொண்டு வந்து நாற் காலியின் மீது அமர்வது போல் உட்கார வேண்டும்.  தொடையின் மேல் பகுதி கிடை மட்டமாக இருக்க வேண்டும். ஆசனத்தின் இறுதி நிலை முதுகு நேராக இருக்குமாறு நிற்க வேண்டும்.  முன் பக்கம் உடம்பை வளைக்கக் கூடாது. ஆசன நிலையில் இருக்கும் போது இயல்பான மூச்சில் இருந்தால் போதும் செய்து முடித்த பின்பு நன்றாக ஆழ்ந்த மூச்சு இழுத்து விட வேண்டும். நேர அளவு: இருபது முதல் முப்பது நிமிடங்கள் வரை செய்யலாம். ஆரம்ப நாளில் ஐந்து முதல் பத்து நிமிடம் மட்டும் செய்தாள் போதுமானது.  உட்கட்டாசனம் -ஆசனத்தின் பயன்கள் :

ஏகபாத ஆசனம்- யோகாசன வகைகள்

 ஏக என்றால் ஒன்று பாத என்றால் பாதம் ஒரு பாதத்தில் நிற்கிற நிலை  செய்முறை: நேராக நிற்க வேண்டும். வலது காலைத் தரையில் நன்றாக ஊன்றி இடது காலைத் தூக்கி வலது தொடையின் மீது வைக்கவும். இடது தொடை பக்கவாட்டில் இருக்க வேண்டும். இப் போது கைகளை உயர்த்தி தலைக்கு மேலே கூப்பியபடி வைக்க வேண்டும். இப்போது மூச்சை உள்ளிழுத்து முன்னால் ஏதாவது ஒரு புள்ளியில் கண்களை கவனமாக வைக்க வேண்டும். ஆசன நிலையில் இயல்பான சுவாசம் போதும். நேர அளவு: 1 நிமிடம் செய்யலாம் ஒரு முறை போதுமானது.   ஏகப்பாத ஆசனத்தின் பலன்கள் : கால் தசைகள் வலிமை பெறுகின்றன. ஒருமுகப்படுத்தும் ஆற்றலை அதிகரிக்கிறது.  மனதில் சமநிலை ஏற்படுத்து கிறது. சிரசாசனத்தின் பயனை அதிகரிக்கிறது. பயிற்சியாளர் கவனத்திற்கு: இரண்டு கால்களையும் மாற்றி மாற்றி செய்யவும் (அதிக பட்சம் இரண்டு முறை)