மத்ஸியா என்றால் மீள் என்று பொருள். இந்த ஆசனம் நீரில் மீன் போல் மிதக்க உதவுவதால் இப்பெயர்.
செய்முறை:
பத்மாசனத்தில் அமரவும். பின் அப்படியே கால்கள் தரை யில் இருக்க மெல்ல பின் பக்கமாக படுக்கவும்.
கைகளை தலைப்பக்கம் தரையில் ஊன்றி உடம்பை மேலே உயர்த்தி பின்புறம் ஒரு வளைவு போல இருக்க நெஞ்சுப்பகுதி, கழுத்து உயர்ந்து இருக்க வேண்டும்.
உச்சந்தலையை தரையில் பதிய வைக்க வேண்டும். குறுக்காக உள்ள கால்களை கைகளால் பற்றிக் கொண்டு தலையை மேலும் பின்னால் இழுத்து முதுகு வளைவை அதிகப்படுத்தவும்.
நேர அளவு:
பத்து - முதல் இருபது வினாடி செய்யவும். ஒரு முறை செய்தால் போதுமானது.
பலன்கள்:
இந்த ஆசனம் நுரையீரல், பீட்யூட்டரி, தைராய்டு கோளங் கள் போன்றவற்றின் செயல்பாட்டிற்கு ஊக்கமனிப்பதாகும். இரத்த ஓட்டத்தை சுறுசுறுப்படையச் செய்யும். மார்புக்கூடு அகன்று விரியும்
இந்த ஆசனத்தின் மூலம் நுரையீரல் தொடர்பான நோய் கள், சுவாசகாசம் எனப்படும். ஆஸ்துமா, கஷயரோகம், இருமல், மற்றும் வயிற்றுக் கோளாறுகள் அனைத்தும் குணமாகும்.
பயிற்சியாளர் கவனத்திற்கு:
பருமனாக உள்ளவர்கள் பத்மாசனம் செய்ய முடியா விட்டால் சாதாரண நிலையில் அமர்ந்து இப்பயிற்சி செய்ய வும் அல்லது பத்மாசனம் நன்கு பயின்று பின் செய்யவும்.
Comments
Post a Comment