மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம்.
பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள்.
குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம்.
உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம்.
அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான அளவு உயிர்க் காற்று மூளைக்கு எட்டாததால் மூளை சேதமடைவதாலும் மூளை பாதிக்கப்படலாம்.
ஆரம்பத்திலேயே இந்தச் சிக்கலைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளித்தால் ஓரளவு குணப்படுத்தலாம். இதற்கென்று உள்ள டாக்டர்களை அணுகிச் சிகிச்சை செய்து கொள்வது நல்லது.
நான்கு வயதான ஒரு குழந்தைக்கு மூன்று வயதுக் குழந்தையின் அறிவும், ஆற்றலும் இருந்தால் இதன் வளர்ச்சிக் காலத்தில் 16 வயதில் 12 வயது குழந்தையின் புத்திக்கூர்மை இருக்கும். இதை அறியாத பொற்றோர், மற்றும் ஆசிரியர்கள் தடுமையாக நடந்துகொள்ளும்போது குழந்தை பயத்தாலும் அச்சத்தாலும் மன நோயாளியாக ஆகிவிடுகிறது.
புத்தி மந்தம், உடல் விகாரம், கொழுத்த சதை உருவம் பெற்ற குழந்தைகள் ஏளனத்திற்கும், தாழ்வு மனப்பான்மைக்கும் பலியாகி மன நோயாளிகளாக மாறுவதும் உண்டு.
குழந்தைகளுக்குக் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டாலும் மனநோய் உண்டாகும் என்று மனநோய் நிபுணர்கள் அபூர்வமான ஒரு கருத்தைச் சொல்லுகிறார்கள்.
மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் மனச் சோர்வோடும், அச்சத்தோடும். பயத்தோடும் வாழ்கிறார்கள் பெற்றோருக்கு இந்தக் குழந்தைகளால் பெரும் மனக் கவலைதான். பெற்றோரின் அன்பைப் பெறாத குழந்தைகள் இன்னும் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். இவர்களுக்கு அன்பு ஒன்றே மருந்து. அன்பு காட்டினால் போதும், மனநலம் பெறுகிறார்கள்.
டிரான்ஸ் ஆர்மிடல் லபோடமி என்று மூளையில் அறுவை சிகிச்சை செய்து ஓரளவு மனவளர்ச்சி பெற உதவுகிறார்கள் டாக்டர்கள். இதன் மூலம் முற்றிலும் சீராக்க முடியாது என்றாலும் ஓரளவு நன்கு வாழவைக்க உதவுகிறார்கள்.
பெற்றோர் மனவளர்ச்சி பெறாத குழந்தைகளை ஒரு சாபக்கேடு என்று கருதாமல் அன்போடும் அரவணைப் போடும் இவர்களுக்கு என்று நடைபெறும் பள்ளிக் கூடங்களில் சேர்த்துப் போதனைகள் மூலமாகவும், பயிற்சிகள் மூலமாகவும், அவர்களுக்குத் தொழிற் பயிற்சி அளித்துத் தங்கள் கால்களில் தாங்களே நிற்கும்படி வழி செய்ய வேண்டும்.
முளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளைக் கண்காணிக்க வெளிநாடுகளில் சில அமைப்புக்கள் இயங்கி வருகின்றன. நொப்ரோசிஸ் சங்கம், செரிப்ரல் பால்சி சங்கம், சிஸ்டிக்ஃபைரோசிஸ் சங்கம் போன்ற அமைப்புக்கள் இங்கும் பெரிய நகரங்களில் இருக்கின்றன. இவர்களை இங்கு சேர்த்துப் பயிற்சிக்கொடுத்தால் அவர்கள் பெற்றோருக்குச் சுமையாக இருக்கமாட்டார்கள்.
Comments
Post a Comment