Skip to main content

Posts

Showing posts with the label கீரைகள்

Google ads

பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள்-"கீரைகளின் ராஜா" Medical Tamizha

 கீரைகளின் ராஜா-பொன்னாங்கண்ணி கீரை கீரைகளின் ராஜா என்று அழைக்பப்படுவது பொன்னாங்கண்ணி கீரை. அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது. பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் எனினும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.  பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. அதேபோல் மஞ்சள் கரிசாலையும் பொன் சத்தை பெற்றிருக்கிறது. பொன்னாங்கண்ணி கீரை பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி. இன்றைக்கு தங்கபஸ்பம் என்பது உயர் வசதி படைத்தவர்களுக்கு கூட எட்டாத ஒரு மருந்தாகிப்போனது.  ஆனாலும் அந்த சத்து ஏழைகளும் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்திருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும். இந்தக் கீரை பெரும்பாலும் நீர்நிலைகளான குளம் குட்டை கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம்.  பொன்னாங்கண்ணியில்  1) சீமை பொன்னாங்கண்ணி,  2) நாட்டு பொன்னாங்கண்ணி   என இருவகை உண்டு. இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண