Skip to main content

Google ads

பொன்னாங்கண்ணி கீரையின் நன்மைகள்-"கீரைகளின் ராஜா" Medical Tamizha

 கீரைகளின் ராஜா-பொன்னாங்கண்ணி கீரை

கீரைகளின் ராஜா என்று அழைக்பப்படுவது பொன்னாங்கண்ணி கீரை.

அந்த அளவிற்கு மருத்துவ குணங்களை கொண்டது. பொன்னாங்கண்ணி கீரை என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான் எனினும் அதில் உள்ள மருத்துவ குணங்கள் பலருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

 பொன்னாங்கண்ணிக்கீரை பூமியில் இருந்து பொன் சத்தை உறிஞ்சி நீரான நிலையில் தன்னுள் பெற்று இருக்கிறது. அதேபோல் மஞ்சள் கரிசாலையும் பொன் சத்தை பெற்றிருக்கிறது.

பொன்னாங்கண்ணி கீரை
பொன்னாங்கண்ணி கீரை

பொன்னாங்கண்ணி ஓர் அற்புதமான உடற்தேற்றி. இன்றைக்கு தங்கபஸ்பம் என்பது உயர் வசதி படைத்தவர்களுக்கு கூட எட்டாத ஒரு மருந்தாகிப்போனது.

 ஆனாலும் அந்த சத்து ஏழைகளும் பெறும் விதத்தில் பொன்னாங்கண்ணியில் பொதிந்திருப்பது வியக்கத்தக்க ஒன்றாகும்.

இந்தக் கீரை பெரும்பாலும் நீர்நிலைகளான குளம் குட்டை கரைகளிலும், வாய்க்கால் கரைகளிலும் இயற்கையாக வளர்ந்து கிடப்பதைக் காணலாம்.

 பொன்னாங்கண்ணியில் 

1) சீமை பொன்னாங்கண்ணி,

 2) நாட்டு பொன்னாங்கண்ணி   என இருவகை உண்டு.

இதில் சீமை பொன்னாங்கண்ணி பெரும்பாலும் அழகுக்கு வளர்க்கப்படுகிறது. மருத்துவ குணம் குறைவு. பச்சையாக கிடைக்கும் நாட்டு பொன்னாங்கண்ணிதான் பல அருங்குணங்கள் கொண்டது.

மருத்துவ குணங்கள் :

பொன்னாங்கண்ணி தூக்கத்தை தூண்டக் கூடியது. மத்திய நரம்பு மண்டலத்தை சீர்செய்து சாந்தப்படுத்தக் கூடியது. இதனால் பல்வேறு நரம்பு நோய்கள் குணமாகிறது. ஞாபக சக்தியை தூண்டக் கூடியது. கண்களுக்கும், மூளைக்கும் குளிர்ச்சி தரவல்லது. தலைவலி, மயக்கத்தை தணிக்கக்கூடியது.

பொன்னாங்கண்ணி சாறு பாம்புக்கடி விஷத்தை முறிக்கும் தன்மை உடையது. ரத்த வாந்தியை நிறுத்தக்கூடியது. ஈரலை பலப்படுத்தவல்லது. மஞ்சள் காமாலைக்கு மருந்தாகக்கூடியது.

முடி நன்கு வளர :

பொன்னாங்கண்ணிக் கீரையை சாப்பிட்டுவதாலும் எண்ணெயில் இட்டு நன்கு காய்ச்சி எடுத்து வைத்துக் கொண்டு தலைக்குத் தடவுவதாலும் தலைமுடி நன்கு செழுமையாக வளரும் 

மலட்டு தன்மையை நீக்கும்

பொன்னாங்கண்ணி கீரையை உணவில் அடிக்கடி சேர்ப்பதால் கொனேரியா எனும் பால்வினை நோய் குணமாகும். ஆண்களின் மலட்டுத் தன்மையையும் இயலாமையையும் போக்க கூடிய அற்புதமான மருந்தாகும்.

சர்க்கரை நோயாளிகளுக்கு ஓர் சத்து நிறைந்த உணவாகி அவர்களின் சோர்வைப் போக்குவதோடு சர்க்கரை நோய்க்கும் ஓர் துணை மருந்து ஆகிறது. தலைவலி, தலைச்சுற்றலை தணிக்க வல்லது.

 குடலிறக்க நோய் ஆன ஹெர்னியா தணிவதற்குத் துணையானது. பொன்னாங்கண்ணி நெஞ்சு சளியைக் கரைக்க வல்லது. மார்பு இறுக்கத்தைப் போக்கும்.

புற்றுநோயை தடுக்கும்

ஆஸ்துமா போன்ற நுரையீரல் கோளாறுகளையும் அகற்ற வல்லது. பொன்னாங்கண்ணி நுண்கிருமிகளை அழிக்க வல்லது. 

பொன்னாங்கண்ணி புண்களை ஆற்றக் கூடியது. ரத்தத்தில் சேர்ந்த கழிவுகளை போக்கி புற்று நோய் வராமல் தடுக்க கூடியது.

பார்வை திறனை அதிகரிக்கும்

பொன்னாங்கண்ணியை தொடர்ந்து 27 நாட்களுக்கு சாப்பிட்டால் பகலிலும் நிலவை பார்க்கலாம் என்பது பழமொழி. அந்த அளவிற்கு கண் பார்வை மிக துல்லியமாக தெரிய உதவுகிறது.

 பொன்னாங்கண்ணியை உப்பு சேர்க்காமல் வேக வைத்து இளஞ்சூட்டோடு வெண்ணெய் சேர்த்து சாப்பிட்டு வர கண் பார்வை தெளிவு பெறும்.

கண் நோய்கள் விலகும் 

பொன்னாங்கண்ணி கீரையை நன்கு மைய அரைத்து அதை நீர் நிரப்பிய மண் பானை மீது வைத்திருந்து மறுநாள் காலையில் எடுத்து கண்களின் மேல் வைத்து சிறிது நேரம் கட்டி வைத்திருந்தால் கண் நோய்கள் குணமாகும்.

பொன்னாங்கண்ணிச் சாறு, நல்லெண்ணெய், நெல்லிக்காய் சாறு பசுவின் பால், கரிசலாங்கண்ணிச் சாறு இவை சம அளவு எடுத்து இதனோடு சிறிதளவு அதிமதுரத்தை பாலில் அரைத்து சேர்த்து காய்ச்சி மெழுகு பதத்தில் வந்ததும் வடிகட்டி தலைக்கு தேய்த்து தலை முழுகி வர 96 வகையான கண் நோய்களும் தொலைந்து போகும்.

பொன்னாங்கண்ணி கீரையை வதக்கி உடன் மிளகு, உப்பு போதிய அளவு சேர்த்து கற்ப மருந்தாக ஒரு மண்டலம் உண்ண உடலுக்கு வனப்பு, பொன் நிறம், கண்களுக்குக் குளிர்ச்சி ஆகியன உண்டாகும் புகைச்சல், ஈரல் நோய்கள் போன்றவை குணமாகும்.

ஒருபிடி பொன்னாங்கண்ணி கீரையை காலையில் வெறும் வயிற்றில் மென்று தின்று விட்டு பசும்பால் அருந்தி வர உடல் குளிர்ச்சி பெற்று ஈரல் நோய்கள் இல்லாது போகும். கண் நோய்கள் நீங்கிப் பார்வையும் தெளிவு பெறும்.

சிறுநீர் எரிச்சல் :

எலுமிச்சம்பழ அளவு பொன்னாங்கண்ணியின் வேரை எடுத்து சுத்திகரித்து 2 லிட்டர் எருமைப் பால் விட்டு கலக்கி காய்ச்சி தயிராக உறைய வைத்து கடைந்தெடுத்த வெண்ணெயை 3 நாட்கள் காலையில் சாப்பிட்டு விட்டு மோரையும் குடித்துவர சிறுநீரில் ரத்தம் கலந்து போதல், சிறுநீர் எரிச்சல் ஆகியன குணமாகும்.

உடல் எடை :

பொன்னாங்கண்ணி கீரையுடன் மிளகும், உப்பும் சேர்த்து சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...