Skip to main content

Google ads

திரிகோண ஆசனம் | யோகாசன வகைகள்-medical tamizha

 இந்த ஆசனம் முக்கோண தோற்றமளிப்பதால் இப்பெயர் பெற்றது. 

 செய்முறை:    

முதலில் நேராக இரண்டு கால்களையும் சேர்த்து நிற்க வேண்டும். பிள் இரண்டு கால்களுக்கும் இடையே சுமார் ஒன்றரை அடி முதல் இரண்டு அடி வரை இடைவெளி விட்டு கால்களை அகலப்படுத்தி நிற்க வேண்டும்.

மெல்ல காற்றை உள்ளுக்கிழுத்துக் கொண்டே கைகளை பக்கவாட்டில் நீட்ட வேண்டும். 

திரிகோண ஆசனம் | யோகாசன வகைகள்


இப்போது இழுத்த மூச்சை மெல்ல வெளியே விட்டுக் கொண்டே கைகளை நீட்டிய நிலையில் அப்படியே வைத்துக் கொண்டு உடலை இடது பக்கமாக வளைக்க வேண்டும். உடலை இடது பக்கமாக வளைக்கும்போது முழங்காலை யோ, உடலின் மற்ற பாகங்களையோ வளைக்கக் கூடாது.

இடுப்பை மட்டும் வளைக்க வேண்டும். நீட்டிய இடது கையின் நுனிவிரலால் இடது பாதத்தைத் தொட வேண்டும். இந்த நிலையிலேயே சில விநாடிகள் இருக்க அந்தச் சமயம் மூச்சுக் காற்றை உள்ளுக்குள் இழுக் கக் கூடாது. அச்சமயம் முகத்தை மேல்பக்கம் திருப்பி வலது கைவிரல் நுனியைப் பார்க்க வேண்டும். 

இப்போது நீட்டிய நிலையில் உள்ள வலதுகை வானத்தை நோக்கி நிற்கும். அண்ணாந்து பார்க்கும்போது முகவாய்க் கட்டை வலது புறத்தை ஒட்டியிருக்க வேண்டும்.

பிறகு மூச்சை உள்ளிழுத்துக் கொண்டே படிப்படியாக நிதானமாக உடலை மெதுவாக மேலே உயர்த்தி நேர் நிலைக்கு வர வேண்டும். இந்த நிலையில் ஓரிரு விநாடிகள் அப்படியே இருந்து நன்கு மூச்சை இழுத்து விட வேண்டும்.

 நேர அளவு:

நான்கு அல்லது ஐந்து வினாடி வரை நிறுத்தவும். இது போன்று ஐந்து அல்லது பத்து தடவை மாறி மாறி செய்யலாம்.

 பலன்கள்:

முதுகு நரம்புகள் பக்கவாட்டில் வளைக்கப்பட்டு நன்கு புத்துணர்ச்சி பெற்று முதுகு நரம்புகள் கை கால்கள் நன்கு சுறுசுறுப்புடன் இயங்க வைக்கின்றன.

 இடுப்பு பிடிப்பு வலி நீங்குகிறது. முதுகுப் பக்கத்தில் நல்ல இரத்தம் ஓட்டம் ஏற்பட்டு அப்பகுதியில் கொழுப்பு சக்தி அதிகம் சேராமல் பார்த்துக் கொள்கிறது.

பயிற்சியாளர் கவனத்திற்கு:

இப்பயிற்சியை தொடங்கும் போது சிலருக்கு கை விரல் கால் விரலைத் தொடவே தொடாது. விடா முயற்சியோடு பயிற்சியை செய்து வந்தால் சில நாட்களில் இடுப்பு வளைந்து பாத விரல்களை கை விரல் தொடும் அளவுக்கு வந்து விடும். 

இதனை நிதானமாகவும் படிப்படியாகவும் செய்ய வேண்டும் இடுப்பை வளைத்து காலைத் தொடும் போது சிலருக்கு இடுப்பு முன்பக்கமாகத் திரும்பக்கூடும். 

அப்படி திரும்பாமல் கவனமாகவும் நிதானமாகவும் இடுப்பை பக்கவாட்டில் மட்டுமே வளைக்க வேண்டும். அச்சமயத்தில் முழங்கால்களைத் தளர்த்தியாகவோ வளைத்தோ வைத்திருக்கக் கூடாது.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...