நோய்களைத் தடுக்கும் சக்தியை நம் முன்னோர்கள் பெற்றிருந்தார்கள். குழந்தை பிறந்குமுன் பிறக்கப்போகும் குழந்தைக்கு நோய் வராமல் தடுக்கத் தாய்மார்கள் முன்னோற்பாடாகக் கர்ப்பமுற்றிருக்கும் காலத்தில் ஊட்டச் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டு வந்தார்கள். இதனால் குழந்தை நோய்கள் அதிகமாக வருவதைத் தடுத்துவந்தார்கள்.
இடைக்காலத்தில் போதுமான கவனிப்பு இல்லாமல் அந்த முன்னேற்பாடுகளைச் செய்யாமல் விட்டு விட்டார்கள். இதனால் பிறக்கும் குழந்தை நோயோடு பிறக்கிறது. வைரஸ் கிருமிகளின் தாக்குதலால் தாய்க்கு மட்டுமல்ல. குழந்தைக்கும் இதனால் பெரும் பாதிப்புகள் ஏற்பட்டு வருகின்றன.
குழந்தை பிறந்ததும் தட்டம்மை என்று சொல்லப்படும் மணல்வாரி, சின்னம்மை, வைசூரி, மற்றும் டிப்தீரியா, கக்குவான் இருமல், டெட்டனஸ், டி.பி..போலியோ என்னும் இளம்பிள்ளை வாதம் ஆகிய நோய்கள் தடுக்கக் கூடும்.
மருத்துவத்தில் நவீன மருந்துகளைக் கண்டுபிடித்துக் குழந்தைகளுக்கு வரும் நோய்களைத் தடுத்து நிறுத்த வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். வாரக் கணக்கில், மாதக் கணக்கில்,வருடக் கணக்கில் இப்போது மருந்துகளைக் கொடுத்துக் குழந்தைகளைக் காப்பாற்றும் காலமாக இந்தக் சுலியுகம் மாறிவிட்டது.
குழந்தை பிறந்ததும் அதற்குத் தவறாமல் தாய்ப்பால் கொடுத்து வந்தாலே போதும். பல நோய்களை வரவொட்டாமல் தடுத்துவிடுகிறது. இதற்கு தாயின் ஆரோக்கியம் மிக முக்கியம். தாய்க்கு நோய் இருந்தால் சேய்க்கும் அந்த நோய் உண்டாகும். ஆரோக்கியமான தாய்ப் பாலைக் குடிக்கும் குழந்தைக்கு நோய்த் தொற்று உண்டாவதில்லை.
இதனால் தாய் ஆரோக்கியமாக இருப்பது மிகமிக அவசியம் குழந்தை பிறந்து 16 ஆவது வாரம் முதல் 20 ஆவது வாரம் வரை டெட்டனஸ் ஊசி மருந்து ஒரு டோஸ் கொடுத்துவருகிறார்கள்.
20 ஆவது வாரத்திலிருந்து 24 ஆவது வாரம் வரை இரண்டு டோஸ் மருந்து கொடுத்து வரவேண்டும். 36 ஆவது வாரத்திலிருந்து 38ஆவது வாரம்வரை டெட்டனஸ் மருந்தை மூன்று டோஸ் உயர்த்திக் கொடுத்துவரவேண்டும்.
அடுத்தபடி. குழந்தைக்கு அம்மை நோய் வரலாம். இதற்கு அம்மை நோய்த் தடுப்பூசி போட வேண்டும். டி.பி. நோய் தாக்கலாம். இதற்கு முன்னேற்பாடாக மூன்றாவது மாதத்திலிருந்து ஒன்பதாவது மாதம் வரை B.C.G. ஊசி மருந்து கொடுக்க வேண்டும்.
இப்போது குழந்தைகளுக்கு முத்தடுப்பு மருந்து கொடுக்கும் வசதி ஏற்பட்டிருக்கிறது. தொண்டை அடைப்பான், கக்குவான் இருமல், தசை விறப்பு, ஜன்னி என்று சொல்லப்படும் டெட்டனஸ் ஆகிய மூன்று நோய்கள் தாக்காமல் பாதுகாக்கவே இம் முத்தடுப்பு ஊசி மருந்துகள் சொட்டு மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.
ஒன்பதாம் மாதத்திலிருந்து 12ஆம் மாதம் வரை அம்மை நோய் வராமல் தடுக்க Measles Vaccine என்ற மருந்தை ஒரு டோஸ் கொடுத்து வரலாம். இதனால் அம்மை நோய் தாக்காது.
ஒரு வருடத்திற்கும் இரண்டு வருடத்திற்கும் இடையில் நோய் குழந்தைகளைத் தாக்கலாம். ஆகவே போலியோ மருந்து கொடுக்கலாம்.
குழந்தைக்கு டெட்டனஸ் வராமல் தடுக்கத் தாய் கர்ப்பமாக இருக்கும் போதே டெட்டனஸ்ஊசி போட்டுப் பிறக்கப்போகும் குழந்தையைப் பாதுகாக்கும் முறையும் உண்டு.
குழந்தைகள் பிறந்ததிலிருந்து ஐந்து வருடங்கள் வரை குழந்தைகளுக்கு எந்த நோயும் வரலாம். காரணம குழந்தையின் உடலில் நோய் எதிர்க்கும் சக்தி குறைவு.
குழந்தைகளுக்கு ஊசி மகுந்துகளைப் போடுவதால் மட்டும் நோய்கள் வராமல் தடுத்துவிடலாம் என்று நினைப்பது தவறு சத்துள்ள உணவு வகைகளைக் கொடுக்கவேண்டும். குழந்தை இருக்குமிடம் சுத்தமாக இருக்கவேண்டும்
தினசரி குழந்தையைக் குளிப்பாட்டுதல் மிக முக்கியம். தினசரி சுத்தமான ஆடைகளை உடுத்த வேண்டும். குழந்தையின் கைகள் கால்கள் எப்போதும் சுத்தமாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும். கைவிரல் நகங்களில் அழுக்குச் சேராமல் நகங்களை வெட்டிவிட வேண்டும். குழந்தை வெளியே செல்லும்போது அதற்குச்
செருப்பு, பூட்ஸ் அணிவித்து உதவவேண்டும். ஒவ்வொரு மாதமும் எடை போட்டுப் பார்த்துக் குழந்தையின் எடை அளவு கூடுகிறதா, குறைகிறதா, அப்படியே இருக்கிறதா என்று கவனிக்கவேண்டும்.
ஊட்டச் சத்துக் குறைவால் சில குழந்தைகளுக்கு வயிறு உப்பி, கைகால் வீக்கம் தோன்றும், தோலில் புள்ளிகள் தோன்றலாம். வாய்ப்புண், சோகை நோய் உண்டாகலாம். ஜலதோஷம் ஏற்படலாம். ஆகவே தாய்ப் பாலுடன் மசித்த தானிய உணவு, பயறு, பருப்புவகைகள். முட்டை, இறைச்சி, பழங்கள் என்று படிப்படியாக உணவில் மாற்றங்களைச் செய்து வரவேண்டும்.
இப்போது பல டாக்டர்கள் குழந்தைகளுக்குத் தடுப்பூசி மருந்துகளைக் கொடுக்கிறார்கள். சில பொது நிறுவனங்கள் சொட்டு மருந்துகளை இலவசமாகக் கொடுப்பதையும் பார்க்கிறோம். ஆகவே குழந்தை வைத்திய நிபுணர்களை அணுகுங்கள். இவர்கள் உங்கள் இல்லத்துக் குழந்தைகளை ஆரம்பகால நோய்கள் எதுவும் தாக்காமல் இருக்க உதவுகிறார்கள்.
Comments
Post a Comment