Skip to main content

Google ads

பிறவி கோளாறுகளால் குழந்தைகளுக்கு ஏற்படும் பாதிப்புகள் - தமிழ் சித்த மருத்துவம்

 குழந்தை பிறந்தவுடன் குழந்தையும் தாயும் இரண்டு உடல்களாக, இரண்டு உயிராகப் பிரிந்ததும் தாய் மகிழ்ச்சி அடைகிறாள். கணவனும் மகிழ்ச்சி அடைகிறான். இது எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதான்.

ஆனால், இதற்கு மாறாகச் சில தாய்மார்களுக்குக் குழந்தை பிறந்தவுடன் பிறந்த குழந்தை கண்ணோ, மூக்கோ, வாயோ, உதடோ, கைகால்களோ கோரமாக அமைந்துவிட்டால் பெற்றவள் முகம் சுளிக்கிறாள்.

 குழந்தை பிறந்தவுடன் சில குழந்தைகள் அங்கஹீனமாகவும், பிறந்த சில காலத்திற்குள் அவலட்சணமாகவோ அமைந்து விடுவது உண்டு. இந்தக் குறைகளைப் பிறவிக் கோளாறு என்று சொல்லுவார்கள்.

ஜீன்கள் என்று சொல்லப்படும் பாரம்பரியத்திற்கு ஆதாரமான ஒரு பொருளில் கோளாறு ஏற்பட்டுத் தோன்றுகின்ற குறைபாடுகளே இவை. ஜீன்களில் ஏற்படும் விபரிதங்களால் உதடுகள் பிளந்தும், நாக்கு ஒட்டியும். காதுகள் சிதைந்தும், விரல்கள் ஒட்டியும் ஆறு விரல்களாகப் பிரிந்தும், கவட்டைக் கால்களுடனும் சில குழந்தைகள் பிறக்கின்றன. 

இவை கண்களுக்குத் தெரிந்த பிறவிக் கோளாறுகள். சில கண்களுக்குத் தோன்றாமல் மறைந்து நின்று குழந்தைகளுக்குத் துன்பம் தருபவை. நீர்க் கட்டிகள் என்று சொல்லப்படும் (Cysts) நுரையீரலிலும் சிறுநீரகத்திலும் தோன்றி குழந்தைகளுக்குத் தொந்தரவு கொடுக்கும்.

இது தவிர (Blue baby) என்று செல்லப்படும் நீலக் குழந்தைகள் இருதயக் கோளாறுகள் தோன்றுகின்றன. நீலம் பாய்ந்த குழந்தைகள் நீண்ட நாட்கள் வாழமுடியாத சூழ்நிலை ஒரு காலத்தில் இருந்தது. நவீன மருத்துவ சிகிச்சைகளால் இந்தக் குறைகளை மெல்லப் போக்கி வருகிறார்கள்.

பிறவி இருதயக் கோளாறுகள் எப்படித் தோன்றுகின்றன? வைரஸ் கிருமிகள் நஞ்சுக் கொடியின் வழியாகப் புகுந்து இருதயத்தைக் தாக்குவதால் இருதயம் பழுதடைந்து உறுப்புகளில் பாதிப்புகளை உண்டாக்கு கின்றன. இது தவிர, பிறவிலேயே தாக்கும் இன்னொரு நோய் ஹேமோபைலியா, இரத்த நாளங்களிலிருந்து சுரக்கும் இரத்தம் இயற்கைக்கு மாறுபட்டுக் கட்டுப் படாமல் போகும் நிலைதான் இரத்தக் கசிவு நோய். 

இது ஆண் குழந்தைகளுக்கே அதிகமாகத் தோன்றுகிறது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இதனால் என்ன கோளாறு உண்டாகிறது என்று கேட்கலாம். குழந்தைகளுக்கு எங்காவது அடிபட்டால் இரத்தக் கசிவு அதிகமாக ஏற்பட்டு உடலிலிருந்து அதிகமான இரத்தம் வெளியேறி விடுகிறது இரத்தம் உறையும் தன்மையை இழந்து விடுவதால் வேறு சில சிக்கல்கள் தோன்றுகின்றன.

தாய் தந்தையர்களிடையே இரத்த அமைப்பில் வித்தியாசம் தோன்றிக் குழந்தைகளுக்கு இரத்தச் சோகையையும், மஞ்சள் காமாலையையும் உண்டாக்கக் கூடும். இரத்தப் பிரிவுகளில் ஒன்றான R.H. பரம்பரையின் மாற்றத்தால் தாய்க்கு இல்லாமலிருந்து, தந்தைக்கு இருந்து விட்டால் கடுமையான மஞ்சள் காமாலை நோய் தோன்ற வாய்ப்பு உண்டு.

குடும்பத் தொடர்பான நோய்களாலும் அதாவது நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, ஆஸ்துமா, அலர்ஜி, அல்சர், புற்றுநோய் காரணமாகவும் குழந்தைகளுக்குப் பிறவிக் கோளாறுகள் உண்டாகலாம்.

நெருங்கிய உறவில் பெண் எடுப்பதும், பெண் கொடுப்பதும் இதுபோன்ற பிறவிக் கோளாறுகளுக்குக் காரணமாக அமையலாம்.

இரகசிய நோய்களாலும் குழந்தைகளுக்குப் பாதிப்பு ஏற்படுகிறது. ஆகவே பிறவிக் கோளாறுகளுக்கு ஏராளமான காரணங்கள் இருந்தாலும், உறுப்புச் சிதைவுகளைப் பொறுத்தவரை சர்ஜரி மூலம் பெரும்பகுதி சரிப்படுத்தி விடலாம் என்ற நம்பிக்கை இப்போது ஏற்படும் அளவுக்கு மருத்துவ விஞ்ஞானம் வளர்ந்திருக்கிறது.

Comments

Popular posts from this blog

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவ...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...