ஆபத்தான நோய்கள் என்று சொல்லப்படும் சிபிலிஸ், கொனேரியா நோய்கள் உலக நாடுகள் முழுவதும் பரவி மனித சமுகத்திற்கு பெரும் சாபக் கேடுகளாக தலைவிரித்து ஆடுகின்றன.
இந்தியாவில் 20 இலட்சம் பேர்கள் இந்த நோயால் அவதிப்படுகிறார்கள். இது ஒழுக்கக் கேட்டின் மூலமாகவே தோன்றியது என்றாலும் ஒழுக்க சீலர்களையும் தொற்றிக்கொண்டு வெளியே தலைகாட்ட முடியாமல் அணுவணுவாகக் கொல்லுகிறது.
சிபிலிஸ் என்றும், கிரந்தி நோய் என்றும், மேக நோய் என்றும் அழைக்கப்படும் இந்நோய் டிரிபோனீமா பாலிடம் என்ற கிருமிகளால் உண்டாகிறது. கொனோரியா கானோகாக்கல் என்ற கிருமிகளால் தோன்றுகிறது. இந்த நோய்க் கிருமிகளால் வெளிச்சம் பட்டால், வெளி உஷ்ணத்தில் செத்துவிடும். இதனால் மறைவாக இருந்தே மனித குலத்திற்கு தீமை செய்கின்றன.
இக்கிருமிகள் தவறான, நெறிகெட்ட ஆண்களிடம் பெண்களிடம் பிறப்பு உறுப்புக்களில் தங்கிக்கொண்டு உடலெங்கும் பரவி விடுகின்றன. ஒருவரிடமிருந்து மற்றொருவருக்குப் பரவுகிறது. இன்பம் என்ற போர்வையில் இன்னலை மட்டுமல்ல, இறுதிச் சடங்கையும் நடத்தி விட்டுச் சிரஞ்சீவியாக வாழ்கிறது.
ஆணிடமிருந்து பெண்ணுக்கோ, பெண்ணிடமிருந்து ஆணுக்கோ தொற்றிக்கொண்டு அவர்களுக்கு மட்டும் தொல்லை கொடுப்பதில்லை. கர்ப்பத்தில் வளரும் குழந்தைகளுக்கும் இந்த நோயைப் பரிமாறுகிறது. இதனால் தலைமுறை தலைமுறையாக ஒரு தொடர்கதை நீண்டு கொண்டே போகிறது.
இந்த நோய்களைப் பொதுவாக வெனீரியல் டிசீஸ் என்றும் சுருக்கமாக V.D. என்றும் அழைத்தார்கள், உலக சுகாதார நிலையம் இந்த நோய்களுக்குச் சுருக்கமாக S.T.D. என்றும், விரிவாக Sexually Transmitted Diseases என்றும் புதிய பெயரைச் சூட்டி அழைக்கிறது.
வெளியே தெரிவதில்லை. தவறு செய்யும் ஓர் ஆணுக்கு அவன் உடலில் தொண்ணூறு நாட்களுக்குப் பிறகு புண் உண்டாகிறது. இந்த புண்ணுக்கு ஷாங்கர் புண் என்று பெயர். மருந்து போட்டால் ஆறிவிடும். ஆனால் பெண்களுக்கு இந்த ஆரம்பம் தெரிவதில்லை. நோய் கிருமிகள் கர்ப்பப்பையில் தங்கிக் கொண்டு கோடிக் கணக்கில் பெருகி பிறகு உபத்திரவம் கொடுக்க ஆரம்பிக்கின்றன.
இந்த நோய்கள் ஆரம்பத்தில் ஆண்களுக்கு இது தோலில் படிப்படியாகப் பரவும். பிறகு அசதி, கை கால் உளைச்சல் பிறகு மூட்டு வலி, எலும்பு வலி வேறு சில அறிகுறிகளைக் காட்டும். இதற்கு நோய் பரவி மூன்று மாதங்கள் ஆகியிருக்கும்.
அதன் பிறகு ஒரு வருஷம், இரண்டு வருஷங்களில் பாரிச வாயு, மூளைப் பாதிப்பு,இருதய நோய், இரத்தக் குழல் வெடிப்பு என்று படிப்படியாக நோயின் வேகம் முன்னேறிக் கடைசியில் ஹார்ட் அட்டாக் உண்டாகி இந்த உலகத்திலிருந்தே இந்த நோயாளியைப் பறித்துக் கொண்டு போய் விடுகிறது. இந்நோய் மூலையைத் தாக்கும். கை கால் குத்தல், குடைசல், குமட்டல், பசியின்மை என்று வேறு பல அறிகுறிகளைக் தோற்றுவிக்கும் குருடு, செவிடு, ஊமை, பைத்தியம் என்று வேறு பல கோளாறுகளை உண்டாக்கும். மலட்டுத் தன்மையும் முற்றினால் புற்று நோயும் உருவாகும்.
கொனேரியா நோய் உடலில் தொற்றிக் கொண்டால் ஆறு மணி நேரத்தில் தொல்லை கொடுக்கும். சிலருக்கு ஒரு நாள், இரண்டு நாளில் அறிகுறி தென்படும். நீர்க் கடுப்பு, உறுப்பில் எரிச்சல், அரிப்பு, வீக்கம் உண்டாகி நேயானியை டாக்டரிடம் விரட்டும். கொனேரியா முற்றினால் பிராஸ்டேட் கோளம் வீக்கம் அடையும். வலி எடுக்கும். ஜன்னிகூட உண்டாகும்.
சிபிலிஸ் அமைதியாகப் பரவுவதால் நோயாளிக்கு டாக்டரிடம் போகும் நெருக்கடி உடனே ஏற்படுவதில்லை. நோய் முற்றிய பிறகே டாக்டரிடம் ஓடுகிறான். இந்த நோயாளி தவறு செய்ததை வெளியே காட்டிக்கொள்ள மாட்டான். மிகவும் அவமானம் என்று அச்சப்பட்டு நோயை முற்றவிட்டு, பிறகு ஆபத்தான நிலைக்கு வந்த பிறகு டாக்டரிடம் செல்கிறான். இன்னும் சிலர் டாக்டரிடம் போகாமல் போலி வைத்தியர்களிடம் காட்டி மிக இரகசியமாக வைத்தியம் செய்து கொண்டு நோயைச் சிக்கலாக்கிக் கொண்டு அவதிப்படுகிறார்கள்.
குற்றம் புரிந்தவர் வாழ்க்கையில் நிம்மதி பெறுவதேதென்பத ஏது? என்று பாடிக்கொண்டிராமல் உடனே பால் இயல் டாக்டர்களை அணுகிச் சிகிச்சை செய்து கொள்ள வேண்டும். தொடர்ந்து 18 மாதங்கள் ஊசியும் மருந்தும் சாப்பிட்டால் குணமாகிவிடும்.
தவறு செய்த பிறகு மறைத்து வாழ்வதால் நோய் தீராது. வெட்கப்பட்டால் இரகசிய நோய்கள் குணமாகா.
Comments
Post a Comment