உலகில் உள்ள எல்லா ஜீவராசிகளுக்கும், புல், பூண்டு, செடி, கொடி, மரங்களுக்கும் உணர்வுகள் உண்டு. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் வெளிப்படுத்துகின்றன.
அவை தம் உணர்வுகளை தொட்டால் சிணுங்கி என்ற செடியின் இலைகள் விரிந்து இருக்கும். நாம் தொட்டவுடன் இலைகள் மூடிக் கொள்ளும்.
இதுபோலக் குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை ஏதாவது ஒரு காட்சியைப் பார்க்கும்போதோ, ஏதாவது ஒரு சுவையை அறியும்போதோ, ஏதாவது ஒரு வாடையை நுகரும் போதோ கிளர்ச்சி அடைகிறார்கள்.
இந்தக் கிளர்ச்சியை உண்டுபண்ணுபவை உணர்வு நரம்புகளே.
ஆகவே, ஏதாவது ஓர் உணர்ச்சிக்கு வசப்படாதவர் என்று எவரையும் கூறிவிட முடியாது.
மகிழ்ச்சி, கோபம், துக்கம், விருப்பு, வெறுப்பு என்று ஏதாவது ஒருவகையில் மனிதன் வசப்படுகிறான். அப்போது மனிதனுடைய தசைகளில் அசைவுகள் ஏற்படுகின்றன.
இதனால் நாடித் துடிப்பு அதிகமாகிறது. இருதயம் படபடக்கிறது. இரத்தக் குழாய்கள் விரிவடைகின்றன. இரத்த அழுத்தம் அதிகமாகிறது. இரத்தத்திலுள்ள சர்க்கரைப் பொருள்கள் பெருக்கெடுக்கின்றன. சுவாசம் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது.
உடம்பிலுள்ள நரம்புகள், எலும்புகள், தசைகள் எல்லாமே விழிப்படைந்து உடம்பின் இயக்கத்திற்கு உதவுகின்றன.
உணர்ச்சி கொந்தளிப்பால், உடலுக்கு நன்மையே தவிர, தீமை அல்ல. உணர்ச்சிவசப்படுவதால் மனிதனுக்கு ஆபத்து ஏற்படுவதில்லை. உடலுக்கு ஓரளவு நன்மையே ஏற்படுகிறது.
இன்னும் சொல்லப்போனால் மனித உடம்பு பக்குவப் படுகிறது.
மகிழ்ச்சியோ அல்லது துன்பமோ நம்மை அலைக் பெறுகிறோம். நம்மைத் தாக்கும் எந்த உணர்ச்சிக்கும் உள்ளம் சோர்ந்து போகாமல் ஒருவிதக் கட்டுப்பாட்டை நமக்கு நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம்.
பெரிய காற்றும் வெள்ளமும் வந்து தாக்கும்போது நாணல் முறிந்து விடுவதில்லை. வளைந்துகொடுக்கிறது. பிறகு காற்று ஓய்ந்ததும், வெள்ளம் வடிந்ததும் நாணல் நிமிர்ந்துகொள்கிறது. இத்தகைய ஒரு திடமான உணர்வை மனமும் பெறுகிறது.
அதிகமான மகிழ்ச்சியும் அதிகமான துக்கமும் ஒரு மனிதனைக் கொல்லும் சக்தி படைத்தவை.
தேசபக்கதர் சின்ன அண்ணாமலை தம் 60 ஆம் ஆண்டு நிறைவு விழாவில் மக்கள் கூட்டத்தைக் கண்டார். அந்த மகிழ்ச்சியில் திளைத்தார். அவர் அடைந்த பெருமகிழ்ச்சியில் பிறந்த நாள் அன்றே இறந்தார்.
மகிழ்ச்சியும் அளவுக்கு மீறும்போது துன்பத்தின் எல்லையைத் தொடுகிறது.
உணர்ச்சி வசப்படுவது எப்போது நோயாகிறது?
சாதாரணமாக ஆரோக்கியமான உடலமைப்புக் கொண்டவர்கள் உணர்ச்சி அழுத்தம் முடிந்தவுடன் இரத்த அழுத்தம் முன்னே இருந்த நிலைமைக்குப் படிப்படியாகக் குறைந்து சகஜ நிலைமை அடைகிறார்கள்.
உணர்ச்சி அழுத்தம் அடிக்கடி ஏற்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதிக நேரம் இந்த நிலை நீடிக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.
அப்போதுதான் அது நோயாகிறது. இரத்த அழுத்த நோயாக உருவெடுக்கிறது. நீண்ட நேர இரத்த அழுத்தம் குடற்புண்ணாக மாறுகிறது.
பீதியால் ஏற்படுகின்ற அச்சம், நெஞ்சை உருக்கும் கவலை, எதிர்பாராத இழப்புக்கள், முயற்சிகளில் தோல்விகள் ஆகியவை மூளையில் அழுத்தத்தை உண்டு பண்ணி நோயாக வடிவெடுக்கின்றன.
நாளமில்லாச் சுரப்பிகள் இரசாயனப் பொருள்களை, ஹார்மோன்களை நேரடியாக இரத்தத்தில் சேர்ப்பதால் அச்சம், ஆவசம், கடுமையான கோபம் ஆகியவை ஏற்பட்டு உடல் சோர்வடைகிறது.அட்ரினல் சுரப்பிகள் தீவிரமாவதால் இந்தச் சோர்வு ஏற்படுகிறது.
இவை தவிர தைராய்டு சுரப்பிகளின் வேலையும் தீவிரமாகிறது.
அதிக அளவு தைராக்ஸின் இரத்தத்தில் சுரந்து தைராய்டிசம் என்ற கடுமையான நரம்பு மண்டலம் பாதிப்பு ஏற்படுகிறது.
உணர்ச்சிவசப்படுவது அதிகமாகும் போது பித்தநீர் அதிகமாகச் சுரக்கிறது. ஈரல் சம்பந்தமான நோய்கள் உண்டாகின்றன.
டாக்டர்கள், கலைஞர்கள். வழக்கறிஞர்கள், அரசியல் வாதிகள் எல்லோருக்கும் எப்போதும் வேலை இருந்து கொண்டிருப்பதால் இவர்கள் அடிக்கடி உணர்ச்சிவசப்படு கிறார்கள். இதனால் வயிற்று வலி, அல்சர் போன்ற நோய்களுக்கு ஆளாகிறார்கள்.
மனிதனுக்கு ஏற்படும் அச்சம், பயம் இந்த உணர்வுகள் தாம் மனிதனைக் கோழையாக்கி அவனை நிரந்தர நோயாளியாக்குகின்றன.
மகிழ்ச்சி கரமான உணர்வுகள் தோன்றும்போது உள்ளத்தில் கிளுகிளுப்பு ஏற்படுகிறது. கலகலப்பாகப் பேசிச் சிரித்து மகிழ்ந்து போகிறான். இதனால் இளமை அடைகிறான்.
உணர்ச்சிவசப்படுவதால் ஏற்படும் நன்மை இது.கவலை, வருத்தம் மனிதனை மந்தமாக்குகின்றது. இளமைக் காலத்திலேயே அவனைக் கிழவனாக்கிவிடு கின்றன.
ஆகவே எப்போதும் மகிழ்ச்சிகரமான சூழ்நிலைகளை உருவாக்கிக் கொண்டு மனத்தைப் பக்குவப்படுத்திக் கொண்டால் சோக உணர்ச்சிகள் நம்மை ஆட்டிப் படைக்கா.
நரம்புக் கோளாறுகளுக்கு வைட்டமின்B, வைட்டமின் E குறைவே காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இந்தக் குறைகளைப் போக்கும் சத்துள்ள உணவு வகைகளைச் சாப்பிட்டுவந்தால் நரம்புகள் வலுப்படும்.
முருங்கைக் கீரை, முருங்கைக்காய், முருங்கைப்பூ இவை நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
இதுபோல மாம்பழச் சாறும் தேனும் கலந்து சாப்பிட்டுவந்தால் நரம்புத் தளர்ச்சி வராது, கேரட்டும்
நரம்புகளுக்கு வலுவூட்டவல்லது. வாழ்க்கையில் உணர்ச்சிவசப் படாத மனிதனே இல்லை.
ஆகவே உணர்வுகள் தோன்றும் போது மனத்தைப் பக்குவப்படுத்திக் கொள்ளும் மனப் பண்புகளை வளர்த்துக் கொண்டு வாழ்ந்தால் உணர்ச்சிகள் நம்மை உலுக்கா.
இன்ப உணர்வோ, அல்லது துன்ப உணர்வோ தோன்றும்போது அதன் எல்லைகளுக்கே போய்விடாமல் கட்டுப் படுத்திக் கொண்டால் உணர்ச்சி அழுத்த நோய்களால் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது.
Comments
Post a Comment