Skip to main content

Google ads

முகத்தில் எண்ணெய் வடிகிறதா ? தடுப்பது எப்படி ? தமிழ் சித்த மருத்துவம்

 பிறவியிலேயே சிலர் அழகிய முகத் தோற்றத்தைப் பெற்றிருக்கிறார்கள்.

இயற்கை அழகு இல்லாதவர்கள் செயற்கை முறையில் அழகை உருவாக்கிக் கொள்ள இன்று எத்தனையோ அழகுச் சாதனங்கள் கடைகளில் அலங்காரமாக அடுத்தி வைக்கப் பட்டு விற்பனையாகிவருகின்றன.

முக அழகிற்கு இடையூறாக இருப்பவை முகப்பரு, மற்றும் தழும்புகள், கருஞ் சினைப்புகள், வெள்ளைப் புள்ளிகள் போன்றவைதாம்.


முகப்பரு. Black head என்று சொல்லப்படும் கருஞ் சினைப்புகளுக்குக் காரணம் முகத்தில் எண்ணெய்ப் பசையே என்று மருத்துவ விஞ்ஞானிகள் சொல்லுகிறார்கள். 

எண்ணெய்ப் பசை ஏன் உண்டாகிறது?

வியர்வையே இதற்குக் காரணம். முகத்தில் எண்ணெய்ச் சுரப்பிகள் அதிகமாக உள்ளன. முகம் வறண்டு போகாமல் இருக்க எண்ணெய்ப்பசை ஓரளவு தேவைதான்.

அளவுக்கு மீறி எண்ணெய் முகத்தில் படர்வது நல்ல தல்ல. இதனால் வேறு சில கோளாறுகளும் உண்டாகின்றன. 

முகத்தில் வழியும் எண்ணெய்க்குக் காரணம் நாம் உண்ணும் உணவில் கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதுதான்.

கொழுப்பிலிருந்து எண்ணெயைப் பிரித்து வெளியே கொண்டுவருபவை வியர்வைச் சுரப்பிகள். வியர்வைத் துவாரங்கள் மூலம் எண்ணெய் வெளியேறப் படுகிறது. 

இந்த எண்ணெய் முகத்தில்தான் அதிகமாகப் படிகிறது. உடம்பின் எல்லாப் பகுதிகளிலும் வியர்வை வெளியே வந்தாலும் முகத்தின் மூலம்தான் அதிகமாக வெளியேறுகிறது. 

குறிப்பாகச் சொன்னால் பருவ வயது இளைஞர்களுக்கும், இளம் பெண்களுக்கும் முகத்தில் எண்ணெய் அதிகமாக வழிகிறது. இந்தப் பருவத்தில் உள்ளவர்களுக்கு வியர்வைச் சுரப்பிகள் மிகச் சுறுசுறுப்பாக இயங்குவதுதான் இதற்குக் காரணம்.

இந்தப் பருவத்தில்தான் முகப்பருக்கள் அதிகமாக உண்டாகின்றன.இதற்குக் காரணம் எண்ணெய்ப் பசை, Acne Pacillus என்ற கிருமி இந்தப் பசையைப் பயன் படுத்திக் கொண்டு பருக்களை உண்டாக்குகிறது.

முகத்தில் வெயில் படும்போது அதை ஈடு செய்ய முகம் குப்பென்று வியர்க்கிறது.

இதுதவிர கடுமையான உழைப்பு, கவலை, அச்சம், அதிர்ச்சி தோன்றும்போதும் முகத்தில் வியர்வைத் துளிகளுடன் எண்ணெயும் வெளிவருகிறது.

எண்ணெய் வழியும் முகம் இயற்கை அழகைப் பாதிக்கிறது, முகத்திற்கு மினு மினுப்பைக் கொடுத்தாலும் அழகிய தோற்றத்தைச் சற்றுக் குறைத்துக் காட்டி விடுகிறது. 

எண்ணெய் முகத்தில் படர்வதை நீக்க என்ன செய்யலாம்?

கொழுப்புப் பதார்த்தங்களையும், நெய், எண்ணெய்ப் பண்டங்களையும் குறைவாகச் சாப்பிடலாம், இனிப்புப் பண்டங்களை விலக்கலாம். மாவுப் பண்டங்களை ஒதுக்கலாம்.

இதற்குப் பதிலாகப் பப்பாளி, கேரட், கோஸ், கீரை வகைளைச் சாப்பிடலாம். மாதுளை மற்றும் அத்திப் பழங்களைச் சாப்பிடலாம். இவை எல்லாம் முகத்தில் எண்ணெய் படிவதைத் தடுக்கும்.

எல்லோருக்குமே முகத்தில் எண்ணைய் படிகிறதா என்றால் இல்லை. சிலருக்கு மட்டுமே இந்தத தொந்தரவு தொடர்கிறது. இதனால் எண்ணெய் வழியும் முகம் படைத்தவர்கள் மட்டும் கொஞ்சம் கவனமாக இருந்தால் போதும்.

உணவில் கட்டுப்பாடு என்பது இளம் பருவத்தினருக்கு முடியாத நிலை, இதனால் இவர்களுக்கு வேறு சில வழிகள் உண்டு.

தினசரி பத்து நிமிடம் காலையிலும் மாலையிலும் முகத்தை வெந்நீர் விட்டுக் காரமில்லாத மிதமான சோப்பைப் போட்டு முகத்தைக் கழுவிப் பிறகு குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவி துணியால் ஈரம் போக துடைக்க வேண்டும். பவுடரைப் பரவலாகத் தடவிக் கொள்ள வேண்டும்.

முகத்தைக் கழுவிய பிறகு எலுமிச்சம் பழத்தை இரண்டாக அறுத்து ஒரு பாதியைப் பிழிந்து சாறு எடுத்து முகத்தில் தடவலாம். பிறகு முகத்தைக் கழுவலாம். 

இதுதவிர ஆல்கஹால் கலந்த Witch hazel க்ரீம் தடவலாம். இதிலுள்ள ஆல்கஹால் எண்ணெய்ப் பசையை நீக்குகிறது.

எலுமிச்சம் பழச் சாறு அரை மூடி பிழிந்து அதில் கிளிசரைன் மூன்று துளி, பன்னீர் மூன்று துளி விட்டுக் கலக்கி முகத்தில் தடவலாம்.

இது தவிர அழகுச் சாதனக் கடைகளில் ஆஸ்டிரின் ஜென்ட்ஸ் என்ற லோஷன் விற்கிறது. அதையும் தட வலாம். எண்ணெய்ப் பிசுபிசுப்பு நீங்கும்.

பாதாம் பருப்பு எண்ணெயுடன் தேன் சில சொட்டுக்கள் கலந்து முகத்தில் தடவலாம். முகம் பளபளப்பாக மாறும். எண்ணைப் படியாது. முகத்தைச் சோப்பு போட்டுக் கழுவி துடைத்துவிட்டு

லாக்டோ காலமைன் பூசலாம். நீராவியில் முகத்தைக் காட்டினால் வியர்வை சொட்டும். அதைத் துடைத்துவிட்டு ஏதாவது லோஷன் தடவலாம்.

கரும்புள்ளிகள் இருந்தால் சல்பர் சோப்புப் போட்டு முகம் கழுவலாம். முகத்தில் எண்ணெய் வழிந்தால் அழகு கெடும்.

முகத்தில் எண்ணெய்யும் வழியக் கூடாது; அசடும் வழியக்கூடாது.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...