✷உயரமாகவோ, அல்லது குள்ளமாகவோ இருக்க யார் காரணம் என்று ஆராய்ந்ததில் பெற்றோர் காரணம், நம் முன்னோரே காரணம், என்று ஆராய்ச்சிகளின் முடிவு தெரிவித்தது.
✷பெற்றோர்களும், முன்னோர்களும், உயரமாக இருந்தால் அந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்கள் உயரமானவர்களாக வளர முடியும் என்று விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்தனர்.
✷இந்தக் கருத்தில் ஓரளவு தான் உண்மை இருக்கிறது என்று பிறகு வந்த விஞ்ஞானி ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துச் சொன்னார்கள்.
✷ஒரே குடும்பத்தில் ஒருவர் குள்ளமாகவும், மற்றவர் நெட்டையாக உயர்ந்தும் இருக்கும் போது இதற்கும் பெற்றோர் அல்லது தாத்தா பாட்டிகள் காரணமாக இருக்க முடியாது.வேறு ஏதாவது காரணம் இருக்கவேண்டும் என்று முடிவுக்கு வந்தார்கள்.
✷அவர்களின் ஆராய்ச்சிப்படி மனித மூளையில் பிட்டியூட்டரி கிளாண்ட் என்ற ஒரு சுரப்பியிலிருந்து உற்பத்தியாகும் ஹார்மோன் என்ற ஒருவித இரசாயனப் பொருளே ஒருவர் உயரமாகவும் குள்ளமாகவும் வளரக் காரணம் என்று கண்டு பிடித்துச் சொன்னார்கள்.
✷ 1920 ல் கலிபோர்னியா பல்கலைக் கழக டாக்டர் ஹெர்பர்ட் எம் எவன்ஸ் என்பவர் மாடு ஒன்றின் ஹார் மோனை எடுத்து, எலிகளின் உடலில் செலுத்தினார். எலிகள் அசுரத்தனமாக வளர்ந்து பிரமிக்க வைத்து விட்டன.
✷1956ல் உக்கிரேனைச் சேர்ந்த கினிலோரி பாவ் என்ற மருத்துவப் பேராசிரியர் உயரக் குறைவான 11 பேரை பிட்டியூட்டரி சுரப்பியிலுள்ள ஹைபோபிசிசை என்ற இரசாயனப் பொருளை மாற்றி அமைத்தார். இந்தக் குள்ளர்கள் மூன்று வருடங்களில் 21 சென்டி மீட்டர் உயரமாக வளர்ந்து விட்டார்கள்.
✷மெதியான் ரோஸ்டினோலான் என்ற மருந்தை உபயோகித்தும் குள்ளர்களை உயரமாக்கினார் இவர்.உயரமாக வளர மூளையில் அடிப்பகுதியில் ஓர் எலும்புக் குழியில் மொச்சைக் கொட்டை அளவில் பிட்டியூட்டரி சுரப்பி இருக்கிறது. இதிலிருந்து ஆறு வகை ஹார்மோன்கள் சுரக்கின்றன.
✷ஹார்மோன் என்றால் ஊக்கிவிடு, கிளறிவிடு என்று கிரேக்க மொழியில் அர்த்தம். இந்த இராசயனப் பொருள் அதிகமாகவும் சுரக்கும். இதுவே வளர்ச்சியைத்தூண்டுகிறது. இந்த ஹார்மோனைத் தனியாகப் பிரித்து மருந்து களாக்கி உடல் வளர்ச்சிக்கு வழி செய்கிறார்கள்.
✷இந்த மருந்தை மெதில் டெஸ்டோஸ்டிரோன் என்று சொல்லுகிறார்கள். இந்த மருந்தை டாக்டர்களின் அனுமதி பெற்றே சாப்பிட வேண்டும்.
✷இது போலவே ஆண்களின் விதைப் பையில் டெஸ்டோஸ்டிரோன் என்னும் ஹார்மோன் வளர்ச்சியைத் தூண்டும் இராசயனப் பொருள் இருக்கிறது. இதையும் வளர்ச்சிக்குப் பயன்படுத்துகிறார்கள். உயரமாக வளர ஈஸ்ட் மாத்திரைகளைச் சாப்பிட வேண்டும் என்றும் டாக்டர்கள் கூறுகிறார்கள்.
உயரமாக வளர என்னென்ன பொருள்கள் சாப்பிட வேண்டும்?
✷காட் லிவர் ஆயில் தினசரி ஒரு கரண்டி சாப்பிட்டாலும் வளர்ச்சி உண்டாகிறது என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
✷உடலின் வளர்ச்சிக்கு குழந்தைப் பருவ முதல் புரோட்டீன் சத்துள்ள ஆகாரங்களைக் கொடுக்க வேண்டும். எலும்பு வளர்ச்சி பெறச் சுண்ணாம்புச் சத்துள்ள ஆகாரங்களைச் சாப்பிட்டுவர வேண்டும்.
✷திறந்த வெளியில் உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டும். ஆசனப் பயிற்சிகளில் பத்மாசனம், புஜங்காசனம் முதுகு எலும்புகளை நேராக வளரத் துணைசெய்கின்றன.
✷வளர்ச்சிக்கு ஊட்டச் சத்துக்கள் மிகமிக அவசியம்.
✷காப்பி, டீ, புகையிலை ஆகியவற்றைச் சிறு வயதிலிருந்தே விலக்கி வந்தால் நல்ல வளர்ச்சி ஏற்படும். காற்றோட்டமுள்ள அறைகளில் தூங்க வேண்டும்.
✷நல்ல தூக்கமும் உடல் ஆரோக்கியமும் அவசியமாகின்றன.
✷உடலின் வளர்ச்சிக்கு ஒரு கால கட்டம் உண்டு. 22 வயது வரையில் வளர்ச்சி விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும்.
✷குள்ளமானவர்கள் சிறு வயதிலிருந்தே வளர்ச்சிக்குத் தேவையான எல்லா விஷயங்களிலும் கவனமாக இருந்து செயல்பட்டால் உயரமாக வளரலாம். வளர வேண்டிய பருவகாலத்தில் தீய ஒழுக்கங்களில் ஈடுபட்டால் வளர்ச்சி அடையமுடியாது.
✷புரதச் சத்துக்கள் நிறைந்த கடலை, பட்டாணி. பாசிப்பயறு, துவரம் பருப்பு சாப்பிடலாம். பாதாம் பருப்பு. பிஸ்தா பருப்பு சாப்பிடலாம். அத்திப்பழம், பேரீச்சம் பழம் சாப்பிடலாம்.
✷எலும்புகளுக்கு வலுவூட்டும் சுண்ணாம்புச் சத்து மிகுந்த முள்ளங்கி, கேரட், பீட்ருட், கோதுமை உணவு சாப்பிட வேண்டும். கரும்புச் சாற்றுடன், இஞ்சிச்சாறும் கலந்து தினசரி சாப்பிடலாம்.
✷சத்துணவுடன் உடற்பயிற்சிகளும் உயரமாக வளர உதவுகின்றன.
✷இறுக்கமான ஆடைகள் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கின்றன. ஆகவே இளைஞர்கள் மிகுந்த கவனம் செலுத்தினால் பருவ காலத்தில் நல்ல வளர்ச்சிக்கு வழி உண்டு.
✷வளரும் வயதைக் கடந்து விட்டவர்கள் இதை ஒரு பெரிய குறையாகக் கருதிக்கொள்ளாமல் மற்ற செயல் திறமைகளின் மூலம், தாழ்வு மனப்பான்மையைத் தகர்த்து எறிவதன்மூலமும் இந்தக் குறையை ஈடுகட்டலாம்.
Comments
Post a Comment