Skip to main content

Google ads

வியர்வை நாற்றம் போக என்னென்ன செய்ய வேண்டும்?

 நம்மைச் சுற்றியுள்ள இடமும் சரி, சுற்றியுள்ள மனிதர்களும் சரி, தூய்மையாக இருந்தால் அந்த இடத்தையும், மனிதர்களையும் விட்டு நாம் விலகிப் போக விரும்பமாட்டோம்.

என்னதான் அறிவாளியாக இருந்தாலும், நல்லவனாக இருந்தாலும் மிக வேண்டியவனாக இருந்தாலும் அவனிடம் கெட்ட வாடை வீசினால் நெருங்கிப் பழக நம் மனம் இடம் தருவதில்லை.

ஆகவே மக்களைக் கவர்ந்து இழுக்க நல்ல குணம் இருந்துவிட்டால் மட்டும் போதாது. நல்ல வாடையும் நம்மைச் சுற்றி வீசவேண்டும்.

மனிதன் நெருங்கிப் பழகத் தடையாக இருப்பது வாய் நாற்றமும், வியர்வை நாற்றமும் என்பதை எவரும் ஒப்புப் கொள்வர்.

கெட்ட வாடை காரணமாக, கணவன் மனைவி நல்லுறவுகள் பாதிக்கப்படுகின்றன.

ஆகவே மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய பல விஷயங்களில் உடல் தூய்மையும் ஒன்று.

உடல் நாற்றத்திற்குக் காரணம் குடல் நாற்றம், குடல் சுத்தமாக இருந்தால் உடல் சுத்தமாக இருக்கும். 

ஆகவே இதற்கு மலச்சிக்கல் ஒரு காரணம், மலச்சிக்கல் உள்ளவர்களின் உடம்பிலிருந்து வரும் வியர்வை நாற்ற மடிக்கிறது என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

வியர்வை நம் உடலுக்கு நன்மை செய்வதற்காகவே அமைந்த ஒரு நல்ல திரவம். தினசரி 24 மணி நேரத்தில் சுமார் 75 அவுன்ஸ் தண்ணீர் நம் உடலை விட்டு வியர்வையாக வெளியேறுகிறது. உடல் உஷ்ணத்தைச் சமப்படுத்த இன்றியமையாதது.

வியர்வைச் சுரப்பிகளை ஆராய்ந்த விஞ்ஞானிகள் நம் உடலில் இரண்டு வகையான சுரப்பிகள் இருப்பதாகச் சொல்லுகிறார்கள்.

ஒன்று எக்கிரைன்.

மற்றொன்று அப்போகிரனை.

உள்ளங்கை உள்ளங்கால் முதல் உடல் முழுவதும் எக்கிரைன் சுரப்பிகள் வியர்வையை உற்பத்தி செய்கின்றன.

இதில் சோடியம் குளோரைடு, யூரியா உப்புகள் உள்ளன. இரண்டாவது வகையான அப்போகிரைனுக்குத் தனி மணம் உண்டு.

மார்பு, அக்குள், தொடை இடுப்புகள் ஆகிய இடங்களில் இந்த அப்போ கிரைன் அதிகமாகச் சுரந்து ஒருவித வாடையை வீசச் செய்கிறது.



இது பாலுணர்வைத் தூண்டக்கூடியது என்ற இரகசியத்தையும் சொல்லுகிறார்கள் விஞ்ஞானிகள்.

நம் உடம்பில் சிம்பதெடிக் நெர்வஸ் சிஸ்டம் என்ற அமைப்பு உள்ளது. இவை வியர்வைச் சுரப்பிகளைத் தூண்டிவிட்டு வியர்வையை அதிகமாக வெளியேற்றுகிறது. 

பயம், கவலை கடுமையான உழைப்பு இந்த நேரங்களி உள்ளங்கை, உள்ளங்கால் பகுதியில் வியர்வை சிலருக்கு அதிகமாகச் சுரக்கிறது. இந்தப் பிரிவு நரம்புகள் பலகீனமாகிற தளர்ச்சி அடைவதால் சிலருக்கு அதிகமாக வியர்வை கொட்டுகிறது.

நிமோனியா, மூட்டு வாத நோய் மற்றும் ஸ்கர்வி நோயாளிகளுக்கு வியர்வை நாற்றம் பெரும்பாலும் இருக்கும். பெண்களுக்கு மாதவிடாய்க் காலங்களில் அதிகமாக வியர்க்கும்.

நரம்புத்தளர்ச்சி அதிகம் உள்ளவர்களுக்கு மிகுதியாக வியர்வை சுரக்கும்.

டி.பி. நோயாளிகளுக்கு இரவில் அதிகமாக வியர்த்துக் கொட்டும். ஹார்ட் அட்டாக் வரும் நேரத்தில் அதிக வியர்வை உண்டாகும்.

வைட்டமின் குறைவு நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் வியர்வை அதிகமாக வெளியேறும்.

அடிக்கடி வியர்த்து; தோல் ஈரம் கண்டுவிட்டால் அது தொற்று நோய்களுக்கு இடமாகிவிடும் இது நல்லது அல்ல,வியர்வைத் திரவத்தில் நாற்றம் வீச என்ன காரணம்? இதற்குப் பல்காரணங்கள் சொல்லப்படுகின்றன. வியர்வை புளித்துப் போவதால் நாற்றம் அடிக்கிறது. கிருமித் தொற்று ஏற்பட்டால் வியர்வை நாறுகிறது.

வியர்வையில் இரசாயன மாறுதல் ஏற்பட்டால் நாற்றம் உண்டாகிறது. 

சிலவகை உணவுகளும், நோயாளிகளுக்குக் கொடுக்கப் படும் சில மருந்துகளும் வியர்வையை நாற்றமடையச் செய்கின்றன.

குளிக்காத காரணத்தால் வியர்வை அழுக்குகள் உடம்பில் படிந்து நாற்றத்தை உண்டாக்குகிறது.

வியர்வை நாற்றத்தைப் போக்க என்ன வழி? முதலில் மலச்சிக்கலைப் போக்க வேண்டும். இதற்கு மருந்துகள் நிறைய உண்டு. இரண்டாவது வியர்வையைப் போக்க வெயில் நாட்களில் தினசரி இரண்டு வேளை குளிக்கவேண்டும்.

உடுத்தும் ஆடைகளைத் திரும்பத் திரும்ப உடுத்தக் கூடாது. துவைத்துப் பயன்படுத்த வேண்டும்.

காரமான சோப்புகளை அடிக்கடி அதிசுமாக உபயோகிக்கக் கூடாது. இது உடலின் தோலில் உள்ள செல்களை அழித்துவிடுகின்றன.

ஆகவே சோப்பு உடம்புக்கு கெடுதல் செய்யாததாக இருக்கவேண்டும். 

மூலிகைகள் கலந்த சோப்புகளை உபயோகிக்க வேண்டும். கமுக்கட்டு, தொடை இடுக்குகளில் வியர்வையால் அழுக்கு சேர்கிறது. அந்த இடங்களிலுள்ள ரோமங்களை நீக்கவேண்டும்.

சிலருக்கு வியர்வையில் கற்றாழை நாற்றம் வீசும். வியர்வையில் சில நுண்ணுயிர்கள் வளர்வதால் இப்படி உண்டாகிறது.

இந்த நுண்ணுயிர்கள் வியர்வையில் இரசாயன மாற்றத்தை உண்டாக்கி மஞ்சளாகவும், பச்சையாகவும் நீலமாகவும் நிறமாற்றத்தை உண்டாக்குகின்றன. ஆகவே நுண்ணுயிர்க் கிருமிகளை ஒழிக்கவேண்டும்.

அப்போதுதான் நாற்றம் ஒழியும். இதற்குப் படிகாரம் சுரைத்த நீரில் கை கால்களைக் கழுவ வேண்டும். இப்பழக்கம் வியர்வை அதிகமாக வராமல் தடுக்கிறது. ஈரத்தைப் போக்கி நாற்றத்தை மாற்றுகிறது.

வியர்வையைக் கட்டுப்படுத்த சாலிசிலிக் ஆசிட் போரிக் பவுடர்: டால்கம் பவுடர் கலந்த கலவையை உடம்பில் தேய்த்துவந்தால் வியர்வை அடங்கும்.

கமுக்கட்டு போன்ற மறைவிடங்களில் 5% சதவீதம் படிக்கார நீர் 70% சதவீதம் மெடிக்கல் ஆல்கஹால் கலந்து தேய்க்கலாம். நாற்றம் மறையும்.

தினசரி குளிக்கும்போது மூலிகைக் குளியல் முறையில் குளிக்கலாம்.

அதாவது, பகலில் ஒரு பக்கெட்டில் தண்ணீர் நிரப்பிக் கொண்டு அதில் வேப்பம் இலை, தும்பைச் செடி இலை, நன்னாரி வேர், வெட்டி வேர்போட்டு ஊறவைத்து அடுத்த நாள் காலையில் இந்த மூலிகைந் தண்ணீரில் குளித்து வந்தால நாற்றம் பறந்துவிடும். இவை தவிர, சிறிதளவு நீரடி முத்து என்ற மருந்துடன் சிறிதளவு கசகசாவை அரைத்து உடம்பு முழுதும் தேய்த்துக் கொண்டு பிறகு வேப்பம் சோப்புப் போட்டுக் குளிக்கலாம்.

வியர்வை நாற்றம் போகும்.

Comments

Popular posts from this blog

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவ...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...