✷மனிதன் தன் சுயநலத்திற்காக மிருகங்களையும் பிராணிகளையும் பயன்படுத்திக்கொண்டு அவற்றைத் தன் வீட்டிலேயே வளர்க்க ஆரம்பித்தான்.
✷சவாரி செய்யக் குதிரையையும், பாலுக்காகப் பசுவையும், ஆட்டையும், உழவுக்காக மாட்டையும், காவலுக்காக நாயையும், எலிகளை ஒழிக்கப் பூனையையும் வளர்க்க ஆரம்பித்தான். அவற்றின் மீது பரிவுகாட்டி நாய் பூனைகளை மடிமீது வைத்துக் கொஞ்சவும் ஆரம்பித்தான்.
✷இதனால் பிராணிகளைத் தாக்கும் நோய்கள் மனிதனுக்கும் தொற்றிக்கொண்டு மனிதனை ஆட்டிப் படைத்தன.
✷நாம் விரும்பாமலே நம் வீட்டுக்குள் புகுந்து தொல்லை கொடுக்கும் பிராணி எலி. எப்படியோ அடுக்களையில் புகுந்துகொண்டு சமையலுக்காக வைத்திருக்கும் அரிசி, பருப்பு, காய்கறி பொருட்களைத் தின்று நமக்குத் தொல்லை கொடுப்பதிலிருந்து பிளேக் நோயைப் பரப்புவது வரை எலிகள்-பெருச்சாளிகள் பல கெடுதல்களைச் செய்கின்றன.
✷எலிகளின் இரத்தத்தை உறிஞ்சி வாழும் ஒருவகை ஈக்கள் மனிதனைக் கடிக்கின்றன. எலியிடம் பெற்ற நோய் மனிதனுக்குப் பரவுகிறது. பிளேக் நோய் உண்டாகிறது. இப்போது இந்த நோயின் அட்ட காசங்கள் குறைந்துவிட்டன என்றாலும் முற்றிலும் ஒழியவில்லை.
வீட்டுப் பிராணிகளால் உருவாகும் நோய்கள் |
✷ஈக்கொல்லி மருந்துகளையும் போட்டு வீட்டைவிட்டே இவற்றைத் துரத்தவேண்டும்.
✷வீட்டு நாய்களில் சில ராபீஸ் என்ற வெறி நோயால் தாக்கப்பட்டு மனிதர்களைக் கடிக்கவும் செய்கின்றன. வீட்டுப் பிராணிகளான ஆடு, மாடு, கோழிகளைக் கடித்து அதன் மூலம் வெறி நோயைப் பரப்பி மனிதனுக்கு மரணத்தை உண்டாக்குகின்றன.
✷இதுதவிர வீட்டு நாய்களுக்கு இன்னொரு நோயும் பரவுகிறது. இதற்கு ஹைடடிட்சிஸ்டு என்று பெயர். நாயின் உடலில் உண்ணி என்று சொல்லப்படும் ஒருவகைப் பூச்சிகள் ஒட்டிக்கொண்டு வளர்கின்றன.
✷இதனால் சுல்லீரல், நுரையீரல், மூளை, இருதயம், தசைகள், எலும்புகள் சில நோய்களுக்கு ஆளாகி மனிதனுக்குப் பல தொல்லைக்ளை உண்டாக்குகின்றன. தெருநாய்களுக்குப் பரவி அதன் மூலம் வீட்டு நாய்களுக்குப் பரவுகிறது.
✷ஆடுகளுக்கு அந்த்ரக்ஸ் என்று சொல்லப்படும் மூட்டடைப்பான் என்று ஒரு நோய் பரவுகிறது. கசாப்புக் கடைக் காரர்கள், தோல் பதனிடும் தொழிலாளிகள், கம்பளித்துணி நெய்பவர்களுக்கு இந்த நோய் பரவ வாய்ப்பு இருக்கிறது.
✷மேலும் ஆட்டுப்பால், ஆட்டு மாமிசம் சாப்பிடு கிறவர்களும் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள்.
✷மனிதர்களுக்கு வரும் டி.பி நோய் மாடுகளுக்கும் வருகிறது. டி.பி நேரய் பாலின்மூலம் மனிதர்களுக்கும் உண்டாகிறது.ஆகவே பாலை நன்கு காய்ச்சிக் குடிக்கவேண்டும்.
✷மிருகங்களின் தோல் செருப்பாகவும், கொம்பு சீப்பாகவும் மாறும்போது மனிதனுக்குச் சில தொல்லைகள் பரவாமலிருப்பதில்லை.
✷வீட்டுப் பூனைகளுக்கும், கிருமிகளால் சில நோய்கள் பரவுகின்றன. இதனால் சிறுவர்கள் சிறுமிகள் பூனையை அருகில் வைத்துக் கொண்டு தூக்கிக் கொஞ்சுவதாலும் நோய் பரவுகிறது.
✷முயல்களுக்கும் கிருமிகளால் சில நோய்கள் பரவுகின்றன. இவை வீட்டில் வளர்க்கப்படுவதால் மனிதர்களை அவர்கள் அறியாமல் தாக்குகிறது.
✷கர்ப்பமான பெண்களுக்குப் பூனையால் உண்டாகும் நோய் பரவி பிரசவகாலத்தில் தொல்லை உண்டாக்குகிறது. குழந்தைகளுக்கும் இதனால் பாதிப்பு உண்டாகிறது.
✷மனிதனுக்கு என்னென்ன நோய்கள் உண்டாகின்றனவோ அந்த நோய்கள் எல்லாம் பிராணிகளுக்கும் உண்டாகின்றன.
✷பிராணிகளுக்கு என்ன நோய்கள்உண்டாகின்றனவோ அந்த நோய்கள் மனிதர்களுக்கும் உண்டாகின்றன.
✷இதனால் வீட்டில் செல்லமாக வளர்க்கப்படும் பிராணிகள் விஷயத்தில் வீட்டுப் பெரியவர்கள், சிறுவர்கள் முதலானோர்கள் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
✷பிராணிகளை கவனிக்கக் கால்நடை மருத்துவ மனைகள் இருக்கின்றன. பூனைக்கோ, ஆட்டுக்கோ. மாட்டுக்கோ. நாய்களுக்கோ எந்த வகைப் பிணிகள் ஏற்பட்டாலும் உடனே கவனித்து மருந்து கொடுத்து வந்தால் பிராணி நோய்கள் மனிதனுக்குத் தொற்றா.
✷பிராணி நோய்தானே, அது நம்மை ஒன்றும் செய்யாது என்று அலட்சியமாக இருக்கக்கூடாது. நாம் குளிப்பது போலப் பிராணிகளையும் குளிப்பாட்ட வேண்டும். அவற்றின் உடலைச் சுத்தம் செய்யவேண்டும். பிராணிகளுக்கு என்று தனி இடம் ஒதுக்கவேண்டும். அதன் கழிவுகளை உடனுக்குடன் அப்புறப்படுத்த வேண்டும்.
✷சமையல்கட்டில் எந்தப் பிராணிகளையும் அண்ட விடாதீர்கள். படுக்கையில் படுக்க வைக்காதீர்கள். பிராணி மாமிசங்களை சாப்பிடுவதை முடிந்தவரை தவிருங்கள்.
✷நமக்கு வரும் நோய்களையே நம்மால் தடுக்க முடியாத போது பிராணிகளையும் வீட்டில் சேர்த்து வைத்துக் கொண்டு ஏன் வீண் தொல்லைகளையும் அனுபவிக்க வேண்டும்? யோசித்துப் பார்த்து நீங்களே முடிவுக்கு வாருங்கள்!
Comments
Post a Comment