சரிவிகித உணவு அர்த்தம் :
✷ நம் உணவை ஆறு பிரிவுகளாகப் பிரித்திருக்கிறார்கள். சக்தி கொடுக்கும் மாவுப் பொருள்கள், வளர்ச்சியைத் தரும் புரதம், கொழுப்புப் பொருள்கள், வெப்பமும் சக்தியும் தரும் உணவுப் பொருள்கள்.
✷ ஜீவ சத்துக்கள் உலோக உப்புக்கள், மற்றும் குடிநீர் ஆகியவை நம் உணவில் தகுந்த அளவில் கலந்தும்,சரியான விகிதத்திலும் இருக்கவேண்டும். இதுவே சரிவிகித உணவு என்று உணவு விஞ்ஞானம் கூறுகிறது.
ஆறு சுவைகளும் அவற்றின் நன்மைகளும்:
✷ உணவில் இன்னொரு விஷயமும் கவனிக்கப்பட வேண்டும். ஆறு சுவைகளும் அளவோடு கலந்திருக்க வேண்டும்.
✷ காரச்சுவை உடலுக்கு உஷ்ணத்தை அளிப்பது. உணர்வுகளைக் கூட்டவும் குறைக்கவும் செய்வது.
✷ கசப்புச் சுவை உடலுக்குத் தேவையில்லாத கிருமிகளை அழிக்கவும், சக்தியை உண்டாக்கவும் உதவுகிறது.
✷ இனிப்புச் சுவை தசைகளை வளர்க்க உதவுகிறது.
✷ புளிப்புச் சுவை இரத்தக் குழாயில் உள்ள சுசடுகளை நீக்க உதவுகிறது.
✷ துவர்ப்புச் சுவை இரத்தத்தை வீணாக வெளியேறாமல் உறையச் செய்வது.
✷ உப்புச் சுவை அளவோடு சேர்த்துக் கொண்டால் நினைவாற்றலை அளிக்க உதவுகிறது.
ஆக, இந்த ஆறு சுவைகளில் ஏதாவது ஒன்று குறைந்தாலும் உடலுக்குக் கேடு உண்டாகிறது.
✷ சிலர் சுசப்புச் சுவையை ஒதுக்கி விடுகிறார்கள். இதனால் உடல் நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள். பெரும் பாலான நோய்களுக்குக் காரணம் கசப்புச் சுவையை விலக்குவதுதான்.
சத்துணவு என்றால் விலை உயர்ந்த காய்கறிகள்.பழங்கள் என்று அர்த்தமா?
✷ இல்லை.சத்துணவு என்றால் விலை உயர்ந்த காய்கறிகள்.பழங்கள் என்று அர்த்தமல்ல. மளிவாகக் கிடைக்கும் உணவுப் பொருள்களில் அற்புதமான சக்தி தரும் சத்துக்கள் நிறைந்திருக்கின்றன.
✷ நாம் சாப்பிடும் அரிசி உணவில் சத்துக் குறைவாக இருக்கிறது. இயந்திரத்தில் அரிசி அரைக்கப்படுவதால் அதன் உயிர்ச்சத்து நீங்கி விடுகிறது. கோதுமை உணவில் சத்து நிறைந்திருக்கிறது. தமிழர்கள் கோதுமையை அதிக அளவில் சேர்த்துக் கொள்ளவேண்டும். கம்பு, கேழ்வரகு, சோளம் ஆகிய தானியங்களில் சத்து நிறைய உள்ளது.
சத்தான உணவு கிடைக்காதவர்கள் என்ன செய்யலாம் ?
✷பசும்பால் வாங்கச் சக்தியற்றவர்கள் இப்படி செய்யலாம். நிலக்கடலையை அம்மியில் வைத்து அரைத்து ஒரு வழி அதிலிருந்து பால் எடுத்துக்கொண்டு வாழைப் பழம் ஒன்று சேர்த்து சத்துள்ள உணவைத் தயாரித்துக்கொள்ளலாம், ஆரஞ்சுப்பழம் விலை உயர்ந்து நிற்கிறது. இதை வாங்க முடியாதவர்கள் நெல்லிக்காய் சாப்பிடலாம். வைட்டமின் சி-சத்து நிறைய உள்ளது.
✷கோழி முட்டை வாங்கச் சக்தியற்றவர்கள். கத்தரிக்காய் வாங்கிச் சாப்பிடலாம். முட்டையிலுள்ள அத்துனைச் சத்துக்களும் கத்தரிக்காயில் இருக்கின்றன. கீரை வகைகளில் எல்லாச் சத்துக்களும் நிரம்பியிருக்கின்றன. விலையும் மலிவு.
✷நோயை எதிர்க்கும் சக்தி எல்லாக் கீரைகளிலும். எல்லாப் பழங்களிலும் இருக்கிறது.பருவக்காலத்தில் வரும் எல்லாப் பழங்களையும் வாங்கிச் சாப்பிடலாம். சாதாரணமாசுக் கடைகளில் கிடைக்கும் வாழைப் பழத்தில் ஓர் உடலுக்குவேண்டிய அத்துணையும் உண்டு. தினசரி இரண்டு வாழைப் பழம் சாப்பிட்டு வரலாம் .
Comments
Post a Comment