உடல் பாரத்தைத் தாங்குவது இடுப்பு:
இந்த இடுப்புப் பகுதியில் 33 க்கு மேற்பட்ட எலும்புகளும், தசை நார்களும், இரத்த நாளங்களும், அதன் கிளைகளும் ஏராளமாக இருக்கின்றன. இவற்றுள் ஏதாவது பாதிக்கப்பட்டால் முதுகு வலி மற்றும் இடுப்பு வலிகள் தோன்றுகின்றன.
இந்தப் பகுதியில் தோன்றும் வலிகளை உண்டாக்கும். நோய்க்கு லம்பாரேக் என்று பெயர். ஈரத்தில் அதிகமாக நடமாடுவதாலும், கடிஎமாக உழைக்கும்போது உடல் மீது குளிர்ந்த காற்றுப் படும் போதும், இருமல், தும்மில் ஏற்படும் போதும்,
விபத்தில் சிக்கி இடுப்பில் அடிபடும்போதும், வாயு வேகத்தைக் கிளப்பிவிட்டு விடுகிறது. இதனால் இடுப்பில் பிடிப்பும், வலியும் உண்டகின்றன.
கோணல்மாணலாக உட்காருபவர்களுக்கும் தலையை சாய்த்துக் கொண்டு உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கும்.,இரத்தம் உடலெங்கும் சரிவரப் போய்ச் சேராதவர்களுக்கும். இடுப்பு வலிகள் வரலாம்.
இடுப்பு எலும்புகள், நரம்புகள், தசைகள், இரத்த நாளங்கள் உள்ளுறுப்புக்களில் ஏற்படும் கோளாறுகளால் அழுத்தப்படும்போது கழுத்து வலி, முதுகுவலி, இடுப்புவலி ஆகியவை ஒன்றையடுத்து இன்னொன்று வரும். இந்த மூன்றும் சங்கிலித் தொடர்கள் போல நடு முதுகு எலும்புகளையும், நரம்புகளையும் பாதிக்கின்றன. இடுப்பு வலிகளுக்கு இன்னும் ஏராளமான காரணங்களைச் சொல்கிறது மருத்துவ உலகம்.
பிறவியிலேயே முதுகு எலும்புகள் ஒருசிலருக்குச் சரியான முறையில் சீராக அமைவதில்லை. குழந்தைப் பருவத்தில் இந்தக் கோளாறுகளை முறையாகக் கவனிக்காமல் விட்டுவிடுவதால் வயதான காலத்தில் இந்த வலிகள் பலரை வாட்டுகின்றன. விபத்துக் காரணமாக முதுகு எலும்பு அடிபட்டிருக்கக்கூடும்.
பல், ஈறுகள் நோயால் தாக்கப்பட்டிருக்கலாம். சொத்தைப் பல், பயோரியா நோய்களின் விஷம் ஆகியவை இடுப்புப் பகுதியைச் சீர்குலைக்க வாய்ப்பு உண்டு. அதனாலும் முதுகுவலி, இடுப்புப் பிடிப்பு உண்டாகலாம் என்றும் சொல்லுகிறார்கள்.
டான்சில், சைனஸ், சீழ் கட்டிகளாலான டி.பி. அல்சர், குடல் நோய்கள், சிறுநீரகக் கோளாறு கருப்பைக் கோளாறுகளாலும் இடுப்புப் பிடிப்பு, முதுகு வலி உண்டாகலாம் என்று டாக்டர்கள் பல காரணங்களைக் கூறுகிறார்கள்.
குறிப்பாக, இடுப்பு வலிகள் ஆண்களைவிடப் பெண்களுக்குத்தான் அதிகம் தொல்லை கொடுக்கின்றன.
இதற்குக் காரணம் பெண்களுக்கு இடுப்புப் பகுதியில் உள்ள உள்ளுறுப்புக்கள் மிக அவசியமான பணிகளுக்குப் பயன்படுகின்றன. இவைகளில் சில கோளாறுகளும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.
ஆண்களுக்குச் சிறுநீர்ப்பை, சிறுநீர்ப் பிரித்திகள், பிராஸ்டேட் ஆகிய உறுப்புகளால் சில பாதிப்புக்கள் ஏற்படுகின்றன.இதனால் இடுப்புப் பிடிப்பு, இடுப்பு வலிகள் இது பலருக்கும் ஏற்பட இடம் உண்டு.
பெண்களுக்குப் பிரவச காலத்தில் எலும்புப் பூட்டுக்கள் விரிந்து சுருங்கும் வேலையைச் செய்வதால் தான் நார்கள் தளர்ச்சி அடைந்து விடுகின்றன.
இதனால் ஒவ்வோர் குழந்தையைப் பெறும்போதும் தளர்ச்சி தொடர்கிறது. முதுகு வலியாலும், இடுப்பு வலியாலும் அதிகமாகவே சிரமத்தை அனுபவிக்கும் சூழ்நிலை பெண்களுக்கு ஏற்படுகிறது.
மூட்டு நோய்கள் காரணமாக எலும்புப் பூட்டுக்கள் தேய்மானம் ஆகும்போது இந்த வலிகள் மிகப் பெரிய தொந்தரவுகளைக் கொடுக்கின்றன.
எலும்புகளைத் தாக்கும் டி.பி. நோய்கள் முதுகு எலும்புகளை வளைத்து விடுகின்றன. இதனால் வலிகள் உண்டாகும். பொதுவா, முதுகு எலும்புகள் காலத்தால் தேய்ந்து முனைகள் சிதைந்து போவதால் நரம்புகள் நசுக்கப் படுகின்றன. இதன் விளைவு முதுகு வலி, இடுப்பு வலி.
ஆகவே பாதிப்பு எந்த இடத்தில், எந்த எலும்பில், எந்த உள் உறுப்பில் ஏற்பட்டிருக்கிறது என்று சோதனைகள் மூலம் தெரிந்துகொள்ள வேண்டும். சாதாரணமாக நாம் நாற்காலியில் உட்கார்ந்து வேலை செய்யும் போது முதுகை வளைத்து வேலை செய்வதால் இடுப்பு வலிகள் தோன்றலாம். இது நோய் அல்ல.
வேறு காரணங்களால் இடுப்பில் வலி தோன்றும்போது எக்ஸ்ரே சோதனை, இரத்த சோதனை இன்னும் முதுகு நீரை ஊசி மூலம் எடுத்துச் சோதனை செய்தும் லம்பர் பங்க்சர் முறையையும் செய்துபார்த்து நோயை அறிதல் வேண்டும். அதன் பிறகு சிகிச்சை செய்துகொள்ள வேண்டும்.
வலி உண்டாகும்போது வெந்நீர்ப் பை ஒத்தடம் கொடுக்கலாம். வெந்நீரில் எப்சம் உப்பைப் போட்டு இடுப்பை மட்டும் கழுவிவிட்டு, ஆலிவ் எண்ணெய் தடவலாம்.
இவை சாதாரணப் பரிகாரங்கள். தற்காலிகமான சாந்தி ஏற்படும். உள் நோய்களைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிப்பது மிகமிக முக்கியம்.
இடுப்புப் பிடிப்பு மனிதனின் உயிரைப் பிடிப்பதில்லை.
ஆனால் உடலை தாங்கி, நம்மை நட மாடவைக்கும் இடுப்பையே முறிக்கிறது. இதனால் அலட்சியப்படுத்தாமல் அக்கறையுடன் வைத்தியம் செய்து கொண்டால் வரப்போகும் தொந்தரவுகளைத் தடுக்கலாம்.
உணவு தயாரிக்க அடுப்பு முக்கியம். இந்த உடல் நன்கு செயல்பட இடுப்பு முக்கியம். கவனிக்க!
Comments
Post a Comment