மூச்சு விடுதல் என்பது எந்தவிதச் சிரமும் இல்லாமல் சலனம் இல்லாமல், இன்னும் சொல்லப் போனால் நாம் உணராமல் இந்தநிகழ்ச்சி பிறந்தது முதல் இறக்கும் வரையில் நடந்து கொண்டு வருகிறது.
பெருமூச்சு விடும்போது மட்டும் நெஞ்சு விம்முகிறது. அதிக அளவு காற்று உள்ளே இழுக்கப்பட்டு அதிக அளவு காற்று வெளியே தள்ளப்படும் போது ஒருளிதச் சலனம் ஏற்படுவதை உணர்கிறோம். மற்ற நேரங்களில் மூச்சு தன்னிச்சையாகச் செயல் படுகிறது.
ஆனால் மூச்சுத் திணறல் என்பது அப்படி அல்ல. சாதாரணசுவாசத்தைவிட வேறு பட்டது வித்தியாசமானது. சற்று சிரமத்தையும் தருவது. மிஞ்சினால் ஆபத்து உண்டு.
ஒரு நிமிஷத்திற்கு 16 முதல் 20 தடவை மூச்சுக் காற்றை உள்ளே இழுத்து வெளியே விடுகிறோம் என்று விஞ்ஞானிகள் அளந்து கூறுகிறார்கள். இந்த எண்ணிக் கைக்குமேல் போகும்போது அது திணறல் எனப்படுகிறது.
இருதய நோயாளிகள், நுரையீரல் சம்பந்தப்பட்ட நோயாளிகள், மூச்சுத் திணறலால் அதிகமான சிரமத்திற்கு ஆளாகிறார்கள்.
மூச்சுத் திணறல் என்பது நோய் அல்ல. நோயின் அடையாளமே சில நோய்கள் உடலைத் தாக்கும் போது மூச்சுத் திணறல் அதில் முக்கிய இடத்தைப் பெறுகிறது.
குழந்தைகள், பெண்கள். ஆண்கள், வயதானவர்கள் என்ற பல பிரிவினரையும் மூச்சுத் திணறல்துவட்டி எடுக்கிறது.
சிலருக்குப் படி ஏறும்போதும், மலை ஏறும்போதும், ஓட்டப் பந்தயங்களில் ஈடுபடும்போதும் மூச்சு இழுப்பதும் விடுவதும் மகா சிரமமாக இருக்கிறது.
ஆரோக்கியமான உடல் உறுதி பெற்றவர்களுக்கு இந்தத் திணறல் எதுவும் செய்வதில்லை. பலஹீனமாக வர்களையே தாக்குகிறது.
இன்னும் சிலருக்குச் சாதாரணமாக இருக்கும்போதே மூச்சுத் திணறல் திடீரென்றோ அல்லது நாளடைவிலோ தோன்றி உலுக்கி எடுக்கிறது.
இதில் இரண்டுவகை உண்டு. மூச்சை உள்ளே இழுக்கும் போது சிலருக்கு இடையூறு உண்டாகிறது. இன்னும் சிலருக்கு மூச்சை வெளியே விடும்போது சிரமம் உண்டாகிறது. மூச்சை உள்ளே இழுக்கும்போது தோன்றும் திணறலுக்குக் காரணம் மூச்சுப் பாதையில் அடைப்பு இருக்கலாம்.
உதாரணமாக, டிப்திரியா என்ற தொண்டை அடைப்பான் நோயினால் சுவாசப் பாதையில் தடங்கல் ஏற்படலாம். மூச்சை வெளியே விடும்போது சிலருக்குத் திணறல் உண்டாகலாம். இது சுவாசக் குழல் பாதிப்பு. நுரையீரல் பாதிப்புக் காரணமாக ஏற்படலாம். இதற்கு உதாரணம் ஆஸ்துமா நோய்.
சிலருக்குத் திடீரென்று திணறல் உண்டாகும். மூச்சுக் குழவில் ஏதாவது ஒரு பொருள், பட்டன், பட்டாணி அடைத்துக் கொள்ளும் போது திணறல் உண்டாகும். இது விபத்தினால் உண்டாவது.
சிலருக்கு நோயினால் காலப் போக்கில் உண்டாக இடமுண்டு. உடல் பருமனாக உள்ளவர்கள், இரத்தச் சோகை உள்ளவர்கள், நியுமோனியா காய்ச்சல் வந்தவர்கள். நுரையீரல் நோய் வந்தவர்கள் கர்ப்பமான பெண்கள் ஆகியோருக்கு மூச்சுத் திணறல் உண்டாகும்.
இன்னும் சிலருக்கு அலர்ஜி காரணமாகவும், நச்சுக்காற்றைச் சுவாசிப்பதாலும். காற்று அழுத்தம் குறைந்த மலை வாசஸ்தலங்களில் வாழ்வதாலும், கோளாறு, மனநோய் தைராய்டு சுரப்பிக் காரணமாகவும் மூச்சுத் திணறல் உண்டாகும். மூச்சுத் திணறலுக்கு எத்தனையோ காரணங்கள் சொல்லப் படுகின்றன.
மூச்சுத்திணறல் ஏற்பட காரணங்கள் :
இளம் பிள்ளை வாதம், முதுகு எலும்பு, மார்பு எலும்பு நோய், நுரையீரலின் மேலுறையில் நீர்க் கசிவு, மகோதரம் என்று சொல்லப்படும் வயிறு வீக்கம் ஆகிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் மூச்சுத் திணறல் உண்டாகிறது.
மூச்சுத் திணறலால் அவதிப்படுகிறவர்கள் தங்கள் நிலைமையை டாக்டரிடம் சொல்லும் போது திணறல் தி(டீரென்று உண்டானதா? அல்லது அவ்வப்போது வந்து போகிறதா? என்று கண்டு உணர்ந்து சொல்லவேண்டும்.
மூச்சத் திணறல் காய்ச்சலோடு வருகிறதா? இருமலோடு வருகிறதா? அப்போது சளி இருமல் உண்டா?மார்ப்புப் பக்கம் வலி உண்டாகிறதா? தோலில் நீல நிறம் உண்டாகிறதா? அதிக வியர்வை உண்டாகிறதா என்றெல்லாம் தெளிவாகச் சொல்ல வேண்டும்.
அப்போதுதான் டாக்டர் நோயின் நிலைமையைக் கண்டு அதற்கு ஏற்ற முறையில் சிகிச்சை அளிக்க முடியும். மூச்சுத் திணறல் எதனால் உண்டானது என்று கண்டு பிடிக்க இருபதுக்கு மேற்பட்ட சோதனைகள் உள்ளன.
சிறுநீர்ச் சோதனை, மலப் பரிசோதனை, இரத்தப் பரிசோதனை, ஸ்கிரீனிங் என்று சொல்லப்படும் நேர்முக எக்ஸ்ரே சோதனை மார்பு எக்ஸ்ரே, தொண்டைப் பரிசோதனை, மூச்சுக் குழல் பரிசோதனை, சிறுநீரகப் பரிசோதனை, ஈ.சி.ஜி. சோதனை என்று பல்வேறு சோதனைகள் மூலம் அடிப்படைக் கோளாறுகளைக் கண்டு பிடித்து, எதன் காரணமாக மூச்சுத் திணறல் உண்டானது என்று தெரிந்து கொண்டு டாக்டர்கள் வைத்தியம் செய்கிறார்கள்.
நோயாளியும், நோயாளிக்கு உதவியாக இருப்பவர்களும் கூர்ந்து கவனித்து மூச்சுத் திணறல் ஏற்படும்போது நோயாளிக்கு என்ன மாறுதல்கள் ஏற்படுகின்றன என்ற விவரங்களையும் டாக்டரிடம் எடுத்துச் சொல்லி டாக்டருக்கு உதவ வேண்டும். இது மிக முக்கியம்.
நாம் சுவாசிப்பதில் எந்தத் தடங்கள் ஏற்பட்டாலும் உடனே அதைக் கண்டு அதற்குப் பரிகாரம் செய்யலாம். நிலைமைகளைச் சீராக்கிக் கொள்ளலாம்.
Comments
Post a Comment