Skip to main content

Google ads

செவித்துணைக் கருவிகள் என்றால் என்ன ?செவித்துணை கருவிகளின் அவசியம் -Medical Tamizha

செவித்துணைக் கருவிகள்

 மனிதர்களுக்கு ஏற்படும் உடல் குறைகளை, உடல் உறுப்புக்களில் உண்டாகும் ஊனங்களைச் சரிசெய்து   மீண்டும் இயங்கவைக்க விஞ்ஞானிகள் புதியபுதிய கருவிகளைக் கண்டுபிடித்து அவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்து வருகிறார்கள்.

கண்பார்வைக் குறைவானவர்களுக்குக் கண்ணாடியும், வாய்ப் பற்கள் இழந்தவர்களுக்குச் செயற்கைப் பற்களும். கை, கால் இழந்தவர்கள் நட மாட, செயல்பட செயற்கைக் கை, கால் ஊன்றுகோல் போன்ற துணைக் கருவிகளைத் தயாரித்து உடலோடு பொருத்தி ஊனங்களை, குறைகளை ஓரளவு நிவர்த்தி செய்து வருகின்றனர்.

இதுபோல் காது கேளாதவர்களுக்கும் செவித் துணைக் கருவிகள் கண்டு பிடிக்கப்பட்டுக் காதுகளில் பொருத்தி மற்றவர்களைப் போல் அவர்களும் வாழ வழி செய்து கொடுத்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்,

மனிதனுக்கு எந்தக் குறை இருந்தாலும் அதைப் போக்க விஞ்ஞானம் அற்புதமான செயற்கை உறுப்புகளை உருவாக்கிச் சாதனைகள் பல செய்து வருகிறது.


செவித் துணைக் கருவிகளைப் பொருத்திக் கொள்வதில் செலவு கொஞ்சம் அதிகம் என்பதைத் தவிர மனிதர்களின் மனக் குறைகள் இப்போது குறைந்து கொண்டு வருகின்றன என்பதை எவராலும் மறுக்க முடியாது.

ஒலிகளைக் கிரகிக்கும் சக்தியைக் காது உறுப்புக்கள் இழந்துபோகும் போது ஒலியின் அளவைச் சுற்றிக் கூடுதலாக்கித் தரும் கருவிதான் செவித் துணைக் கருவி.

இந்தக் காது கேட்கும் இயந்திரத்தில் மூன்று பகுதிகள் உண்டு. நுண்மையான ஒலி பெருக்கி, அதற்கு அடுத்தது பலமான ஒலி பெருக்கி, இதற்கு அடுத்தது ஒலி வாங்கி. தேவையான மின்சார சக்தியை ஒரு பேட்டரி மூலம் இயக்கி ஒலி அலைகளாக மாற்றிப் பேசுபவரின் குரலை, கேட்பவர்களின் காதுகள் ஈர்த்துக் கொண்டு செயல்பட வைக்கின்றன இந்த மூன்று அமைப்புகள்.

இந்த கருவியை இயக்க முன்பு இரண்டு பாட்டரிகள் தேவைப்பட்டன. இப்போது சக்தியுள்ள ஒரு பேட்டரி போதும். இதனால் பேட்டரியின் கனம் குறைந்து எளி தாக்கப்பட்டிருக்கிறது. காது கேளாதவர்கள், எதிரில் நின்று பேசுகிறவர்களின் பேச்சைக் கேட்க முடியவில்லை என்ற நிலை ஏற்படும்போது மிகுந்த துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

இதையும் படிக்க : சரிவிகித உணவு என்றால் என்ன ?

டெலிபோன், ரேடியோ. டி.வி. சினிமா. இசைக் கச்சேரி, மேடைப் பேச்சு எதையும் கேட்டு இரசிக்க முடியாமல் வாழ்க்கையில் ஒதுங்கியே வாழும் தனிமைச் சூழ்நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.

செவித்துணை கருவிகளின் அவசியம்

செவித் துணைக் கருவிகள் வந்த பிறகு அவர்கள் வாழ்வில் மறுமலர்ச்சி தோன்றிவிட்டது.

காது மந்தம், அரைச் செவிடு, முழுச் செவிடு என்று எந்த நிலையிலும் செவித் திறனை அளந்து அதற்கு ஏற்ற கருவிகளைச் செவி ஆராய்ச்சி நிபுணர்களின் உதவியோடு தயாரித்திருக்கிறார்கள்,

காதுகளின் அமைப்பு ஆளுக்கு வித்தியாசப்படுகிறது. அதுபோல் கருவிகளிலும் பல வகைகள், பல தினுசுக்கள் உண்டு. 

இதனால் காதோடு பொருந்தும்படி செவி வார்ப்புக் கருவியும் அமைத்து ஒரு குழாய் மூலம் பேட்டரியையும் இணைத்துச் செவி துணைக்கருவியை உருவாக்கியிருக் கிறார்கள்,



இணைப்பு பேட்டரியைச் சட்டைப்பையில் வைத்துக் கொள்ளலாம். காதின் பின்புறத்தில் பொருத்தலாம். மூக்குக் கண்ணாடியுடன் பொருத்தலாம்.

பெண்களுக்குக் காதணி, கொண்டை ஊசிகளிலும் பொருத்திக் கொள்ளச் சிறிய அளவில் நுட்பமாகக் கருவிகளை மேலைநாட்டினர் தயாரித்துக் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் அவை இங்கு கிடைப்பதில்லை.

இதையும் படிக்க : மூச்சுத் திணறல் ஏன் ஏற்படுகிறது?

குழந்தைகளுக்கும் காது மந்தம், செவிடு ஏற்படலாம். இதனால் ஒளிகளைக் கேட்கமுடியாமல் போகலாம். டாக்டர் குழந்தைகளின் செவித் திறனை ஆராய்ந்து கருவி பொருத்தும்படி சிபாரிசு செய்கிறார்.

ஹியரிங் எய்ட் வைத்துக் கொள்ளாவிட்டால் குழந்தைகள் ஊமைகள் ஆகிவிட வாய்ப்பு உண்டு. ஆகவே பெற்றோர் உடனே கவனித்துக் கருவியை பொருத்த வேண்டும். 

வயதானவர்களைவிடச் சிறுவர்களுக்கு இந்தக் கருவி வெற்றிகரமாகச் செயல்படுகிறது.

அமைதியான சூழ்நிலையா? அதற்கு ஏற்றபடி கருவியைச் சரி செய்யலாம் இரைச்சலான சூழ்நிலையா? அதற்கு ஏற்றபடி மாற்றி அமைக்கலாம். தொனியின் அளவுக்குத் தகுந்தபடி விசை மூலம் கட்டுப்படுத்தும் அமைப்புகள் இதில் உண்டு.

செவித்துணைக் கருவிகளை வாங்கும்போது கவனிக்க வேண்டியவை

  • பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களைப் பார்த்து விட்டு நாமே செவித் துணைக் கருவிகளை வாங்கி வந்து பொருத்திக்கொள்ளக் கூடாது. இதனால் முழுப் பலன் ஏற்படாது.
  • டாக்டரின் ஆலோசனை இல்லாமல் எதையும் செய்யக் கூடாது. செவி வாய்ப்பு சரியாகப் பொருந்தாவிட்டால் கருவி நன்கு செயல்படாது. காதில் கருவியைப் பொருத்தியதும் கிரீச் என்ற ஒலி கேட்டால் உடனே மாற்ற வேண்டும்.
  • பேட்டரி செயல் திறன் குறைந்தால் உடனே வேறு பாடடரியைப் பொருத்திக் கொள்ளவேண்டும். உபயோகிக்கும் நேரம் தவிர மற்ற நேரங்களில் பாட்டரியையும் கருவியையும் தனியாகப் பாதுகாப்புடன் வைக்க வேண்டும்.
  • கருவியைக் காதுக் குரும்பி அடைக்கலாம். 
  • நீர் விட்டுக் கழுவக் கூடாது. ஸ்பிரிட் ஊற்றிக் கழுவ வேண்டும்.
  •  காதுக்குள் செவிவார்ப்பை வைக்கும்போது. எண்ணைப் பசை தடவி வைக்க வேண்டும். ஒலிக் கசிவு ஏற்பட்டால் சரியாக செயல்படாது. ஆகவே காதோடு சரியான முறையில் பொருந்தும்படி வார்ப்புக் கருவியைப் பயன்படுத்தவேண்டும்.
  • காது செவிடானவர்கள் தங்களுக்கு ஏற்பட்டிருக்கும் குறைப்பாட்டை மறைக்கக்கூடாது. கருவி வைத்துக் கொள்வதை அலட்சியப் படுத்தக்கூடாது. வெட்கப்படக் கூடாது.

அப்படிச் செய்கிறவர்கள் எத்தனையோ வசதிகளை, இலாபங்களை,வாய்ப்புகளை இழந்து மனநோயாளிகளைப் போல் ஆகிவிடுகிறார்கள்.

செவித் துணைக் கருவியின் விலை சுமார் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை ஆகும். குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள விரும்புகிறவர்கள் பணத்தைப் பார்க்கலாமா?

Comments

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும் 1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea): Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or)  (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை  (iii) 1 tsp உப்பு  (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம். (2)...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...