Skip to main content

Google ads

சரிவிகித உணவு என்றால் என்ன ? சிறந்த உணவு எது ? Medical Tamizha

 சிறந்த உணவு என்று சொல்லும்போது குழந்தைகளுக்குத் தாய்ப் பால் தான் குழந்தைப் பருவத்தில் சிறந்த உணவாகிறது. தாய்ப் பாலில் நோய்த் தடுப்புச் சக்தி அதிகம் இருக்கிறது. ஆகவே நோய் வராமல் தடுக்கக் குழந்தைக்குத் தாய்ப் பாலைத் தவிர வேறு சிறந்த உணவு கிடையாது.

தாயின் மூலமே குழந்தைக்கு உணவு கிடைப்பதால் தாய் சிறந்த உணவு வகைகளைச் சாப்பிடவேண்டும். தாயின் உணவில் புரதச் சத்து, இரும்புச் சத்து, சுண்ணாம்புச் சத்து தேவையான அளவில் இருந்தால் குழந்தை நல்ல எடையுடன் பிறக்கும். பிறக்கும் குழந்தையும் உடல் வளர்ச்சி, மன வளர்ச்சியுடன் பிறக்கும்.

இதையும் படிக்க : குளிக்கும்போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள்

பிறந்த குழந்தையை மருத்துவமனைகளில் முதலில் எடை போடுகிறார்கள். குழந்தையின் எடை நான்கு கிலோவுக்கு அதிகமாக இருந்தால் தாய்க்குச் சர்க்கரை வியாதி இருக்குமோ என்று சந்தேகித்துச் சோதனை செய்வதுண்டு.

 இரண்டு கிலோ எடைக்கும் குறைவாக இருந்தால் குழந்தையை உன்னிப்பாகக் கவனித்துச் சிகிச்சை அளிக்கிறார்கள். குழந்தை பிறந்த பத்து நாட்களில் குழந்தையின் எடை குறையும். உடம்பிலுள்ள நீர்ச் சத்துக் குறைவதால் எடை இழப்பு ஏற்படலாம். இதைப் பற்றிக் கவலைப்படக் கூடாது. பிறகு எடை கூடிக்கொண்டு வரும்.


குழந்தை பிறந்தது முதல் ஐந்து வயதாகும் வரை குழந்தையின் எடையைக் கவனித்து வரவேண்டும். குறையும்போது என்ன உணவு கொடுக்கலாம். எந்த அளவு கொடுக்கலாம். எந்தெந்த நேரங்களில் கொடுக்கலாம். என்று குழந்தை மருத்துவரைக் கலந்து கொண்டு கொடுக்க வேண்டும். காரணம், குழந்தைகள் எல்லோரையும் ஒரே அளவில் வைத்துக் கணக்கிட முடியாது. குழந்தைக்குக் குழந்தை வித்தியாசம் உண்டு.



சாதாரணமாக ஒரு குழந்தை பிறந்தது முதல் 5 வயது அளவுகளைக் வரை எந்த மாதத்தில் எந்த அளவு எடை இருக்க வேண்டும் என்று பார்ப்போம் கவனிப்போம்.

 கவனிக்க வேண்டிய வயது   எடை அளவு 
 பிறந்த குழந்தை  3.0 கிலோ
 3 வது மாதத்தில்  5.5 கிலோ
 6 வது மாதத்தில்  7.5 கிலோ
 12 வது மாதத்தில் 10.0 கிலோ
 இரண்டு வயதில்  12.0 கிலோ
 மூன்று வயதில்  14.0 கிலோ
 நான்கு வயதில்  15.5 கிலோ
 ஐந்து வயதில்  17.0 கிலோ
.

மேலே கண்ட எடை அளவில் குழந்தை வளருகிறதா என்று தாய்மார்கள் கவனித்து வரவேண்டும். எடைக் குறைவு ஏற்பட்டால் உணவில் சத்துக்களை அதிகமாக்க வேண்டும். அதே நேரத்தில் நோய் தாக்குதல், கிருமித் தொற்று ஏற்பட்டிருக்கிறதா என்று டாக்டரிடம் சோதித்து உடனே சிகிச்சை செய்யவேண்டும்.


குழந்தை பிறந்த நான்கு மாதம் முதல் ஆறுமாதம் வரை தாய்ப் பால் கொடுத்து வரவேண்டும் என்பது முக்கியம். இரண்டு வயது வரை தாய்ப் பால் கொடுக்க வேண்டும் வேறு எதுவும் கொடுக்கக் கூடாது என்று மகப் பேறு மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

  இதையும் படிக்க :     காச நோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?

குழந்தையின் தோற்றமே சொல்லிவிடும். ஒரு குழந்தை ஊட்டச் சத்துக் குறைவால் மெலிந்திருக்கிறதா அல்லது வேறு காரணங்களால் உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறதா என்று. குழந்தைகளுக்கு ஆறாவது மாதத்திலிருந்து ஒரு வருடத்திற்குள்தான் ஊட்டச்சத்துக் குறைவால் நோய்கள் தொற்றுகின்றன என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். இதனால் நோய்த் தடுப்பு ஊசிகளைப் போட்டுக்கொள்ள வேண்டும்.

தாய்ப் பால் கொடுத்தபிறகு ஐந்தாம் மாதத்திலிருந்து சிறிதுசிறிதாகத் திட உணவு மசித்தும், கரைத்தும், நொறுங்கப் பிசைந்தும் உணவு ஊட்டி வரலாம். குழந்தைக்குச் சக்தி அளிக்கும் உணவு வகைகள், புரதச் சத்து உணவு வகைகள், வைட்டமின் சத்து உணவு வகைகள், உலோகச் சத்து உணவு வகைகள் என்று படிப்படியாக ஊட்டவேண்டும்.

இதையும் படிக்க : வாகன புகையால் இவ்வளவு தீமைகளா?

ஒரு குழந்தையின் எடை அளவு குறைந்தால் உடல் நலக் குறைவு ஏற்பட்டிருக்கிறது என்று அடையாளம் தெரிந்து கொள்வது போல், குழந்தையின் புஜத்தைப் பார்த்தும் தெரிந்துகொள்ளலாம் என்று நவீன வைத்தியம் கூறுகிறது.

புஜத்தின் அளவைத் தெரிந்து கொள்ள ஒரு டேப்பினால் அளந்து பார்க்கலாம் புஜத்தின் அளவு அதாவது முண்டா சதை அளவு பன்னிரண்டு சென்டி மீட்டர் அளவுக்குக் குறைந்தால் சத்துணவுக் குறைவதால் நோய் கண்டிருப்பதை அறியலாம் என்கிறார் ஒரு மேல் நாட்டு குழந்தை வைத்திய நிபுணர். முகம் கை கால் வயிறு பருமனாக இருந்தாலும் புஜம் மட்டும் சூம்பிப் போயிருந்தால் ஊட்டச் சத்துக் குறைவு என்று சொல்லுகிறார் டாக்டர். 

சத்தாண உணவு என்று சொல்லும்போது விலை உயர்ந்த உணவு என்பதல்ல. புரதச் சத்து உடம்பில் சேர கோழி இறைச்சி, முட்டை. மீன் சாப்பிடவேண்டும் என்று நினைக்காமல் பட்டாணி, மொச்சை, நிலக் கடலையில் செய்த எளிய உணவில் அதே சத்து உள்ளது. வைட்டமின் A- சத்து கண் பார்வைக் குறைவைச் சரி செய்துவிடும். 

இது முள்ளங்கி, பூசணி மற்றும் கீரைகளில் எளிதாகக் கிடைக்கிறது. வைட்டமின் D-மீன் எண்ணெயில் நிரம்ப உண்டு. செலவு அதிகம்.அதற்குப் பதில் சூரிய ஒளியில் அதே வைட்டமின் D- சத்து கிடைக்கிறது. சுண்ணாம்புச் சத்து இரும்பு சத்து கேழ்வரகு, கம்புத் தானியங்களில் நிரம்ப உண்டு.

இரும்புச் சத்து சர்க்கரையில் குறைவு. ஆனால் வெல்லத்தில் அதிகம் இருக்கிறது. புரதச் சத்து முள்ளங்கி, மரவள்ளிக்கிழங்கு இலைகளில் மிகுதியாக உண்டு. நம்முடைய மக்கள் கிழங்கைச் சாப்பிடுகிறார்கள். அதன் இலையைச் சாப்பிடுவதில்லை. மலிவு விளையில் ஊட்டச் சத்தைக் கொடுக்க முடியும் என்பதற்கு இவைகளே சான்று.

 எனவே, குழந்தைகளுக்கு நன்கு வேக வைத்த கிழங்கு, பழம் ஆகியவற்றை மசித்துக் கொடுக்கலாம். கீரைச் சாறு, பழரசங்களைக் கொடுக்கலாம். இவை எல்லாம் சிறுவர்களுக்கு ஏற்ற சிறந்த உணவுகள். இவற்றைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கொடுத்து வந்தால் ஊட்டச் சத்து நிரம்பி உடல் வலுவும், வனப்பும் பெறுவார்கள் என்பது திண்ணம்!

Comments

Popular posts from this blog

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவ...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...