Skip to main content

Google ads

குளிக்கும் போது கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்கள் !

 குளிப்பது என்பது அன்றாட நிகழ்ச்சி என்றாலும் எப்போது குளிக்க வேண்டும்: எப்படிக் குளிக்க வேண்டும்; என்ற பொதுவான விதிமுறைகளைப் பலர் தெரிந்து வைத்துக் கொள்வதில்லை.

இதனால் சிலர், சில சிக்கல்களுக்கு ஆளாகிறார்கள்.தெரிந்தவர்களுக்கு இது சின்னச் செய்தியாக இருக்கலாம். தெரியாதவர்களுக்கு இது அரிய தகவல்களாக இருக்கும்.உடல் வெப்பம் ஆளுக்கு ஆள் வித்தியாசப்படுகிறது.



இதனால் சாதாரண வெப்ப நிலை உள்ளவர்கள் காலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் குளிப்பது நல்லது.மாலையில் 5 மணியிலிருந்து 6 மணிக்குள் குளித்து விடுவது நல்லது.

உடல் வெப்பம் அதிகம் உள்ளவர்கள் இரவு 8 மணியிலிருந்து 9 மணிக்குள் குளிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை தருகிறது. குளிக்கத் துவங்குமுன் வெந்நீரில் குளிப்பவர்கள் ஒரு டம்பளர் தண்ணீர் சாப்பிட்டுவிட்டுக் குளிக்கவேண்டும். 

தண்ணீரில் குளிப்பவர்கள் இளம் சூடான வெந்நீர் ஒரு டம்ளர் குடிக்க வேண்டும்.இதனால் உடல் நிலை சமனப்படுத்தப்படுகிறது என்கிறது இயற்கை வைத்தியம்.

குளிப்பவர்கள் கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள் :-

குளிப்பவர்களின் வயிறு காலியாக இருக்கவேண்டும்.

மலஜலம் கழித்து விட்டே குளிக்கவேண்டும். சாப்பிட்டு விட்டும் குளிக்கக் கூடாது உணவின் செரிமானம் நடக்கும் வேளையில் குளிப்பதால் இரத்தம் வேறு வழியில் திரும்பும் நிலை உண்டாகிறது.

குளிக்கவேண்டும் என்றால் சுமார் மூன்று மணி நேரத்திற்கு முன்பு சாப்பிட்டிருக்க வேண்டும் என்கிறது இயற்கை வைத்தியம்.

குளிக்கத் துவங்குமுன், தண்ணிரையோ, அல்லது வெந்நீரையோ எடுத்த எடுப்பில் தலையில் ஊற்றக்கூடாது.

முதலில் ஒரு குவளை நீரைப் பாதத்திலிருந்து ஆரம்பித்து முழங்கால், இடுப்பு, மார்பு, முகம். பின் உச்சித் தலை என்ற வரிசையில் ஊற்றிக் கொண்டே போய் பிறகுதான் தலைக்கு ஊற்றிக் கொள்ள வேண்டும். குளிக்கும் வெந்நீர். கடும் வெந்நீராக இருக்கக்கூடாது.

மிகக் குளிர்ந்த தண்ணீராகவும் இருக்கக் கூடாது. உடல் உஷ்ணத்திற்கு ஏற்ற வகையில் இருக்கவேண்டும்.

குளிக்கும் இடம் வெளிக்காற்று வீசாத இடமாக இருக்கவேண்டும்.

பாத் ரூமில் மின் விசிறியைப் பொருத்தக் கூடாது. எண்ணெய்த் தேய்த்துத் தலை முழுகும் நிலை இருந்தால் சிகைக்காய்த் தூள், இலுப்பைப் பிண்ணாக்குத் தூள், பாசிப் பயிறு தூள் கலந்து உடலிலுள்ள எண்ணெய்ப் படலத்தை நீக்க வேண்டும்.

உடம்பில் துணி இல்லாமல் குளிப்பதுதான் நல்லது. இருப்பினும் இடம், காலம், ஏவலறிந்து செயல்படுவது உத்தமம். குளிக்கும் கால அளவு, இருபது நிமிடங்கள் இருக்கலாம்.

முப்பது நிமிடங்களுக்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது.

வெயில் காலத்தில் சுரப்பிகள் தீவிரமாகச் சுரப்பதால் கழிவுப் பொருட்கள் அதிகமாக வெளியேறுவதால் ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று வேளைகள் கூடக் குளிக்கலாம். குளித்தவுடன் துண்டால் அழுத்தித் தேய்த்து ஈரத்தைப் போக்கி உடலில் சூடு உண்டாக்க வேண்டும்.

ஈரத்தோடு, ஈர உடைகளோடு வெகு நேரம் இருக்கக்கூடாது. முகத்தில் எண்ணெய் சுரப்பிகள் அதிகம் இருப்பதால் முகத்தைச் சோப்பு நுரையால் தேய்த்துக் கழுவ வேண்டும். குளிக்கும் போது வெறும் உடலை மட்டும் கழுவாமல் மறைவான உறுப்புக்களையும் கை, கால், முகம், வாய், பல் முதலியவற்றையும் தேய்த்துக் கழுவ வேண்டும்.

கண்ட கண்ட சோப்புக்களைத் தேடி அலைந்து வாரத்திற்கு ஒரு சோப்பு என்று இனத்தை மாற்றக் கூடாது. சந்தன சோப்பு மற்றும் மூலிகை கலந்த சோப்புக் களையே உபயோகிக்க வேண்டும்.

ஈரத்தைத் துடைத்தவுடன், உடலை உடைகளால் மூடிப்பாதுகாக்க வேண்டும். காற்றுப் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குறிப்பாகக் குழந்தைகள் விஷயத்தில் கவனம் அதிகம் செலுத்த வேண்டும்.

சிலர் காலையில் குளிப்பார்கள். சிலர் மாலையில் குளிப்பார்கள். இன்னும் சிலர் இரவில் குளிப்பார்கள். பழக்கம் என்று ஒரு வழக்கத்தை உண்டாக்கிக் கொண்டவர்களுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. வழக்கத்திற்கு மாறாகக் குளிக்கும் போதுதான் சில உபத்திரவங்கள் ஏற்படுகின்றன.

இதனால் தலைவலியோ. சளித் தொல்லையோ உண்டாகுமே தவிர, பெரும் பாதிப்புக்கள் எதுவும் தோன்றுவதில்லை.

தினசரி குளிக்காமலே இருப்பதுதான் தவறு.குளிப்பதால் பல நன்மைகள் உண்டு. ஆரோக்கியமான வாழ்வுக்கு குளிப்பது மிக அவசியம்.

குளிப்பதால் சரும நோய்கள் நரம்புத் தளர்ச்சி நோய்கள், மலச்சிக்கல், மூலநோய், குடல் புண், வாய்வுத் தொல்லை, வயிற்றுவலி, சிறுநீர்த் தொல்லை. மூட்டுவாத நோய்கள், தலைவலி ஆகியவை நீங்குகின்றன.

தினசரி குளிப்பதால் நம் உடல் நோய் எதிர்க்கும் சக்தியைப் பெறுகிறது. சுறுசுறுப்பையும் வலிமையையும் தருகிறது.

குளிப்பதற்கு வெந்நீரைவிடத் தண்ணீரே நன்மை தருகிறது.ஆகவே களிப்பைத் தரும் குளிப்பை அலட்சியப் படுத்தி விடவேண்டாம்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...