எலும்பை உருக்கும் ஆபத்தான காசநோய்
நாடெங்கும்.டி.பி.என்று சொல்லப்படும் காசநோய் எதிர்ப்பு வாரம் கொண்டாடி வருகிறார்கள்.
இந்தியாவில் காசநோய் பாதிப்பு எவ்வாறு இருக்கிறது?
இந்தியாவில் ஒரு நிமிஷத்திற்கு ஒருவர் வீதம் காசநோயினால் இறந்து போகிறார் என்ற செய்தி நமக்கு அதிர்ச்சியைத் தருகிறது. தமிழ் நாட்டில் மட்டும் 10 இலட்சம் பேர் இந்த நோயினால் பாதிக்கப்பட்டிருக் கிறார்கள். இவர்களில் சுமார் 2 இலட்சத்து 50 ஆயிரம் பேர் காச நோயைப் பிறருக்குப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள் என்று புள்ளிவிவரக் கணக்கு கூறுகிறது. இதுவும் அதிர்ச்சியைத் தருகிறது.
TB நோய் என்றால் என்ன ? |
டிபி நோய் எவ்வாறு உருவாகிறது?
டி.பி. நோய் டியூபர்கில் பாஸிலஸ் என்ற கிருமியால் உண்டாகிறது. காச நோயாளியின் எச்சில் கோழை மூலம் அவர்கள் பேசும் போதும், இருமும்போதும், சளியைத் துப்பும் போதும். அவர்களின் சிறுநீர், மலம் மூலமாகவும் மற்றவர்களுக்குப் நகரங்களில் மக்களின் நெருக்கமான வாழ்வு பொது சுகாதாரத்தைப் பாதிக்கிறது.
காச நோய் எவ்வாறு பரவுகிறது?
காற்றோட்டமில்லாத வீடு. சத்துக் குறைவான உணவு. சுத்தமில்லாத குடிநீர், கடுமையான வேலை, ஓய்வின்மை, மருத்துவ வசதிகளைப் பெறாத நிலையில் இந்த நோய் உயிர்கொல்லி நோயாகப் பரவுகிறது.
காசநோய் என்று பொதுவாகக் குறிப்பிட்டாலும் இதில் பலவகைக் காச நோய்கள் இருக்கின்றன. பெரும்பான்மை மக்களை உலுக்குவது நுரையீரலில் வரும் காச நோய்தான்.
காச நோய் தனி ஒரு மனிதனை மட்டும் தாக்கும் நோய் அல்ல. அனைவரையும் தாக்கும் ஒரு சமுதாய நோய் என்பதால் இந்த நோய் பரவாமல் தடுப்பது மிகமிக முக்கியம்,
ஒவ்வொரு மாவட்டத்திலும் காசநோய்த் தடுப்பு நிலையங்கள் உள்ளன. காசநோய் ஆய்வாளர்கள். ஊழியர்கள், இந்த நோயாளிகளைக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளித்து வருவதால் இப்போது இறப்புச் சதவிகிதம் மிகவும் குறைந்து வருகிறது.
காசநோய் இருப்பதை எப்படி கண்டறிவது?
காச நோயின் ஆரம்பக் கட்டத்தை அறிவது மிகவும் கஷ்டமாக இருப்பதால் இந்த நோய் முற்றிய பிறகே தெரியவருகிறது. ஆகவே ஆரம்ப கட்டத்திலேயே இந்த நோயை வேரறுக்க முடியாமல் போகிறது.இதில் இன்னொரு சிக்கலும் இருக்கிறது.
காசநோயைப் போன்ற குறி குணங்கள் உள்ள வேறு சில நோய்களும் இருப்பதால் அடையாளம் காண்பதும் அரிதாகிறது.
பொதுவாகக் காசநோயாளிகளின் சளிப்பரிசோதனை. எக்ஸ்ரே பரிசோதனைகள் மூலம் இந்த நோயைக் கண்டுபிடித்தவிடலாம்.
காச நோய் பரவுவதை எப்படி தடுப்பது?
நோயாளிகள் உண்ணும் உணவுப் பாத்திரங்கள். அவர்கள் உடைகள், படுக்கைகள் ஆகியவற்றைக் தனியாக வைக்கவேண்டும். நோயாளி சளி துப்பும் பாத்திரத்தில் குளோரமின் திரவத்தை ஊற்றிவைக்கவேண்டும். குளோரமின் என்பது கிருமிநாசினி மருந்து. நோயாளி தங்கும் இடங்களை அவர்களின் உடைகளைக் குளோரமின் திரவத்தில் முக்கி எடுத்து உ.லர வைக்கவேண்டும். இருமும் போது ஒரு துணியால் வாயை மூடிக்கொள்ளச் சொல்ல வேண்டும். நோயாளிகளுக்கு உதவி செய்பவர்களும் அடிக்கடி மருத்துவச் சோதனைகளைச் செய்து கொள்ள வேண்டும்.
காசநோய்க்கு பயன்படுத்தப்படும் தடுப்பூசிகள் என்னென்ன?
பி.சி.ஜி. தடுப்பு ஊசி போட்டுக் கொள்வது மிகவும் அவசியம். B.C.G. காச நோயைத் தடுக்கும் ஊசி மருந்து. குழந்தைகளை இந்த நோய் அதிகமாகத் தாக்குவதால் பிறந்தவுடன் குழந்தைகளுக்கு பி.சி.ஜி. போடவேண்டும். மூன்று வயது, ஏழு வயது, 12 வயது, 18 வயதில் தொடர்ந்து தடுப்பு ஊசி போட்டுவர வேண்டும். ஊசி காச நோயை ஒழித்துக்கட்ட ஸ்ட்ரெப்டோமைசின், ஐ.என்.எச். முதலிய சிறந்த மருந்துகள் இப்போது நோயாளிகளுக்குக் கொடுக்கப்பட்டு வருகின்றன. இந்த மருந்துகளை நோயாளிகள் தொடர்ந்து சாப்பிட வேண்டும். சுமார் 18 மாதங்கள் சிகிச்சை பெறவேண்டும். இடையில் நிறுத்தக்கூடாது.
காசநோயாளிகள் அனைவரையும் மருத்துவமனைகளில் வைத்துச் சிகிச்சை அளிப்பது என்பது இயலாது. ஆகவே, அவர்கள் தங்கள் வீடுகளில் இருந்து கொண்டே மருத்துவச் சிகிச்சைகளைப் பெறவேண்டும். மற்றவர்களுக்கு இந்த நோய் பரவாமல் தங்களைத் தாங்களே இந்த நோயாளிகள் தடுக்கும் வழி வகைகளைச் செய்துகொள்ளவேண்டும்.
TB நோயை தடுக்க காசநோயாளிகள் என்ன செய்ய வேண்டும்?
தான் பெற்ற துன்பம் பெறுக இவ்வையகம் என்று இவர்கள் அலட்சியமாக நடந்து கொள்ளக் கூடாது.
இவர்கள் பொது இடங்களில் கலந்து பழகும்போது கையில் கைகுட்டைகளை உபயோகிக்க வேண்டும். இருமித் துப்பக்கூடாது. துப்பிய இடத்தில் மண்ணைப் போட்டு மூடிவிட வேண்டும். ஓட்டல், திரை அரங்குகள், கோவில், மார்கெட் ஆகிய இடங்களில் இவர்கள் மிகவும் கவனமாசுத் தங்களைத் தாங்களே முடிந்தவரை தனிமைப் படுத்திக் கொண்டு இருப்பது நல்லது
பெரும்பாலோரை நாசம் செய்வது இந்தக் காசநோய், ஆகவே இந்த நோய் எந்த வேஷத்தில் வந்தாலும் அதை உடனே தடுப்பு முறைகளால் ஒழித்துக்கட்ட வேண்டும்!
Comments
Post a Comment