போக்குவரத்து வசதிகள் பெருகப்பெருக அதனால் சில நன்மைகளும், சில தீயைகளும் ஏற்பட்டு வருவதைப் பார்க்கிறோம்.
கார், பஸ், லாரி, ஆட்டோ போன்ற வாகனங்களால் மனிதன் பல வசதிகளைப் பெற்றுச் சுகமாக வாழ்கிறான். அதே சமயத்தில் சில துயரங்களையும் சந்திக்கிறான். போக்குவரத்து வாகனங்களைச் சரியான முறையில் பராமரிக்காமல் இத் தீமைகள் மெள்ள மெள்ளப் பெருகிவருகின்றன.
வாகனங்களால் கார்பன் மோனாக்ஸைடு என்ற விஷவாயு பரவி மனிதனின் ஆரோக்கியத்தைக் கெடுக்கிறது. மோட்டார் வாகனங்கள் வெளியிடும் கழிவுகளால் ஆண்டுதோறும் பல மில்லியன் டன் எடையுள்ள சல்பர், மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் காற்று மண்டலத்தில் கலக்கிறது. இதனால் பல்வேறு நோய்களுக்கு மனிதன் ஆளாகிறான்.
காற்றிலுள்ள நீராவியுடன் சல்பர், நைட்ரஜன் ஆக்ஸைடு மற்றும் இரசாயனப் பொருள்கள் கலந்து அமிலங்களை உருவாக்குகின்றன. இதனால் மழை நீரும் அமிலமாகி ஏராளமான சுகாதாரக் கேடுகளை உண்டாக்குகிறது.
கலப்பதால் மனிதனுக்கு என்ன சுகக் கேடு உண்டாகிறது? மயக்கம் உண்டாகிறது. தலைவலி உண்டாகிறது. காதில் ஒலி அதிர்வுகள் உண்டாகின்றன. வாந்தி வருகிறது. சுய நினைவு தவறுகிறது. கால்களில் வளிமை குன்றிவிடுகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மூளைத்தாக்கு ஏற்படுகிறது. வாதக் கோளாறுகள் உண்டாகின்றன.
கார்பன் மோனாக்சைடு விஷம் காற்றில் கலப்பதால் மனிதனுக்கு என்ன சுகக் கேடு உண்டாகிறது?
மயக்கம் உண்டாகிறது. தலைவலி உண்டாகிறது. காதில் ஒலி அதிர்வுகள் உண்டாகின்றன. வாந்தி வருகிறது. சுய நினைவு தவறுகிறது. கால்களில் வளிமை குன்றிவிடுகிறது. இரத்த அழுத்தம் அதிகரிக்கிறது. மூளைத்தாக்கு ஏற்படுகிறது. வாதக் கோளாறுகள் உண்டாகின்றன.
இவை எல்லாம் ஒரே நாளில் உண்டாகிறதா? இல்லை. விஷவாயுவை நீண்டகாலமாகச் சுவாசித்து வருபவர்களுக்கு இந்தக் கேடுகள் படிப்படியாகத் தோன்றுகின்றன.கடந்த 50 ஆண்டுகளில் மட்டும் காற்று மண்டலத்திலுள்ள கார்பன்டை ஆக்ஸைடு வாயுவின் அளவு சுமார் 12 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று கணக்கிட்டிருக் கிறார்கள்.
மனிதனுக்குத் தோன்றும் மறைமுகமான நோய்களுக்கு இந்த விஷக் காற்றுகளே காரணம் என்று அறியும்போது நம்மைத் திடுக்கிட வைக்கிறது.
விஷக் காற்று தூசிகள் முதன் முதலாக நம்மைத் தாக்குவது சுவாசக் கோசங்கள் மூலம்தான். இதனால் சுவாசம் அடைபடுகிறது. தோல் நோய்கள் உண்டாகின்றன. நூரையீரல் நோய்கள் பெருகிவருகின்றன. உடல்நலம், மன நலம் பாதிக்கப்படுகிறது.
கார்பன் மோனாக்ஸைடு அதிகமாக உருவாகிவிட்ட சமயங்களில் மூச்சடைப்பை உண்டாக்கி மரணத்தையும் உண்டாக்கலாம். எரியாத ஹைட்ரோ கார்பன்கள் புற்று நோயையும் உண்டாக்குகிறது என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இதற்கு என்ன செய்யலாம்? வீட்டை விட்டு வெளியே வராமல் இருக்கமுடியுமா? நகரத்தை விட்டுக் கிராமங்களுக்கு ஓடிவிட முடியுமா? காற்றுத் தூய்மை கெடுவதைத் தனி மனிதனால் தடுக்கமுடியாது. வண்டி வாகனங்களை உபயோகிப்பவர்கள் தடுப்பு: முறைகளைச் செய்யலாம். பழுதுபட்ட வாகனங்களைச் சீர்படுத்தலாம்..
பொதுமக்கள் என்ன செய்யலாம்? முடிந்தவரை சுத்தமான காற்றைச் சுவாசிக்க முயலவேண்டும். இதுலே சிறந்த வழி,
Comments
Post a Comment