பூமிக்குப் பாரமாகவும், சோற்றிற்குக் கேடாகவும் இருக்கிறார்கள் என்று ஊர் சுற்றிக்கொண்டிருக்கும் வேலை இல்லாத வாலிபர்களைப் பற்றிக் கூறுவார்கள் பெரியவர்கள்.
ஆனால் இப்போது பூமிக்கு மட்டும் பாரமாக இல்லை. சுமந்துகொண்டு தங்களுக்கே பாரமான உடலை வைத்துக் கொண்டு பலர் வாழ்கிறார்கள். இதற்குக் காரணம் உடல் எடையை வயதிற்கும், உயரத்திற்கும் தகுந்தபடி வளர்த்துக் கொள்ளாமல் அளவுக்குமீறிப் பெருக்கிக் கொண்டதுதான்.
சாதாரணமாக, வளரும் காலத்தில் ஆண்களும் பெண்களும் நன்றாகச் சாப்பிட்டு, ஓடி விளையாடி உடல் எடையைப் பெருக்கிக்கொள்கிறார்கள். இந்த வளர்ச்சி 16 வயதிலிருந்து 30, 40 வயது வரை நீடிக்கிறது. இவர்கள் தங்களையும் அறியாமல் உடல் எடையைப் பெருக்க வைத்துக் கொள்கிறார்கள். உடல் எடை பெருக்கத்தால் நடு வயதில்தான் பிரச்னையே எழுகிறது.
வயதுக்கு வந்த பெண்களும், மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களும் சில சமயம் உடல் எடை கூடுவதால் சிரமப்படுகிறார்கள்.
உடல் எடை கூடுவரற்குக் குடும்பப் பாரம்பரியம் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இதுவும் ஓரளவு உண்மை என்றாலும் உணவைக் குறைத்து உழைப்பைப் பெருக்கி உடல் எடையைக் கட்டுப்படுத்தலாம்.
உடல் எடைக் கூடுதலுக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. உடம்பிலுள்ள நாளமில்லாச் சுரப்பிகளாலும், தைராய்டு சுரப்பி, பிட்யூட்டரி சுரப்பி, பால் இயல் சுரப்பிகளாலும் எடை கூடுகிறது. நம்முடைய மூளையிலுள்ள ஹைப்போதலமஸ் என்ற பகுதிதான் உடல் பெருக்கக் காரணமாக இருக்கிறது.
உடம்பின் சில பகுதிகளில் சதை கூடுவதைப் பார்க்கின்றோம். கழுத்து, தோள்பட்டை, இடுப்பு, தொடை, இதற்குக் காரணம் கொழுப்பு அதிகமான வயிற்று பகுதிகள். அளவில் இந்தப் பகுதியில் தங்கி இறுகிவிடுவதுதான். இவற்றைக் கரைக்க உணவைக் குறைத்து உழைப்பைப் பெருக்கினாலே போதும்.
வயது | ஆண்கள் | பெண்கள் |
---|---|---|
20 வயதில் | 120 பவுண்டு | 113 பவுண்டு |
25 வயதில் | 125 பவுண்டு | 117 பவுண்டு |
30 வயதில் | 130 பவுண்டு | 120 பவுண்டு |
35 வயதில் | 132 பவுண்டு | 123 பவுண்டு |
40 வயதில் | 135 பவுண்டு | 127 பவுண்டு |
45 வயதில் | 137 பவுண்டு | 130 பவுண்டு |
50 வயதில் | 138 பவுண்டு | 133 பவுண்டு |
ஊளைச்சதை உருவ அழகைக் கெடுப்பதோடு நாம் அன்றாட வேலைகளைச் செய்யவும் தடையாக இருக்கிறது. அசௌகரியத்தைக் கொடுக்கிறது. செயல் வேகத்தை மந்தப் படுத்துகிறது. சிறிது உழைத்தாலும் வியர்வை சொட்டுகிறது. மூச்சு வாங்குகிறது. உடல் விரைவில் களைப்படைகிறது. எடை அதிகரிப்பதால் பல்வேறு நோய்களும் உண்டாகின்றன.
தொப்பை விழுகிறது. ஹெர்னியா நோய் உண்டாகிறது. நீரிழவு நோய், பித்தக் கற்கள், இருதய நோய், கொலஸ்டிரால் தொந்தரவு, இரத்த நாள நோய்கள், கீழ்வாதம், பிளட் பிரஷர், இன்னும் எத்தனையோ நோய்கள் உடல் பெருக்கத்தால், உடல் எடை கூடுவதால் வருகிறது. கடைசியில் மாரடைப்பு உண்டாகிறது.
இதனால் உடல் எடையைத் குறைக்கவேண்டும். எடையைக் குறைத்தால் எல்லா நோய்களும் பறந்துவிடும். உடலும் ஆரோக்கியமாக இருக்கும்.
இதற்கு என்ன வழி?
உடலின் எடையை ஒவ்வொருவரும் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஓர் ஆண் 5 அடி உயரம் இருந்தால் 20 வயதில் எத்தனை பவுண்டு எடை இருக்கவேண்டும்? ஒரு பவுண்ட் 5 அடி உயரம் இருந்தால் 20 வயதில் எத்தனை பவுண்டு எடை இருக்கவேண்டும் ? என்று ஓர் அளவு உண்டு. இதைத் தெரிந்துகொள்வது பயனுள்ளது.
5 அடி உயரம் உள்ள ஓர் ஆண், அல்லது பெண் இந்த அளவில் சிறிது கூடவோ குறையவோ இருக்கலாம். ஆணுக்கோ பெண்ணுக்கோ 35 பவுண்டு அளவுக்கு மேல் போனால் ஆயுளில் 4 ஆண்டுகள் குறைந்துவிடும்,
உணவில் புரதச் சத்தைக் குறைக்க வேண்டும். கொழுப்புச் சத்தைச் குறைக்கவேண்டும். கார்போஹைட்ரேட் எனப்படும் மாவுச் சத்தைக் குறைக்கவேண்டும். இதனால் உடல் எடை குறையும்.
நோய்களுக்கு விடை கொடுக்க குறையுங்கள்!
Comments
Post a Comment