ஒரு நோயைக் குணமாக்கும் ஒரு மருந்து, நோயாளிகளின் உடலில் பதுங்கி இருக்கும் நோயைக் காலப் போக்கில் தூண்டிவிடும்.
Drug என்றாலே விஷம் கலந்த மருந்து என்று மருத்துவ அகராதி கூறுகிறது. சில நோய்க் கிருமிகளைக் கொல்ல மருந்தில் விஷம் ஒரு குறிப்பிட்ட அளவு சேர்க்கப் இந்த பட்டிருக்கிறது.
சில மருந்து பாட்டில்களில் விஷம் என்று குறிக்கப்பட்டிருப்பதையும் பார்க்கிறோம். மருந்துகளை டாக்டர்களின் சிபாரிசுச் சீட்டு இல்லாமல் சில மருந்துக் கடைகளில் கொடுக்கமாட்டார்கள்.
சில மருந்துகளை டாக்டர்கள் அளவோடு சாப்பிடும்படி ஆலோசனை கூறுவார்கள். காரணம், இந்த மருந்துகளில் விஷம் கலக்கப்பட்டிருக்கும்.
குறிப்பிட்ட தினங்கள் வரை மட்டுமே சில மருந்துகளை டாக்டர்கள் நோயாளிக்குக் கொடுக்கும் படி கட்டளை போடுவார்கள். காரணம், குறிப்பிட்ட தினங்களுக்கு மேல் தொடர்ந்து சாப்பிட்டால் மருந்து விஷமாகிவிடுகிறது.
ஆனால் சில நோயாளிகள் டாக்டர் சொல்லும் அறிவுரைகளை,ஆலோசனைகளைக் கேட்பதில்லை. நோய் குணமாகிச் சீக்கிரம் விடுதலை பெறலாம் என்கிற ஆசையில் அதிகமாக,அளவுக்கு மீறிச் சாப்பிட்டு விடுகிறார்கள்.
ஒரு மருந்து, தலைவலி, காய்ச்சல், உடம்புவலிகள் குணமாகடாக்டர்களால் கொடுக்கப்படுகிறது. இதுபோலவே தலைவலி மருந்துக் கடைகளில் மட்டுமின்றிப் பெட்டிக் கடைகளிலும் விற்கப்படுகிறது.
இந்த மருந்தை அளவோடு சாப்பிடவேண்டும். அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் அடிக்கடி சாப்பிட்டால் வயிற்றோட்டம் வாந்தி உண்டாகும். அல்சர் நோயையும் உண்டாக்கும்.
இரத்தம் உறையும் தன்மை நீக்கிவிடும். ஹீமோபீலியா என்ற இரத்தக் கசிவு நோயை உண்டாக்கும். தவிர, நாளடைவில் இருதய பலகீனமும் உண்டாக்கும். காதுகள்கூட மந்தமடைவதாக டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
உயர் இரத்த அழுத்தத்திற்குக் கொடுக்கப்படும் ஒரு மருந்து அதிக அளவில், அடிக்கடி கொடுக்கப்பட்டு வந்தால் மனநோய் உண்டாகும். விரல் நடுக்கம் கொடுக்கும். வலிப்பு நோய் உண்டாகும்.சில சமயங்களில் சிலநோயாளிகளுக்குக் கொலை வெறியையும் தூண்டி விடும்.
நீரிழிவு நோய்களுக்குக் கொடுக்கப்படும் சில மருந்துகள் பிற்காலத்தில் டி.பி நோயை உண்டாக்குகின்றன என்று அனுபவமிக்க டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
இது போலவே இருப்புச்சத்து நிறைந்த சில மருந்துகள் நாளடைவில் வேறு சில கோளாறுகளைத் தூண்டிவிட்டுவிடுகின்றன.
உடல் பருமனைக் குறைக்கக் கொடுக்கப்படும் சில மருந்துகள் சில விபரீத நோய்களை உண்டாக்கி விடுகின்றனவாம். வலி நிவாரணி என்று சொல்லப்படும் ஒரு தூக்க மருந்து இருதய நோயாளிகளுக்கும், பிரசவ நேரப் பெண்களுக்கும் கொடுக்கப்படுகிறது.
இந்த மருந்தை தொடர்ந்து அளவுக்கு மீறிச் சாப்பிட்டால் வயிற்றிலிருக்கும் குழந்தையின் மூளை பாதிக்கப்படுகிறது என்று டாக்டர்கள் கூறுகிறார்கள். இது போலவே பிரசவ வலி நிவாரணி மருந்து ஒன்று பிறக்கும் குழந்தைகளுக்குக் கால் இல்லாமல் கையில்லாமல் பிறக்கும் ஆபத்தை உண்டாக்குகிறது.
மாணவர்கள் இரவில் நீண்ட நேரம் தூக்கமில்லாமல் படிப்பதற்குச் சாப்பிடும் மருந்துகள் காலப் போக்கில் அவர்களுடைய சுபாவங்களையே மாற்றி மன நோய்களைத் தூண்டிவிடுகின்றன என்று மனவியல் நிபுணர்கள் கூறுகிறார்கள்.
சிறுநீரகக் கோளாறுகளுக்குக் கொடுக்கப்படும் சில மருந்துகள் வாந்தி, உடல் வலி, இரத்த ஒழுக்கு போன்ற நோய்களைத் தோற்றுவிக்கின்றன. சில சல்பா மருந்துகள் சிறுநீரகத்தைத் தாக்குகின்றன.
சரும நோய்களை உண்டாக்குகின்றன. டி.பி நோய்களுக்குத் தரப்படும் சிறந்த மருந்து ஒன்றைத் தொடர்ந்து சாப்பிடுகிறவர்களுக்குக் காது செவிடாகும்.
ஆங்கில மருந்துகள் பல, சிலருடைய உடலில் பயங்கர விளைவுகளை உண்டாக்குவதால் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மருந்தும் சில வேளைகளில், சில மனிதர்களுக்கு விஷமாகும் என்பதால் அளவோடு சாப்பிட வேண்டும். டாக்டரின் ஆலோசனைகளுடன் மருந்து சாப்பிட வேண்டும். இதனால் மருந்தே கூடாது என்பது என் நோக்கமல்ல!
Comments
Post a Comment