Skip to main content

Google ads

ஆஸ்துமா நோயாளிகள் தவிர்க்க வேண்டிய சில விஷயங்கள்-

 நோயாளிகள் என்று சொல்லும் போது நோய் குணமாக அந்த நோயாளி தள்ளத்தக்கது எது? கொள்ளத் தக்கது எது? என்று டாக்டர்கள் கூறுவதுண்டு. அது உணவாகவும் இருக்கலாம். அல்லது சில பழக்க வழக்கங்களாகவும் இருக்கலாம். 

நாட்டு வைத்தியர்கள் இவற்றைப் பத்தியங்கள் என்று கூறுகிறார்கள் மருந்து சாப்பிடுங்காலத்திலும் குணமான பிறகும் சில நாட்கள் சில உணவு வகைகளை உடல் சம்பந்தமான சில பழக்கவழக்கங்களை ஒதுக்கிவைக்க வேண்டும் என்று யோசனை கூறுகிறார்கள்.

பொதுவாக, எல்லா நோய்களூக்கும் இன்னின்னது ஆகாது. என்று சொல்வது வழக்கம். சாப்பிடக் கூடாதவற்றைச்சாப்பிட்டால் நோய் குணமாகாது. மருந்தும் வேளை செய்யாது. எந்த வைத்தியமானாலும் உணவுக் கட்டுப்பாடுகள் உண்டு என்பதால் அவற்றை நோயாளிகள் தெரிந்து வைத்திருப்பது நல்லது அல்லவா?.

'நோய் குணமாக வாயைக் கட்டு, வயிற்றைக் கட்டு என்று நாட்டு வைத்தியர்கள் சொல்லுவது இயற்கை. உணவு வகைகள் சில வயிற்றைப் பாதிக்கின்றன. 

உணவே மருந்து, மருந்தே உணவு என்று கிரேக்க மருத்துவத் தந்தை என்று அழைக்கப்படும் ஹிப்போகிரேட் சொல்லுவார்.

ஆஸ்துமா நோய் பரம்பரையில் இல்லாமலும் வரலாம். எந்தக் காரணத்தால் வந்தாலும் குடிப்பது.குளிப்பது, உண்ணுவது ஆகிய விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

குடிப்பது என்று சொல்லும்போது காப்பி, டீ, மது வகைகள் குளிர்பானங்கள் சாப்பிடக் கூடாது. மது வகைகள் குளிர் பானங்கள் சாப்பிடக்கூடாது! மது வகைகள் அறவே கூடாது. ஐஸ் வாட்டர், ஐஸ் கிரீம் ஆகியவற்றைத் தொடக்கூடாது என்று கூறுவர். 

ஏற்கண்டிஷன் அறைகளிலும் இவர்கள் இருக்கக் கூடாது என்பர். உடலின் வெப்ப அளவு குறையும்போது குளிர்ந்த உணவுகளைச் சாப்பிடக் கூடாது. பழங்கஞ்சி உணவு ஆகாது. ஆறிப்போன உணவு வகைகளை ஒதுக்க வேண்டும்.

தண்ணீர் குளியல் ஆகாது. எண்ணெய் முழுக்குக் கூடாது வெந்நீரில்தான் குளிக்கவேண்டும். தலையில் உடலில் ஈரமில்லாமல் துணியினால் துவட்டிவிட வேண்டும். குளித்த பிறகு குளிர்ந்த காற்று உடலில் படக்கூடாது.

ஆஸ்துமா நோயாளிகள் விருந்துகளில் கலந்து கொள்ள கூடாது. அங்கு பல்சுவை உணவுகளைப் பறிமாறுகிறார்கள். காய்கறி, கிழங்கு, பழவகைகள், ஐஸ்கிரீம், பால் கோவா ஆகியவற்றுள் சில உடம்புக்குக் கெடுதலைச் செய்யும். வாழைப் பழம், தக்காளி, உருளைக் கிழங்கு, மோர், தயிர்கூடச் சில சமயங்களில் சில ஆஸ்துமாக்காரர்களுக்கு ஒந்துக் கொள்வதில்லை. முற்றிய 

வாழைக்காய், சேப்பங்கிழங்கு, மஞ்சள் பூசணி இவையும் ஆஸ்துமா காரர்களுக்கு ஆவதில்லை. இரவில் பால் சாப்பிடுவது கூட இவர்களுக்குச் செரிமானக் குறைவை உண்டாக்கித் தொந்தரவு கொடுக்கும்.

முந்திரிப் பருப்பு, மணிலாக் கடலை, பலாப் பழம், வாழைப் பழம், பேரிச்சை, தக்காளிப் பழங்கள் இழுப்பைத் தூண்டுவதால் இவற்றையும் ஆஸ்துமா நோயாளிகள் விலக்கவேண்டும்.

உணவில் சில செரிமானம் ஆகாமல் தொந்தரவு கொடுக்கும் இறைச்சி, முட்டை, மீன் வகைகளில் குளத்து மீன் ஆகியவற்றை ஒதுக்க வேண்டும். எளிதில் ஜீரணமாகாத உணவுகள் விஷயத்தில் இவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.

எந்தெந்த உணவு வகைகளைச் சாப்பிட்டால் தொந்தரவு உண்டாகிறது என்று இவர்கள் ஒவ்வொரு நாளும் கவனித்து வந்து அந்த உணவை நீக்கவேண்டும். கத்தரிக்காய் சாப்பிட்டால் சிலருக்கு ஒத்துக் கொள்வதில்லை. வெண்டைக்காய் சிலருக்குத் தொந்தரவு தருகிறது. முள்ளங்கி சாப்பிட்டால் சிலருக்கு உபத்திரவம் ஏற்படுகிறது.

திருமணமான ஆண் ஆஸ்துமா நோயாளிகள் விலக்க வேண்டிய பல விஷயங்களில் ஒரு முக்கியமான் விஷயம் தாம்பத்திய உறவு. இவர்கள் இரவில் அதிக நேரம் கண் விழிப்பதும், இன்ப சுகங்களில் அதிக நேரம் நாட்டம் செலுத்துவதையும் தவிர்க்க வேண்டும். உயிரணு நஷ்டம் இந்த நோயாளிகளுக்கு இழக்கக் கூடாத ஒன்று. ஆகவே அளவோடு நடந்து கொள்ளவேண்டும்.

இதுவரை ஆஸ்துமா நோயாளிகளுக்கு ஆகாது, கூடாது, ஒத்துக் கொள்ளாது, ஏற்காது என்று சொல்லப்படும் விஷயங்களை மட்டுமே சொல்லி வந்தேன். காரணம் நாம் தெரிந்து கொள்ளும் விஷயங்களில் ஆகாதவற்றைச் சொல்லிவிட்டால் நோயாளிகள் கூடுதல் தொந்தரவுகளைக் குறைத்துக்கொள்ளலாம். ஆகவே தவிர்க்கவேண்டிய வற்றை முதலில் கவனியுங்கள். தொந்தரவுகள் தொலை தூரம் ஓடிவிடும்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...