Skip to main content

Google ads

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை 

✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள்.

✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும்.

✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு.

✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும்.

✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள்.

✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள். 

✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை.

✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம்.

✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம்.

✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவர்கள் ஆல்புமின் சிறுநீரோடு வெளியேறுவதால் இந்தக் கோளாறு ஏற்படுவதாகக் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

ஊது காமாலை நோய்

✷இது உடம்புக்குத் தேவையான புரதச்சத்து.இந்தச் சத்து உடம்பில் ஒட்டாமல் வெளியேறுவதால் உடம்பு வீங்குகிறது. இதனால் இருதயத் துடிப்பும் பாதிக்கிறது.

✷முறைப்படி சிகிச்சை செய்து கொள்ளாவிட்டால் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று டாக்டர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.

✷மஞ்சள் காமாலை நோய் கல்லீரலில் ஏற்படும் கெடுதலால் உண்டாகிறது. ஊது காமாலை சிறுநீர்ப் பிரித்திகளில் ஏற்படும் கோளாறுகளால் உண்டாகிறது. 

✷இதனால் இது வேறு நோய் கல்லீரலுக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. இந்த நோயை அறியச் சிறுநீரைச் சோதனை செய்தால் போதும். 

✷அல்புமின் பால் போல் சிறுநீருடன் கலந்து வெளியேறுவது தெரியும். உடனே இதைத் தடுத்து நிறுத்த மருத்துவச் சிகிச்சை செய்துகொண்டால் சீக்கிரம் குணப்படுத்தலாம்.

✷பொதுவாக, இந்த நோய் வரக் காரணம் உடம்பி அதிக அளவில் உப்புச் சேர்த்துவிடுவதுதான் என்கிறார்கள் டாக்டர்கள்.

✷உப்பை உணவில் குறைக்க வேண்டும். இது மிக முக்கியம். அதிமுக்கியம்.

✷சிறுமிகளுக்கும் சிறுவர்களுக்கும் இந்த நோய் வந்தால் வயிறு சுரந்து பேதியாகும். உடல் வெளுத்து முகம் ஊதி உடம்பில் வலி உண்டாகலாம்.

✷இதற்குச் சித்த வைத்தியத்தில் நிறைய மருந்துகள் சொல்லப்பட்டிருக்கின்றன.

✷மஞ்சள் கரிலாங்கண்ணி இலை, அருகம் புல், மிளகு,துளசி சேர்த்து அரைத்துக் கொடுக்கிறார்கள்.

✷காட்டாமணக்கு இலையை இடித்துச் சாறு பிழிந்து கொடுக்கிறார்கள். இதற்கு உப்பும் புளியும் சாப்பிடக் கூடாது என்று பத்தியம் உண்டு. உப்பிலாக் கஞ்சிதான் இந்த நோயாளிகளுக்கு ஆகாரம்.

✷சீமை அத்திப்பழத்தைப் பசும் பாலில் காய்ச்சி சர்க்கரை போட்டுக் கொடுக்கலாம்.

✷பதநீர் கொடுக்கலாம். காப்பி டீ கொடுக்கக்கூடாது.

✷நோய் என்று தெரிந்ததும் உடனே சிகிச்சையை ஆரம்பிக்க வேண்டும். காலம் தாழ்த்தக் கூடாது.

✷குழந்தைகளுக்கும், கர்ப்பமான பெண்களுக்கும் இந்த நோய் வந்துவிட்டால் மிகவும் கவனமாகச் சிகிச்சை தரப்படவேண்டும்.

✷உப்பைக் குறைத்தால் இந்த நோயை ஊதி அணைத்து விடலாம்.

✷ஊது காமாலையைக் கண்டு அச்சப்படாதீர்கள்.

✷சிறுநீரகம் பாதிக்கப்படாமல் பார்த்துக் கொண்டால் ஊது காமாலையை ஒழித்து வெற்றி மாலை சூடலாம்!

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...