டயலிசிஸ் என்றால் என்ன?
✷ சிறுநீரகம் சீர்குலைந்தால் வயிற்றைக் கழுவிச் சுத்தம் செய்யவேண்டும். அதுபோல் இரத்தத்தைக் கழுவி சுத்தம் செய்யவேண்டும்.
✷வயிற்றைக் கழுவும் முறையை பெரிடோனியல் டயலிசிஸ் என்று பெயர். ஹீயோ டயலிசிஸ் என்றால். இரத்தத்தை சுத்தம் செய்யும் முறை என்று பொருள். சிறு நீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இரண்டு வகைகளில் சுத்தம் செய்து சிறுநீரகத்தைச் செயல்பட வைக்கிறார்கள்.
✷சிறுநீரகம் என்ன காரணங்களால் பாதிக்கப்படுகிறது. என்பதை முதலில் தெரிந்து கொள்ளவேண்டும். கிருமிகளால் சிறுநீரகம் அல்லது சிறுநீர்ப்பை தாக்கப்படுகிறது. சில சமயம் மருந்துகளினால் ஏற்படும் அலர்ஜி காரணமாகவும் பாதிக்கப்படலாம்.
டயாலிசிஸ் சிகிச்சை முறை |
✷நீரழிவு நோய் இருந்தாலும் சிறுநீரகத்தில் கோளாறு ஏற்படும். இரத்தக் கொதிப்பு அதிக அளவில் இருந்தாலும், மிதமான அழுத்தம் நீண்ட நாள் இருந்தாலும் பாதிப்பு ஏற்படும். சிறுநீரகப் பாதையில் கல்லடைப்பு இருந்தாலும் கோளாறு உண்டாகும்.
✷சிறுநீரகத்திலிருந்து பைக்கு வரும் குழாயின் அடிப்பாகம் மூடித் திறக்கும் அமைப்பு உடையது. அது இயங்காமல் திறந்து இருந்தால் பிரிக்கப்பட்ட மீண்டும் சிறுநீர் சிறுநீரகத்திற்குள் சென்று பாதிப்புக்களை உண்டாக்கும்.
✷சிறுநீரகத்தின் முக்கிய வேலை உடம்பில் உள்ள நீர், உப்பு ஆகியவற்றைச் சரியான அளவில் வைத்திருப்பது, உடம்பில் உள்ள கழிவுப் பொருட்களை வெளியேற்றுவது, இரத்த அழுத்தத்தைச் சரியான அளவில் வைத்திருப்பது, இரத்தம். ஊறுவதற்கு உதவுவதும் சிறுநீரகத்தின் வேலைகளே. இந்த வேலைகளில் தடை ஏற்பட்டால் சிறுநீரகம் சீர்குலைந்து போகும்.
✷இதற்காகவே இரண்டு சிறுநீரகங்கள் செயல் படுகின்றன. இதில் ஒன்று பாதிக்கப்பட்டாலும் மற்றொன்று அந்த வேலையைச் செய்து உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
✷சிறுநீரகத்தில் சிறு பாதிப்பு ஏற்பட்டிருந்தால் மருந்துகளைக்கொண்டு சரிப்படுத்தி விடமுடியும். அதிகமாகப் பாதிக்கப்பட்டால் டயசிலிஸ் முறையைக் கொண்டு சரிப்படுத்தவதைத் தவிர வேறு வழியில்லை.
✷இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்டால் மாற்று சிறுநீரகம் தான் பொருத்தவேண்டும்.
✷இதில் இன்னொரு முக்கிய விஷயத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும். சிலருக்குத் திடீரென்று சிறுநீரகச் சீர்குலைவு ஏற்படும். இன்னும் சிலருக்கு நாட்பட்டுச் சிறுநீரகம் பாதிக்கப்படும்.
✷இதற்குக் காரணங்கள் உண்டு. திடீரென்று ஏற்பட்டால் உடனே கவனிக்கவேண்டும். நாட்பட்ட நோய் என்றால் ஆற அமரக் கவனிக்கலாம்.
சிறுநீரகம் செயலிழந்து விட்டது என்பதை எப்படி அறிவது?இதன் அடையாளங்கள் என்ன?
✷ஒருவருக்கு ஒரு நாளைக்கு 1000 முதல் 1500 மில்லி லிட்டர் வரை சிறுநீர் வெளியேறவேண்டும். இந்த அளவு குறைந்தால் நீர் உடம்பில் ஏறி முகம் கை கால் வீக்கம் தோன்றும். தலை சுற்றல், இரத்தச் சோகை, மேல் மூச்சு வாங்குதல் ஏற்பட்டுக் கடைசியில் கோமா நிலை உண்டாகும்.
சிறுநீர் செயலிழப்பு வரைபடம் |
✷சிறுநீரில் சர்க்கரை அதிகமானால் முதலில் கால் வீங்கும். பிறகு உடம்பு முழுவதும் வீங்கும். இரத்தக் கொதிப்பு அதிகமானால் தலைவலி, மயக்கம், கண்பார்வை மங்குதல் ஏற்படும். இதனால் உடம்பிலுள்ள கெட்ட நீர் வெளியேற டயசிலிஸ் செய்தாகவேண்டும்.
✷வயிற்றிலுள்ள தீய நீரை வெளியேற்ற வயிற்றில் ஒரு குழாயைச் செலுத்தி கழுவும் திரவத்தை உள்ளே செலுத்தி யூரியா. உப்பு நீரை ஒரு பாட்டிலில் பிடித்து வயிற்றைச் சுத்தம் செய்கிறார்கள்.
✷இதுதான் வயிற்றைக் கழுவும் முறை உடலிலுள்ள இரத்தத்தை ஒரு டியூப் மூலம் வெளியே எடுத்துச்சென்று செயற்கைச் சிறுநீரக இயந்திரத்தில் செலுத்தி இரத்தத்திலுள்ள கழிவுகளை அகற்றி மீண்டும் சுத்த இரத்தத்தை உடம்பில் செலுத்துகிறார்கள்.
✷எப்போது டயசிலிஸ் செய்ய வேண்டும் என்பதை டாக்டர்கள் கண்டறிந்து சொல்லுவார்கள். சீரம், கிரியோட்டின் இரத்தத்தில் ஐந்து மில்லி கிராம் இருக்க வேண்டும்.
✷இது எட்டு மில்லிகிராமுக்குமேல் இருந்தால் டயசிலிஸ் செய்யவேண்டி வரும், சர்க்கரை நோயாளிகளுக்கு ஆறு மில்லி கிராம் இருந்தால் இவர்களும் டயலிசிஸ் செய்துகொள்ளவேண்டும். இதை டாக்டரே கண்டுபிடித்தச் சொல்லுவார்.
✷உடம்பில் ஏற்படும் ஒரு சிக்கலைத் தீர்க்கவே டயலிசிஸ் முறையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். இரத்த அழுத்தம் நீரிழிவு நோய் ஆகியவற்றால் ஏகப்பட்ட தொந்தரவுகள் உண்டாவதால் இந்த இரண்டு நோய்கள் விஷயத்தில் மிக அதிகக் கவனம் செலுத்தவேண்டும்.
Comments
Post a Comment