Skip to main content

Google ads

கண்களில் ஏற்படும் வெள்ளெழுத்து பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 கண்களில் உட்புறத்தில் பட்டன் மாதிரி வட்ட வடிவில் ஒரு லென்ஸ் இருக்கிறது. இந்த லென்ஸ் தூரத்தில் உள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது விரிந்து கொடுக்கும். கிட்டத்திலுள்ள பொருட்களையோ அல்லது உருவத்தையோ பார்க்கும் போது சுருங்கும்.

இதுதான் இந்த லென்ஸின் வேலை. இதன் மூலம் ஒரு பொருளைப் பார்க்கிறோம். எழுத்தைப் பார்க்கிறோம்.

லென்ஸ் இந்தச் சக்தியை இழந்துவிட்டால் நாம் பார்க்கும் பொருள்கள் மங்கலாகவும், தெளிவில்லாமலும் புகைமண்டலம் போல் வெள்ளையாகவும் தோன்றும்.

இது நோய் அல்ல. கண் பார்வையில் உண்டாகும் கோளாறு. இதைக் கிராம மக்கள் சாலேசரம் என்றும் வெள்ளெழுத்து என்றும் கூறுகிறார்கள்.

பிரஸ்பியோப்பியா என்று கண் மருத்துவர்கள் இதைக் குறிப்பிடுவார்கள்.

வெள்ளெழுத்து என்று இதை ஏன் சொல்லுகிறார்கள்?

 படிக்கும் போது புத்தகத்தில் உள்ள எழுத்துக்கள் தெளிவில்லாமல் வெள்ளையாகத் தோன்றும். கண்களுக்கு வெகு தூரத்தில் புத்தகத்தை வைத்துக் கொண்டு பார்த்தால் தான் எழுத்து தெரியும். படிக்க முடியும். அருகில் புத்தகத்தை வைத்துக் கொண்டு படித்தால் சரியாகத் தெரியாது.



இதேபோன்று உருவங்களும் தூரத்தில் இருந்தால்தான் தெரியும். கிட்டத்தில் இருந்தால் தெரியாது. இது கண்களுக்கு வரும் நோய் அல்ல. கண் பார்வையில் ஏற்படும் கோளாறு.

கண்நோய்க்கும் பார்வை கோளாறுக்கும் சம்பந்தம் இருக்கிறதா?

இது வேறு, அது வேறு. இரண்டும் ஒன்றல்ல என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

கண் பார்வைக் கோளாறு இரண்டு வகைகளில் உண்டாகும்.ஒன்று தூரப் பார்வை.இன்னொன்று கிட்டப் பார்வை.

வயது காரணமாக இந்தக் கோளாறு ஏற்படுகிறது என்று பொதுவாகச் சொல்லப்படுகிறது, இருந்தாலும் இதற்கு வேறு சில காரணங்களும் உண்டு.

கண் பார்வைக் குறைவுக்குச் சத்தான உணவு வகைகளை நீண்டகாலமாகவே சாப்பிடாமல் இருந்து வருவதும் ஒரு காரணம்.

கண்களுக்கு ஒளி தரும் சக்தியை வைட்டமின் - ஏ நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவதன் மூலம் பெறலாம்.

பால், முட்டை, கேரட், பப்பாளிப் பழம், மாம்பழம் இவைகளில் வைட்டமின் - ஏ நிறைய இருக்கிறது. 

இவை தவிரக் கண்களுக்கு ஒளி தரும் சத்துக்கள் பாதாம் பருப்பு, பேரீச்சம் பழம், அத்திப் பழங்கள் ஆகியவற்றில் உள்ளன.

இவற்றைச் சாப்பிட்டு வந்தால் இந்தப் பார்வைக் கோளாறுகள் ஏற்படாது. முருங்கைக்கீரையும் இந்தக் குறையைப் போக்குகிறது.

கண் பார்வைக் கோளாறுகளைப் போக்க டாக்டர்கள் சோதனை செய்து சொல்லுகிறார்கள்.

கண்ணாடி போடும்படி கண்களிலுள்ள லென்ஸ் சரியாக ஒளியை வளைத்து விழித் திரையில் ஒழுங்கான பிம்பத்தை விழச் செய்யக் கண்ணாடி ஒன்றுதான் உடனடிப் பரிகாரம். பைஃபோகல் (Bifocal) கண்ணாடி இந்தக் குறையைப் போக்குகிறது.

பைஃபோக்கல் கண்ணாடிகள் இரண்டு முகப்புக்களை உடையவை. இரண்டு வகை லென்ஸ்கள் பொருத்தப்பட்டிருக்கும்.

சாதாரணமாகப் பார்ப்பதற்குப் பெரிய லென்சும். எழுத்துக்களைப் படிப்பதற்குச் சிறிய லென்சும் இதில் இடம் பெற்றிருக்கும்.

இதனால் தூரப் பார்வையையும் கிட்டப் பார்வை யையும் ஒரே கண்ணாடி மூலம் சரிப்படுத்தி விடலாம். கண்ணாடியே வேண்டாம் என்று விரும்புகிறவர்கள் காண்டாக்ட் லென்ஸைக் கண்களில் பதித்துக் கொள்ளலாம்.

இது மூக்குக் கண்ணாடியைவிட விலை அதிகம். வசதி உள்ளவர்கள் காண்டாக்ட் லென்ஸ் பதித்துக் கொள்கிறார்கள்..  

வெள்ளெழுத்துக் குறைபாடு ஏற்பட்டு விட்டால் பிறகு கண் பார்வையே தெரியாமல் போய்விடுமா?கண் குருடாகிவிடுமா?

அப்படி எந்தக் குறைபாடும் ஏற்பட்டு விடாது. இப்படி அச்சப்படத் தேவையும் இல்லை.

நம்மால் வயதாகிக் கொண்டு போவதைத் தடுத்து நிறுத்திவிட முடியாது, வயதால் ஏற்படும் இந்தக் குறையை மாற்றிவிடக் கண்ணாடி இருக்கவே இருக்கிறது.

குறை என்று ஒன்று இருந்தால் அதற்கு ஈடு செய்ய் நிறை என்று ஒன்று இருக்கும் போது நாம் ஏன் அச்சப்பட வேண்டும்.

Comments

Post a Comment

Popular posts from this blog

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும்

குழந்தைகளுக்கு வரும் சில பொதுவான நோய்களும் அந்த நேரத்தில் கொடுக்க வேண்டிய உணவு முறைகளும் 1. முதல் சில மாதங்களில் குழந்தைகளுக்கு ஏற்படும் வாந்தி & வயிற்றுப்போக்கு (Vomiting & Diarrhoea): Vomiting & Diarrhoea குழந்தைகளுக்கு ஏற்படும் நோய்களில் முக்கியமானவை. முதல் Step குழந்தைக்கு கொதிக்க வைத்து ஆறவைத்த தண்ணீரைச் சிறிது கொடுக்கலாம். (or) feed of பால் கொடுப்பதை நிறுத்தலாம். பால் கொடுப்பதற்கு பதிலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளதை செய்து கொடுக்கலாம். பாலைக் கொதிக்க வைத்து அதில் சிறிது எலுமிச்சம் பழச்சாற்றை விடவும். பாலிலிருந்து தண்ணீர் தனியாகவும் Paneer தனியாகவும் பிரிந்து விடும். இதை வடிகட்டி அந்த நீரை மட்டும் இடைவெளி விட்டு கொடுத்து வரலாம். (or)  (i) 200ml தண்ணீர் (ii) 2 tsp சர்க்கரை  (iii) 1 tsp உப்பு  (iv) அரைமூடி எலுமிச்சம் பழச்சாறு (v) ½ tsp Soad bicarb (cooking soda) இவற்றைக் கலந்து அடிக்கடி கொடுத்து வரலாம். குழந்தை dehydration ஆகாமல் தடுப்பதற்கு இது மிகவும் உதவும். குழந்தைகளுக்கு உணவு கொடுக்கும் பாத்திரங்களை மிகவும் சுத்தமாக உபயோகப்படுத்தல் அவசியம். (2)...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...