வெப்பத்தையும் குளிரையும் சமாளிக்கவும் உடம்பின் உஷ்ணத்தை ஒரே சீராக வைத்துக் கொள்ளவும். மனிதனுக்கு உடை தேவைப்படுகிறது. இதனால் பருவ மாறுதல்களுக்கு ஏற்ப உடைகளைத் தைத்துப் போட்டுக் கொண்டு உடல் ஆரோக்கியத்தைப் பாதுகாத்து வந்தார்கள் நம் முன்னோர்கள்.
உடை, உடம்பின் பாதுகாப்பிற்காக என்ற நிலைமாறி உடல் அழகுக்காகவும் தோற்றப் பொலிவுக் காகவும் புதிய புதிய பாஷன்கள் என்ற முறையில் உடை அலங்கார நிபுணர்கள் சில மாறுதல்களைச் செய்தார்கள்.
இதனால், ஒருபக்கம் நன்மை உண்டானது என்றாலும் இலைமறை காய்போல் சில தீமைகளும் தொடர்ந்துவந்து உடல் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன.
இந்தியா வெப்பமான நாடு. இதற்கு மாறுபாடான சீரோஷ்ண நிலைமைகளை உடையவை மேலைநாடுகள்.
குளிர்ச்சியான நாட்டின் உடை அலங்காரம் வெப்ப நாட்டில் புகுந்தது. காழுத்தை இறுக்கும் காலர், டைப் பழக்கம், பாதங்களை மூடும் ஷூப் பழக்கம் ஆகியவற்றை இங்குள்ள இந்தியர்கள் பின்பற்றவேண்டிய கட்டாயத்திற்கு வந்த பிறகு, புதிய நாகரிகத்தால் புதிய நோய்கள் சில தோன்றின.
குறிப்பாகத் தோல் தொல்லைகள் அதிகமாயின. இரத்த நாளங்கள் அழுத்தப்படுவதால் வலி, வீக்கம், நரம்புக் கோளாறுகள் உண்டாயின.
உடைகளாலும், உடைகளின் நிறங்களாலும் மனித உணர்வுகள் பாதிக்கப்படுவதாக மனோதத்துவ அறிஞர்கள் கூறுகிறார்கள்.
சோர்வு, மயக்கம், மனத்தளர்ச்சி, மந்த நிலை ஏற்படுவதாக உடற்கூறு அறிஞர்கள் சொல்லுகிறார்கள். பெண்கள் இறுக்கமான பிரா அணியவும், உடலோடு ஒட்டிய ஜாக்கெட் ,சோளிகள் உடுத்தவும் செய்கிறார்கள்.
இதனாலும் சில கெடுதல்கள் உண்டு.
பல பேர் இறுக்கமான ஜட்டிகளை அணிகிறார்கள். நைலான், நைலக்ஸ், டெர்லின், டெரிகாட்டன் துணி இரகங்கள் பெருகப் பெருக உடம்பின் வியர்வையை இந்தத் துணிகளால் ஈர்க்க முடியாமல் பலர் சரும நோய்களால் பாதிக்கப்படுகிறார்கள்.
இடுப்பைச் சுற்றிப் பாவாடை நாடா இறுக்கமாகக் கட்டப்படுவதால் பெண்களுக்கு இடுப்பைச் சுற்றித் தோல் தொல்லை உண்டாகிறது. இதனால் சூதகக் கோளாறுகளும் ஏற்படுவதாக மருத்துவ சொல்லுகிறார்கள். ஆராய்ச்சியாளர்கள்
நாகரீக பிரா அணிவதால் மார்புப் புற்று நோயும் சில பெண்களுக்கு உண்டாகிறது. காற்றும் வெளிச்சமும் இந்தப் பகுதிகளில் புகாததால் தோலின் ஆரோக்கியம் கெடுகிறது.
இளைஞர்கள் டைட் பேண்ட் உடலை ஒட்டிய சட்டை போன்ற இறுக்கமான உடைகளை உடுத்துவதால் உறுப்புகள் உஷ்ணமடைந்து ஆண்மைக் குறைவும் மலடும் ஏற்பட வாய்ப்புகள் உண்டு என்று மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.
கல்லூரி, பள்ளி மாணவர்களும் மாணவிகளும், அலு வலகங்களில் வேலை பார்க்கும் ஆண் பெண்களும் இறுக்க மான உடைகளோடு பல மணி நேரங்கள் இருக்கும் சூழ் நிலைகளால் அலர்ஜி நோய்க்கு ஆளாகிறார்கள்.
எடுப்பான தோற்றம் வேண்டும் என்பதற்காக உடலோடு ஒட்டிய உடைகளை அணியும் போது தோலின் துவாரங்களில் வியர்வை, அழுக்கு, கிருமித் தொற்றுகளுக்கு ஆளாகி வயிற்றுக் கோளாறு, சிறுநீர்த் தொந்தரவு மலச் சிக்கல், நரம்புப் பலவீனம், இரத்தக் குழாய் பாதிப்பு ஆகிய தொந்தரவுகளால் பாதிக்கப்படுகிறார்கள்.
உடுத்தும் உடைகள், துணிகள் காலத்திற்கு ஏற்ற முறையில் இல்லாதிருப்பதால் மலச் சிக்கல் மட்டுமல்ல. மனச் சிக்கலும் ஏற்பட்டு மன நோயாளிகளாகவே இருந்து வருகிறார்கள்.
கைத்தறித் துணிகளே கோடைக் காலத்திற்கு ஏற்றவை. இந்தத் துணிகளை இப்போது எவரும் உடுத்துவதில்லை.
வெளி நாடுகளிலிருந்து வந்து குவியும் நவீன மோஸ்தர் துணிகளில் பேண்ட், சட்டை உடுத்துகிறவர்கள் இந்தத் துணி நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏற்றவையா என்று எண்ணிப் பார்ப்பதில்லை.
பேஷன் நம்மைக் கொஞ்சம் கொஞ்சமாக நாசமாக்கிக் கொண்டு வருகிறது.
ஜீன்ஸ் வகையைச் சேர்ந்த சாக்குப் போன்ற முரட்டுத் துணிகள், மென்மையான உடலில் உராய்ந்து, தோலைக் கெடுக்கின்றன.
இரசாயன நூல் இழைகளை உடம்பு ஏற்றுக் கொள்ளாதபோது அது அலர்ஜி நோயை உண்டாக்குகிறது. நாகரிகத்தின் பெயரால் வெளியே சொல்லமுடியாமல்
புழுங்கிக் கொண்டு நோய் சுமந்த உடலோடு உலா வருகிறார்கள் பலர்.இந்நிலை மாறவேண்டாமா?
Comments
Post a Comment