✷கழிவுப் பொருள்களோடு சில வேளைகளில் இரத்தமும் வெளியேறுவது உண்டு. சாதாரணமாகச் சிரமத்துடன் மலம் கழிக்கும் போது சில துளிகள் இரத்தம் வரலாம்.
✷இதுவே தொடர்ந்து நடந்தால் உடலுக்கு மட்டுமல்ல,
✷உயிருக்கும் ஆபத்து. மலத்தில் இரத்தம் வருவதற்குப் பல காரணங்கள் உண்டு. இதற்குக் குடல் நோய்களும் ஒரு காரணம்.
✷குடல் நோய்களில் அமீபியாசிஸ் என்று சொல்லப்படும் அமீபா கிருமிகளால் உண்டாகும் நோயும்.
✷ஷீகெல்லா என்று சொல்லப்படும் கிருமிகளால் உண்டாகும் நோயும், மலம் கழிக்கும்போது இரத்தம் வரக் காரணமாக இருக்கின்றன.
✷இந்த நோயாளிகளில் ஒரு நாளைக்குப் பல தடவை மலம் கழிப்பார்கள். மலத்தில் சளியும் இரத்தமும் வரும். மலத்தை சோதித்துப் பார்த்தால் அமீபா கிருமிகளும் ஷீகெல்லா கிருமிகளும் காணப்படும்.
✷அமீபா கிருமிகளால் உண்டாகும் மலப் போக்கில் இரத்தம் குறைவாகவும் மலம்; அதிகமாகவும் வெளியேறும். துர்நாற்றம் கடுமையாக இருக்கும்.
மலத்தில் ரத்தம் வருதல் |
✷அமீபா கிருமியால் இன்னோர் ஆபத்தும் உண்டு. இந்தக் கிருமி கல்லீரலுக்குப் போய் அந்த இடத்தில் புண்ணை உண்டாக்கும். இதனால் பலவிதக் கெடுதல்கள் உண்டாகின்றன.
✷இவை தவிர. இரைப்பையில் ஏற்படும் சில நோய்களும் மலத்தோடு இரத்தம் வெளியேறக் காரணமாக அமைந்துவிடுகின்றன.
✷இரப்பையில் புண்ணும், இரைப்பைப் புற்றுநோயும் இதனால் உண்டாகலாம். இதனால் மலத்தில் இரத்தம் விழுவதோடு வாந்தியிலும் இரத்தம் வரும்.
✷அலர்ஜி நோய்களும் இரத்தம் வரக் காரணம் என்கிறார்கள் டாக்டர்கள். இரைப்பை நோய்களுக்கு இரையாகிறவர்கள் 20 வயது முதல் 40 வயதுக்காரர்கள்தாம் அதிகம்.
✷குடல் புண் அழற்சி ஏற்படும்போது வயிற்றில் வலி உண்டாகும். மலத்தில் இரத்தம் வரும். இது அறிகுறி. உடல் எடை குறையும். உடல் இளைத்துப் போய்ச் சோகை நோயும் உண்டாகலாம்.
✷மலத்தில் இரத்தம் வருவதற்கு மூலநோய் ஒரு முக்கிய மான காரணம். இதை இரத்த மூலம் என்று சொல்லுவார்கள். கல்லீரலிலுள்ள இரத்த நாளங்கள் சரிவர வேலை செய்யா விட்டால் ஆசன வாயில் உள்ள இரத்த நாளங்களில் தேக்கம் ஏற்பட்டு அதுவே மூல நோயாகி மலத்தில் இரத்தம் விழக் காரணமாக இருக்கிறது.
✷இதற்கு முன்னே எல்லாம் ஆப்ரேஷன் செய்துதான் நோயைக் குணப்படுத்தினார்கள். இப்போது அவசியம் ஏற்பட்டால் மட்டுமே ஆப்ரேஷன் செய்கிறார்கள். மருந்துகள் மூலமாகவே குணப்படுத்துகிறார்கள்.
✷சித்த ஆயுர்வேத வைத்தியத்தில் மூல நோய்க்குப் பல மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. கீரை, பழங்கள் சாப்பிடுவதால் இந்த நோயைக் கட்டுப்படுத்தலாம். தண்ணீர் அதிகமாகக் குடிப்பதும் நல்லது.
✷கல்லீரல் சம்பந்தமான கோளாறுகளுக்கு வைட்டமின்-சி. சத்துள்ள உணவுகளை அதிகமாகச் சாப்பிட வேண்டும்.
✷பி.காம் பிளக்ஸ் வைட்டமின் பி-12 இதற்கு மருந்து. மலத்தில் இரத்தம் விழுந்தால் உடனே மலப் பரிசோதனை செய்து அது எந்தக் கிருமித் தொற்றால் உண்டானது என்று சோதித்து அறிந்துகொள்ள வேண்டும். ஈரல் சம்பந்தமாக இருந்தால் இரத்தப் பரிசோதனை செய்து பார்த்துவிட வேண்டும்.
✷இப்போது நவீன மருத்துவக்கருவிகள் எல்லாம் கண்டுபிடிக்கப்பட்டுவிட்டன. எது சம்பந்தமான நோய் என்று தெள்ளத் தெளிவாகக் கண்டுபிடித்துச் சிகிச்சை அளிக்கிறார்கள்.
✷பிராக்டாஸ்கோபி, பேரியம், எனிமா, எக்ஸ்-ரே படம் இவற்றின் மூலம் நோய் எந்தப் பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது என்று புரிந்துவிடும்.
✷கல்லீரல் பாதிப்புக்கு மதுவும் ஒரு காரணம் என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.
✷சுத்தமான நீர், சுத்தமாண உணவு, இந்த இரண்டும் குடல் சம்பந்தமான நோய்களை வரவிடாமல் தடுக்கின்றன.
✷இதில் கவனம் செலுத்தினால் அமீபா, ஷீகெல்லா கிருமிகளை விரட்டியடிக்கலாம்.
✷உடம்புக்குப் பாதுகாப்பான இரத்தம் உடம்பில்தான் இருக்க வேண்டும். உடம்பை விட்டுக் கழிவுப் பொருளாக வெளியே வரக்கூடாது.
✷மலத்தில் இரத்தம் என்றால் மனத்தில் பயம் ஏற்பட வேண்டும். அப்போதுதான் பரிகாரம் தேடமுடியும் அலட்சியப் போக்கு ஆபத்தை விளைவிக்கும்.
Comments
Post a Comment