Skip to main content

Google ads

அலர்ஜி கொப்புளங்கள் என்றால் என்ன? அதை குணப்படுத்தும் வழிமுறைகள் என்னென்ன?

 குழந்தைகளுக்கு எவ்விதக் காரணமும் இல்லாமல் உடம்பில் கொப்புளங்கள் உண்டாவதைப் பார்க்கிறோம். இவை எப்படி வந்தன என்பதை அறிய முடிவதில்லை.

டாக்டரிடம் காட்டினால் இது ஒரு வகை அவர்ஜியினால் உண்டாகிறது என்று சொல்லுகிறார். இதற்கு அர்டிகாரியா அழைக்கிறார்கள். என்று மருத்துவப் பெயரிட்டு ஏற்றுக் கொள்ளாத ஒரு பொருள் உடம்பில் சேர்வதால் இது உண்டாகிறது. இதை அலெர்ஜன்கள் என்றும் அழைக்கிறார்கள்.

உணவு வகைகளில் சில கொப்புளங்களை காற்றில் மிதந்து வரும் மகரந்தப் பொடிகளும் கொப்புளங்களை உண்டாக்கலாம்.

அல்லது குழந்தைகள் நோய் வாய்ப் படும் போது கொடுக்கப்படும் மருந்து வகைகளும் காரணமாக இருக்கலாம். அல்லது வேறு ஏதோ ஒன்றாகவும் இருக்கலாம். இவை உடம்பில் புகுந்து அலர்ஜி விளைவுகளை உண்டாக்கிக் கொப்புளங்களாக வெடிக்கும்.

பொதுவாகக் குழந்தைகளையே அலர்ஜி அதிகமாகப் பாதிக்கிறது.

யுர்டிகாரியா கொப்புளங்கள் என்று ஒரு வகை உண்டு. இது மருந்துகளால் குழந்தைகளின் தோலில் சிவப்பு இளஞ். சிவப்புக் கலந்த புள்ளிகள் முதலில் தோன்றும். பிறகு இதுவே சிறுசிறு கொப்புளங்களாக மாறும். ஓரிடத்தில் தோன்றும். பிறகு வற்றிவிடும். இன்னோர் இடத்தில் தோன்றும். கொப்புளம் வெடித்ததும் அரிப்பு உண்டாகும். இரவில் இந்த அரிப்பு அதிகமாகித் தொந்தரவு கொடுக்கும்.


உதடுகள், கண்ணைச் சுற்றியுள்ள இடங்கள் ஆகிய பகுதிகளில் தோன்றினால் நீர் கோர்த்துக் கொள்ளும். குழந்தைகள் சொரிந்து விடும்போது மற்ற இடங்களுக்கும் பரவும்.

மருந்துகளைக் குழந்தைகளுக்குக் கொடுக்கும் போது டாக்டர் சொல்லும் அளவோடு கொடுக்க வேண்டும். அளவுக்கு அதிகமாகக் கொடுப்பதால், யுர்டிகாரியா என்ற நோய் தோன்றுவதாகக் கண்டு பிடித்திருக்கிறார்கள்.

தோலின்மீது பூசப்படும் மருந்தை அளவுக்கு அதிமாகப் பூசினாலும் யுர்டிகாரியா உண்டாகலாம்.

குழந்தைக்குக் கொடுக்கப்படும் பால்கூட இந்த நோயை உண்டுபண்ணும் என்று டாக்டர்கள் சொல்லுகிறார்கள்.

யுர்டிகாரியாவைத் தோற்றுவிக்கும் அலர்ஜென்கள் எவை என்று கண்டுபிடிப்பது கஷ்டம் என்றாலும், குழந்தை புதிதாக என்ன சாப்பிட்டது என்று தெரிந்தால் அதை இன்னொரு முறை கொடுக்கக் கூடாது.

குழந்தைகள் எதைக் கண்டாலும் எடுத்து வாயில் வைக்கும் சுபாவம் உள்ளவை. ஆகவே அலர்ஜி நோய்களுக்குக் குழந்தைகள் அதிகமாக இலக்காவதைப் பார்க்கிறோம்.

குழந்தை உணவு வகைகள் பல இப்போது புதிது புதிதாக மார்க்கெட்டுக்கு வந்து வியாபாரம் ஆகி கிக் கொண்டிருக்கின்றன.

எந்த உணவு குழந்தைகளுக்குப் பொருந்தும் உணவு என்பதை அனுபவப்பட்ட டாக்டர்கள் சொல்லி விடுவார்கள். அந்த உணவை மட்டுமே கொடுக்க வேண்டும்.

அலெர்ஜி நோய்களைக் கண்டுபிடிக்க, பெரிய நகரங்களில் உள்ள மருத்துவ மனைகளில் தனிப்பிரிவை ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

குழந்தைகளுக்கும் சரி, பெரியவர்களுக்கும் சரி, காற்றில் பரவும் அலர்ஜென்களைக் கண்டுபிடித்து அதற்கு மருத்துவம் செய்கிறார்கள்.

உடலைப் பாதிக்கும் சாதாரணக் கொப்புளங்கள் என்றால் எத்தனையோ மருந்துகள் இருக்கின்றன.

உடம்பில் தடிப்போ, கொப்புளமோ தோன்றினால் சோறு வடித்த கஞ்சியைச் சிறிது உப்புக் கலந்து உடம்பில் தேய்த்தாலே போதும், கொப்புளம் வடிந்துவிடும்.

இது தவிர, சீரகத்தைப் பொடியாக்கித் தேங்காய்ப் பாலில் கலந்து கொப்புளத்தின் மீது தடவினால் அது உடைந்து ஆறிவிடும்.

ஆனால் இது அலர்ஜியினால் ஏற்பட்ட கொப்புளமாக் இருப்பதால் அலர்ஜிக்குக் காரணம் என்ன என்று கண்டு பிடித்து அதை நீக்கினால் கொப்புளம் உடலில் பரவாது.

காரணத்தைக் கண்டுபிடிக்காமல் மருந்துகளைப் பூசுவதால் நோய் திரும்பத்திரும்ப வந்துகொண்டே இருக்கும். சாதாரண குணமாகாமல் அர்டிகாரியாவோ,அல்லது யுர்டிகாரியாவோ,எந்த வகையைச் சேர்ந்ததாக இருந்தாலும் இதற்கு அடிப்படை அலர்ஜி என்பதால் நீங்களே சொந்தமாக வைத்தியம் செய்து கொண்டு காலத்தைக் கடத்த வேண்டாம்.

குழந்தை வைத்தியரை அணுகிப் அதற்குப் பரிகாரம் தேடுங்கள். இதுதான் இம்மாதிரி நோய்களுக்குச் சரியான அணுகுமுறை.

பாவம் குழந்தைகள். அவை இரவிலும் பகலிலும் சொரிந்துகொண்டு அவதிப்படும்படி விட்டுவிடாதீர்கள்.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...