விஞ்ஞான வித்தகர்கள் பல நாடுகளின் சூரியக் கதிர்களை ஆராய்ந்தனர். சூரியனின் கதிர்களில் ஏழுவித நிறங்கள் இருப்பதாகக் கண்டுபிடித்தார்கள். ஊதா. அவுரி நீலம், பச்சை, மஞ்சள், ஆரஞ்சு, சிவப்பு ஆகிய ஏழு நிறங்கள் இருப்பதைக் கண்டார்கள். இதை ஹீலியோ பயாலஜி என்றும் தமிழில் சூரிய ஒளி உயிரியல் ஆய்வு என்றும் கூறுகிறார்கள்.
உலக நாடுகளின் பிளேக் நோய், காலரா நோய், டி.பி. நோய், இன்புளுயன்சா ஆகிய நோய்கள் பரவி இருந்த கால கட்டங்களை ஆராய்ந்த போது சூரியனில் ஏற்படும் கொந்தளிப்பே இதற்குக் காரணம் என்று உலக நாட்டு விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள். தக்க ஆதாரங்களுடன் சான்று.
சூரியனிலிருந்து வெளிப்படும் ஊதா நிறக் கதிர் வீச்சுக்கு அல்ட்ரா வயலட் ரேஸ் என்று பெயர்.
இந்த ஊதா நிறக் கதிர் உச்சி நேரத்தில் வெளிப்படுகிறது. கிழக்கே உதிக்கும் சூரியன் படிப்படியாக உயர்ந்து உச்சிக்கு வரும் நேரத்தில் ஊதா நிறக் கதிர்களை குளித்துப் பாய்ச்சுகிறது. இந்த நேரத்தில் அல்ட்ரா வயலெட் கதிர்கள் பூமியைத் தாக்குகின்றன.
உச்சி நேரத்தில் நாம் வெளியே செல்லக் கூடாது. அப்படியே வெளியே செல்வதாக இருந்தால் குடை பிடித்துக் கொண்டு போவது நல்லது. உடல் மூடப்பட்டிருக்க வேண்டும். தலைக்குத் தொப்பியோ, உடலுக்குச் சட்டையோ போட்டு மூடியிருக்க வேண்டும். ஊதாக் கதிர்கள் பலவீன மானவர்களின் தோல் பகுதியைத் தாக்குவதால் சருமப் புற்றுநோய் உண்டாகும் அபாயம் உண்டு என்று கூறுகிறார்கள்.
அல்ட்ரா வயலெட் கதிர்களால் உடம்பின் தோல். உதடு, கண்களிலுள்ள கார்னியா தாக்குதலுக்கு ஆளாகிறது. தோல்களிலுள்ள செல்களைத் தாக்கி இரசாயன் மாற்றங்களை உண்டாக்கிப் புற்றுநோய்க்கு இடமளிக்கிறது.
எல்லோருக்குமே இதனால் ஆபத்து உண்டா? எல்லாக் காலங்களிலும் இதனால் அபாயம் உண்டா?
அல்டரா வயலெட் கதிர்கள் நம்மைத் தாக்காமல் இருக்க விண்வெளியிலுள்ள ஓஸோன் என்று சொல்லப்படும் வாயு மண்டலம் சூரியனிடத்திலிருந்து வரும் இந்தக் கதிர்களைத் தடுத்துச் சிதைத்து விடுகிறது. ஓஸோன் வாயுவில் அடர்த்திக் குறைவு ஏற்படும்போது அல்ட்ரா வயலெட் சந்து பொந்து இடைவெளிகளில் புகுந்து பூமியை நோக்கி வந்து விடுவதும்
உண்டு. அப்போது பாதிப்பு அதிகமாகிறது. நாம் நோய்க்காகச் சாப்பிடும் சில மருந்துகளின் விளைவால் அல்ட்ரா வயலெட் கதிர்கள் ஈர்க்கப்பட்டு நம் உடலுக்குக் கேடு விளைவிக்கிறது. ஊதா நிறக் கதிர்களால் உடலுக்கு நன்மைகளும் உண்டு. ஆனால் இது போன்ற தீமையும் உண்டு என்று தெரிந்து வைத்திருப்பது நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வழி வகுக்கும்.
Comments
Post a Comment