குழந்தைப் பருவத்தில் கண்களைப் பாதிக்கும் நோய்கள் பல. இவற்றுள் கண் சூட்டு நோய் என்று சொல்லப்படும் (Conjunctivitis) கன்ஜங்டிவிடிஸ் என்பது ஒன்று.
இது ஒரு தொற்றுநோய். குழந்தைகள் நெருங்கிப் பழகி விளையாடும்போது இந்த நோய் மற்ற குழந்தைகளுக்குப் பரவுகிறது.
கண் சூட்டு நோய் விஷக் கிருமிகளால் உண்டாகிறது. விஷக் கிருமிகள் காற்றில் பறந்து வந்து கண்ணில் ஒட்டிக்கொள்கின்றன. ஒரு மெல்லிய சவ்வு விழி வெண்படத்லத்தையும் இமைகளின் உட் பகுதியையும் மூடிக்கொண்டிருக்கிறது.
கண் நோய் குணமாக |
இந்த சவ்வு விஷக் கிருமிகளால் தாக்கப்படும் போது சவ்வு வீக்கம் அடைகிறது. கண்களில் எரிச்சல் உண்டாகிறது. இமைகள் சிவந்து தடித்துவிடுகின்றன. கண்ணிலிருந்து ஒருவித்த திரவம் வெளிவருகிறது. இது மஞ்சள் நிறத்தில் இருக்கும். இதைப் பீளை என்றும் சொல்லுவார்கள்.
கண் இந்த நோயால் பாதிக்கப்படும் போது கண் கூசும். வெளிச்சத்தைப் பார்க்க முடியாது. இதைக் கவனிக்காவிட்டால் விழி வெண் படலத்தில் புண் உண்டாகும். பார்வைகூடப பாதிக்கும்.
இந்த நோயை ட்ரக்கோமா என்றும், இமை இணைப்படல் நோய் என்றும் சொல்லுவார்கள். குறிப்பாகக் குழந்தைகளை இந்த நோய் தாக்குவதால் கண் பார்வை கொஞ்சங் கொஞ்சமாக மங்கிக் கடைசியில் பார்வைக் குருடும் ஏற்படலாம் என்று கண் டாக்டர்கள் சொல்லுகிறார்கள். விழி வெண்படலத்தில் ஒளி ஊடுருவாமல் போகலாம். அப்போது கண் பார்வை கடுமையாகப் பாதிக்கப் படுவதாகச் சொல்லுகிறார்கள்.
இந்த நோய் திடீரென்று கண்களைத் தாக்குவதால் இதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை என எதையும் செய்யமுடியாது. சுமார் ஆறு மணி நேரத்தில் இந்த நோய் தீவிரமடைகிறது. கண் சூட்டு நோய் வந்தால் சுமார் ஏழு மணி நேரம் வரை நீடிக்கும். பிறகு குணமாகும் என்று கூறுகிறார்கள். உடனே கவனித்துக் கண் சிகிச்சை செய்து கொண்டால் விரைவில் குணமாகும்.
கன்ஜங்டிவிடிஸ் நோய் கிருமிகளால் உண்டாவதால் சல்பா மருந்துகளும், வாக்ஸின் மருந்துகளும், பென்சிலின் மருந்துகளும் இதற்குப் போட்டுக் குணப்படுத்துகிறார்கள்.
கொசுக்கள், ஈக்கள் இந்தக் கண் நோய்க் கிருமிகளைக் கொண்டுவந்து கண்ணில் விட்டுவிடுகின்றன. இதனால் இமை ஓரத்தில் விளக்கெண்ணெய் தடவுகிறார்கள். கொசுக்களோ அல்லது ஈக்களோ நெருங்குவதில்லை.
கண் நோயால் பாதிக்கப்பட்வர்களே இந்த நோயை அதிகமாகப் பரப்பிவருகிறார்கள். இவர்களின் விரல் ஓரங்களில் ஒட்டிக்கொண்டிருக்கும்.
விஷக் கிருமிகள் மற்றவர்களைத் தொடும்போதும், இவர்கள் உபயோகிக்கும் கைக்குட்டை, துண்டு, பிற பொருட்களை மற்றவர்கள் உபயோகிக்கும்போதும் விரைவில் இந்த நோய் பரவிகிறது.
தூசு, புகை, அசுத்த நீர் இந்த நோயைப் பரப்புவதால் சுற்றுப் புறத்தைத் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும். இந்த நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பாமல் வீட்டிலேயே வைத்திருக்க வேண்டும்.
கண் நோய் குணமாக |
இதன் மூலம் மற்ற பிள்ளைகளுக்கு நாம் நன்மை செய்தவர்களாவோம். ஒளிபட்டுக் கண் கூகவதால் கூலிங் கிளாஸ் போட்டுக் கொள்வது நல்லது. கண் மிகுதியான வெளிச்சத்தால் தாக்கப்படாமல் இது தடுக்கிறது.
கண்களைக் குளிர்ந்த நீரில் கழுவி வரவேண்டும். அதுவும் சுத்தமான நீரினால் கழுவவேண்டும். கண்ணிலிருந்து வரும் பீளையைத் துடைக்க ஒரு தனித் துணியை கையில் வைத்துக் கொள்வது நல்லது.
மஞ்சள் ஒரு கிருமிநாசினி. எனவே மஞ்சளை அரைத்து அந்தத் தண்ணீரில் ஒரு வெள்ளைத் துணியை நனைத்துக் காற்றில் உலரவைத்துப் பிறகு அதையே கைக்குட்டை போல் உபயோகிக்கலாம். கண்ணிலிருந்து வரும் திரவத்தைக் கண்ட கண்ட துணிகளால் துடைக்கக் கூடாது.
ஒரே துணியை, சுத்தமான துணியை மட்டும் உபயோகிக்க வேண்டும். கண் நோய் வந்திருக்கும் போது கண்ணுக்கு வேலை கொடுக்கக் கூடாது. முதலில் படிப்பதை நிறுத்த வேண்டும்.
நம் கண்களுக்கு எந்தப் பாதிப்பு ஏற்பட்டாலும் உடனே கண் டாக்டரிடம் கண்களைச் சோதித்துக் கொள்வது நல்லது. இதன் மூலம் கிருமிகளால் நோய் தீவிரம் அடையாமல் ஓரளவுக்கு கண்களைக் காப்பாற்றலாம். கண் நோய் என்றால் மிகவும் கருத்தாக இருக்கவேண்டும்.
Comments
Post a Comment