Skip to main content

Google ads

திக்குவாய் பிரச்சனையை சரி செய்வது எப்படி? அறியாத தகவல்கள்- Medical Tamizha

 வாய் உள்ள அத்துணை பேரும் பேசவேண்டிய விஷயங்களைப் பிறர் விளங்கிக் கொள்ளும் படி பேசுவதில்லை.ஆனால், சிலரோ தட்டுத் தடுமாறிப் பேசுகிறார்கள். சொல்லுகிறார்கள்.

இதை ஸ்டட்டரிங் என்று ஆங்கிலத்தில் இன்னும் சிலர் சொற்களையோ, வாக்கியங்களையோ முழுவதும் சரியாக உச்சரிக்க முடியாமல் விழுங்கிவிழுங்கிப் பேசுகிறார்கள்.

இதை ஸ்டாமரிங் என்று ஆங்கிலத்திலும் திக்கித் திக்கிப் பேசுதல் என்று தமிழிலும் சொல்லுகிறார்கள்.

தமிழ்நாட்டின் சில கிராமங்களில் இதைக் கொன்னை வாய்ப் பேச்சு என்று கூறுவர்.

இந்தியாவில் திக்குவாய்ப் பேச்சாளர்கள் சுமார் ஒருகோடிப் பேர் இருக்கிறார்கள் என்று சொல்லுகிறார்கள்.

இது ஒரு நோயா? இல்லை. சிலருக்குச் சில காலங்களில் இப்படி ஒரு குறைபாடு ஏற்படுகிறது. இது ஒன்றைத் தவிர இவர்களின் உடலில் வேறு எவ்விதக் குறைபாடும் இருப்பதில்லை.

இந்தக் குறைபாட்டையும் இவர்கள் வாயைத் திறந்து பேசும் போதுதான் அறிய முடிகிறது.


பெண்களைவிட ஆண்களையே இந்தக் குறைபாடு அதிகமாகச் சோதித்துவிடுகிறது.

மேலும் குழந்தைப் பருவத்தில் உள்ளவர்களைத்தான் இந்தக் குறைபாடு அதிகமாகப் பாதிக்கிறது.

குழந்தைப் பருவத்தில் கண்ணால் கண்டதையும், காதால் கேட்டதையும் இவர்கள் உணர்ச்சியோடு பேசத் துடிக்கிறார்கள். வேகமாக வெளியிட விரும்புகிறார்கள்.

ஆனால் வார்த்தைகள் வருவதில்லை. சொற்கள் சிதறுகின்றன வார்த்தைகள் வக்கிரமாக வந்துவிழுகின்றன.

இதற்கு என்ன காரணம்?

தொண்டையில் அமைந்துள்ள தசைகளில் ஒருவித வலிப்பு உண்டாகிறது.

இந்த வலிப்பு, பேச்சு உறுப்பைச் சரியான முறையில் செயல்பட முடியாத படி தடுக்கிறது. இதுதான் இதற்குக் காரணம் என்று திக்குவாய்ப் பேச்சாளர்களை ஆராய்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

இந்தக் குறைபாட்டிற்கு உடல் பலகீனமும், மனப் பலகீனமும் ஒரு காரணம்.

தனக்குப் பழக்கமில்லாத நபருடன் பேச முற்படும் போது ஒருவித பயம், அச்சம், மிரட்சி உண்டாகிறது.

தன்னைவிட அறிவில் முதிர்ந்தவர்களிடம் பேசும் போதும், வயதானவர்களிடம் பேசும்போதும் இதுபோல் அச்சம் உண்டாகிறது.

இன்னும் சில சமயங்களில் தாழ்வு மனப்பான்மை காரணமாகப் பேசும் போது திக்கல் ஏற்படுகிறது. 

திக்கிப் பேசுகிறவர்கள். அவர்கள் பேசும்போது சிலருக்கு முகத்திலும் வலிப்புச் சின்னங்கள் தோன்றுவதைப் பார்க்கலாம்.

இன்னும் சிலர் தோள்ப்பட்டை களை உலுக்கி உலுக்கிப் பேசுவார்கள். முகத்திலும், உடம்பிலும், கை அசைப்பினும் சேஷ்டைகள் தோன்றுவதும் உண்டு.

சிலருக்கு உதடுகள் நடுங்கும். நாக்கு வாயின் மேற்புறத்தில் ஒட்டுக் கொள்ளும், முகச் சதைகள் சுருங்கும். விரியும். இது, தசைகளில் ஏற்படும் குறை என்று முன்காலத்தில் நினைத்து நரம்பைத் தளர்த்துவதும் நாக்கின் அமைப்பை மாற்றுவதும் ஆகிய முயற்சிகளில் இறங்கினார்கள்.உடம்பில் பித்தம் அதிகமாக இருப்பதே காரணம் என்றும் சொன்னார்கள்.

இந்தக் குறையைக் கண்டுபிடிக்க நீண்ட ஆராய்ச்சிகள் செய்து மனநிலையைச் சரிப்படுத்தினால் தீர்ந்துவிடும் என்றுமுடிவு செய்து சைக்கோதெரபி என்ற சிகிக்சை (ஸ்பீச் தெரபி) முறையைக் கொண்டுவந்தார்கள் மன இயல் நிபுணர்கள்.

 இந்தக் குறைபாடு உள்ளவர்களுக்கு கை, தோள் பட்டைகளைத் தளர்த்துவதன் மூலமும், வயிறு விதானம் மார்பு பகுதிகளில் அசைவை உண்டாக்குவதன் மூலமும் பயிற்சி கொடுக்கிறார்கள்.

இதன் மூலம் திக்குவாய் குணப்படுத்தமுடியும் என்ற நிலை உருவாகியுள்ளது, பேச்சில் ஏற்படும் தடுமாற்றம், மற்றும் திக்கல்களைப்

போக்க இப்போது கனி மருத்துவச் சிகிச்சைகள் முக்கிய கரங்களில் ஏற்படுத்தப்பட்டு செயல்பட்டு வருகின்றன.

குழந்தைப் பருவத்திலே தோன்றும் திக்கல்களைக் குழந்தைப் பருவத்திலேயே சில பயிற்சிகள் மூலம் நீக்குகிறார்கள். இதற்குப் பொறுமையும் விடாமுயற்சியும் தேவை என்று மன இயல் மருத்துவர்கள் சொல்லுகிறார்கள்.

திக்குவாய் பிரச்சனையை போக்க தமிழ் மருத்துவ முறைகள் என்ன?

தமிழ் மருத்துவத்திலும் குரல் வளத்திற்கு எளிய வைத்தியம் செய்கிறார்கள். நாக்கு வார்த்தைகளைச் சரிவர உச்சரிக்க முடியாமல் போனால் ஆடாதொடைக் கஷாயம் செய்து அதில் தேனும் திம்பிலியும் சேர்த்துக் குடிக்கக் கொடுக்கிறார்கள்.

சுத்தமான தேனும் பாலும் கலந்து குடித்து வந்தாலே போதும் குரல் நாண்கள் வலுப்படும்.

பேச்சு உறுப்பு நன்கு செயல்பட இப்போது நவீன துணைக்கருவிகளும் பயிற்சி சிகிச்சைகளும் எப்பேர்ப்பட்ட திக்குவாய் குறைபாட்டையும் போக்குகின்றன.

குழந்தைப் பருவத்திலேயே இந்தக் குறையைப் போக்கி விட்டால் பெரியவர்கள் ஆன பிறகு இது தொல்லைத் தராது.

Comments

Popular posts from this blog

எனிமா சிகிச்சை என்றால் என்ன? அதன் பயன்கள் யாவை?

 இயற்கை முறையில் வெளியேறாத மலத்தைச் செயற்றை முறையில் வெளியேற்ற மருத்துவ விஞ்ஞானிகள் பல வழிகளைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். மலமிலக்கி மருந்துகளைக் கொடுப்பது ஒரு வழி.இன்னொரு வழி, எனிமா (Enema) என்ற மலக் குடலைக் கழுவும் வழி. பேதி மருந்துகளைக் கொடுப்பதால் சுரப்பு நீர்கள் வீணாகின்றன. ஆனால் எனிமா என்ற சிகிச்சை முறையால் சுரப்பு நீர்கள் வீணாவதில்லை. அதே சமயம் குடல்களுக்கும் எவ்விதப் பாதிப்பும் இல்லை. இதனால் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க எனிமா சிகிச்சை முறை சிறந்த பரிகாரமாக இருந்து வருகிறது. நீரை மலக் குடலில் பாய்ச்சி கசடுகளை வெளியேற்றும் இந்த முறையைக் கண்டுபிடித்த டாக்டர் ஒரு நிகழ்ச்சியை அடிப்படையாக வைத்து இந்த எனிமா சிகிச்சையைக் கண்டுபிடித்தாராம். ஏரிக்கரையில் ஒரு குருவி வந்து உட்காருமாம். தன் அலகால் நீரை உறிஞ்சி அதன் ஆசன வாயில் பாய்ச்சிக் கொண்டிருக்குமாம். பிறகு மலம் கழிக்குமாம். எனிமா முறையைக் கண்டு பிடிக்க இந்த நிகழ்ச்சியே அடிப்படிடையாக டாக்டருக்கு உதவியது என்கிறது மருத்துவ வரலாறு. ஒரு சுவரில் கொஞ்சம் உயரத்தில் ஒரு பீங்கான் பாத்திரம் வைக்கப்படுகிறது. அதிலிருந்து ஒரு ரப்பர் குழாய் இணை...

ஆசன அரிப்பு பிரச்சனையை சரிசெய்யும் வழிமுறைகள்

 உணவை உண்ணுவதற்கு ஒரு வாயும், உண்ட உணவை வெளியே தள்ளுவதற்கு ஒரு வாயிலும் என இரண்டு அமைப்புக்கள் உடலில் படைக்கப் பட்டிருக்கின்றன. இரண்டும் சுத்தமாக, சுகாதாரத்தோடு இருந்தால் எவ்விதத் தொல்லைகளும் இந்த உடலுக்கு வருவதில்லை. பாதுகாப்புக் குறையும்போது இந்த உறுப்புக்கள் பழுதடைகின்றன. இதனால் சில உபத்திரவங்களும் உண்டாகின்றன. ஆசன வாயில் ஏற்படும் அரிப்பு இவற்றுள் ஒன்று.அரிப்பு என்பது ஒரு நோய் அல்ல. அது ஓர் அறிகுறி. உள் நோயின் அடையாளம். வரப்போகும் ஒரு நோயின் அறிவிப்பு. இதற்குப் பரிகாரம் தேடாவிட்டால் ஒரு நிரந்தரத் தொல்லையாகவும் அமைந்துவிடலாம். ஆசனவாய் அரிப்புக்குப் பல காரணங்கள் உண்டு. குடல் புழுக்கள், பூஞ்சைக் காளான் தொற்றுதல், நரம்புக் கோளாறுகள், அலர்ஜி ஆகியவற்றை இதற்குக் காரணங்களாகச் சொல்லுகிறார்கள். முக்கியமாகச் சொல்லப்படும் காரணங்களுள் அரை குறையாக மலம் கழிப்பதும் ஒன்று. முழுமையாகக் கழிவுப் பொருள்கள் வெளியே தள்ளப் படாமல் தேக்கி வைக்கப்படுவதால் அதனால் உறுத்தல் ஏற்பட்டு அரிப்பு உண்டாகிறது. மலச்சிக்கல், மூலம் (பைல்ஸ்) பௌத்திரம், வயிற்றில் புளிப்பு அதிகமாவதாலும் ஆசனவாய் அரிப்பு ஏற்படுகிறது. சில சம...

மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் ?

 மனம், உடல் இந்த இரண்டிற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு. மனத்தில் எற்படும் கோளாறுகளால் உடல் பாதிக்கும், உடல் கோளாறுகளால் மனமும் பாதிக்கும். இந்தப் பாதிப்பு பிறவியிலும் உண்டாகலாம். வளரும் காலத்திலும் உண்டாகலாம். பிறவியிலேயே மூளை பாதிக்கப்பட்ட நிலையை ஆங்கிலத்தில் Cerebral Palsy என்று குறிப்பிடுகிறார்கள். உடம்பாலோ, உள்ளத்தாலோ வளராத குழந்தைகள் மன வளர்ச்சி குன்றிய குழந்தைகள் என்றும், மூளை வளர்ச்சி பெறாத குழந்தைகள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்தியாவில் ஒரு கோடியே 25 இலட்சம் குழந்தைகள் மன வளர்ச்சி பெறாத குழந்தைகளாக இருக்கிறார்கள். குழந்தைகளில் சிலருக்குத் தலையில் காயம் ஏற்படலாம். விபத்தால் மண்டை ஓடு உடைந்திருக்கலாம். இதனால் மூளை பாதிக்கப்பட்டு மூளை வளர்ச்சி இல்லாமல் போகலாம். உடலின் வளர்ச்சிக்கும், ஆரோக்கியத்திற்கும், புத்திக் கூர்மைக்கும் உதவும் உடல் சுரப்பிகள் ஒழுங்கா சுரக்காத காரணத்தாலும் மன வளர்ச்சி குன்றிப் போகலாம். அறிவு மந்தம் என்று சொல்லப்படும் Mental Slow ness பிறவியிலிருந்தே சுரப்பிகளின் கோளாறினால் ஏற்படலாம். நோயின் காரணமாக வளர்ச்சி தாமதப் படலாம். குழந்தை பிறக்கும்போது தேவையான ...