Skip to main content

Google ads

மருந்து விஷயத்தில் கவனமாக இருக்க வேண்டியவை!

 டாக்டருக்கும் நோயாளிக்கும் இடையில் மருந்து விற்பனையாளர் ஒருவர் இருக்கிறார். இவர் விற்பனை செய்யும் மருந்தை வாங்கி நோயாளி சாப்பிடுகிறார். மருந்து விற்பனையாளருக்கு மேலே, மருந்தை உற்பத்தி செய்பவர் இருக்கிறார். 

இவர் தயாரித்து அனுப்பும் மருந்தை, மருந்துக் கடைக்காரர்கள் விற்பனை செய்கிறார்கள். மருந்து வியாபாரம் ஓர் இலாபகரமான வியாபாரம் என்று இப்போது இந்தத் தொழிலில் பலர் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதனால் போலி மருந்துகளின் நடமாட்டம் இந்தியாவில் பெருகிவருகிறது என்ற அச்சம் தரும் செய்திகள் தினசரித் தாள்களில் படிக்கிறோம்.

நோயிலிருந்து விடுதலை பெற எந்தவிலை கொடுத்தும் மருந்துகளை வாங்கும் பொதுமக்கள் ஏமாற்றப்படுவதோடு. சீக்கிரமாகவே இந்த உலகத்தை விட்டுப் போய் விடுகிறார்கள். 

மருந்து விற்பனையில் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் வியாபாரிகள் சட்டத்தின் சந்துகளில் புகுந்து விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இதை அரசும் அதிகாரிகளும் கவனித்துக் கொள்வார்கள் என்ற நம்பிக்கையில் பொதுமக்கள் கவனிக்க வேண்டிய விஷயங்களுக்கு வருவோம்: 



ஒரு நோயாளி, டாக்டரிடம் சிகிச்சை செய்து கொள்ளும் போது டாக்டர் எழுதிக் கொடுக்கும் சீட்டைக் கவனமாகப் பெறவேண்டும். டாக்டர் சீட்டில் டாக்டரின் முழுவிலாசம் அச்சடிக்கப்பட்டிருக்கிறதா? தகுதி பெற்ற டாக்டரா என்று கவனிக்க வேண்டும். சீட்டுக்களில் நோயாளியின் பெயர், தேதி முதலியவற்றை கவனமாக டாக்டர் எழுதியிருக்கிறாரா என்பதை கவனிக்கவேண்டும். 

மேலும் மருந்துகளின் பெயர்கள். சாப்பிடும் வேளைகள், சாப்பிடும் பில்ஸ் எண்ணிக்கைகளைக் குறிக்கிறாரா என்று சுவனிக்க வேண்டும். மருந்துகளின் பெயர்களை எழுதும்போது டாக்டர்கள் சிலர் கோழிக் கிறுக்கலாக எழுதி விடுகிறார்கள். இது மருந்தாளர்களுக்கும் புரிவதில்லை. இதனால் குழப்பம் ஏற்படுகிறது.

எனக்குத் தெரிந்த டாக்டர் ஒருவர் மருந்துச் சீட்டுக் கொடுக்கும் போது நோயாளி பெயரை எழுதுவதில்லை. தேதிகூடப் போடுவதில்லை. அவ்வளவு அவசரம்!

இந்தச் சீட்டை வீட்டில் பத்திரப் படுத்தமுடியாதபடி யாருக்கு, எந்தச் சீட்டு, என்ன மருந்து என்று புரியாமலே போய் விடுகிறது. டாக்டரிடம் இவற்றைக் கவனமாக எழுதி வாங்குங்கள். அவர் மறந்தாலும் நீங்கள் மறவாதீர்கள்!

டாக்டர் எழுதிக் கொடுக்கும் மருந்தை மட்டுமே மருந்துக் கடைகளில் கேட்டு வாங்குங்கள். மருந்துக் கடைக் காரர் அது இல்லை என்று வேறு மருந்து கொடுத்தால் வாங்காதீர்கள். டாக்டரிடம் வந்து சொல்லி வேறு மருந்தை எழுதி வாங்கிக் கொள்ளுங்கள். மருந்தை வாங்கிய உடனே சாப்பிட்டு விடாதீர்கள். சரிதானா என ஒப்பிட்டுப் பாருங்கள். 

நீங்கள் வாங்கிய மருந்துச் சீட்டில் உள்ள மருந்துகளை உங்கள் அக்கம் பக்கத்திலுள்ள மற்றவர்களுக்குக் கொடுக்காதீர்கள். அந்த மருந்துகளை வேறு ஒருவருக்குப் பயன்படுத்தாதீர்கள். இதனால் விபரீதம் ஏற்படலாம். உரிமம் பெற்ற மருந்துக் கடைகளில் மட்டுமே மருந்து வாங்குங்கள். கண்டகண்ட மருந்துகளை வாங்காதீர்கள். கடைகளில் விற்கும்

மருந்து மேல் மூடி அல்லது உறைகள் கிழிந்திருந்தால் வாங்காதீர்கள். லேபிள்கள் இருக்கின்றனவா என்று கவனியுங்கள். இல்லாவிட்டால் வாங்கவேண்டாம்.

மருந்துக் கடைகளில் வாங்கும் மருந்துகளுக்கு பில் கேட்டு வாங்குங்கள். பில் இல்லாமல் மருந்து வாங்காதீர்கள்.

மருந்து போலியாக இருக்கலாம் என்ற சந்தேகம் தோன்றினால் Drug Inspector அல்லது Drug Controller க்கு எழுதுங்கள். அல்லது நேரில் சென்று புகார் கொடுங்கள். இதனால் மருந்து மோசடிகளைச் கண்டுபிடிக்க உதவி செய்தவர் ஆகிறீர்கள். 

மருந்துக் கடைக்காரர்களிடம் நீங்களே உங்கள் நோய்களைச் சொல்லி மருந்து வாங்கிச் சாப்பிடாதீர்கள். மருந்து பாட்டிலில் விலைகளைக் சுவனியுங்கள். விலை குறைத்து கடைசாரர் உங்களிடம் பணம் கேட்டால் அந்த மருந்து போலியாக இருக்கலாம். குறைந்த விலைக்கு எந்தக் கடைக்காரரும் மருந்தை விற்க மாட்டார். ஏதோ சூது!"

மருந்து பாட்டிலில் மருந்து தயாரித்த மாதம் வருஷம் போட்டிருக்கும். அல்லது காலாவதியாகும் வருஷம் மாதம் போட்டிருக்கும். இவற்றைக் கவனிக்கவும். காலங்கடந்த மருந்துகளைக் குறைந்த விலைக்கு வாங்கிச் சாப்பிடாதீர்கள் ஆபத்து,

மருந்து சாப்பிட்டுத் தீர்ந்த பிறகு மருந்து பாட்டிலுள்ள லேபிளைக் கிழித்து விடுங்கள். பாட்டிலை முடிந்த வரை பழைய விலைக்கு விற்காதீர்கள்.

விஷம் என்று குறிப்பிடப்பட்ட மருந்துகளைக் குழந்தைகள் எடுக்காத உயரத்தில் வைத்துப் பாதுகாக்க வேண்டும். ஒரு வீட்டில் இருவர், மூவர் மருந்து சாப்பிடலாம். எல்லோரும்.அவரவர் மருந்துகளைத் தனித்தனி இடங்களில் வைச்சு வேண்டும் ஒரே இடத்தில் வைக்கக் கூடாது.

மருந்துகள் சிலவற்றை டாக்டர் பொட்டலமாக மடித்துக் கொடுப்பார். அதில் உங்கள் பெயரை எழுதி வையுங்கள். சித்த மருத்துவ இலேகியங்களை ஆயில் பேப்பரில் வைக்கவேண்டும். நியூஸ் பேப்பரில் வைக்காதீர்கள். 

அச்சு மையானது மருந்துடன் கலந்து விபரீதங்கள் ஏற்படலாம்.

மருந்துகள் விஷயத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருந்தால் உடல் நலத்தைக் காப்பதோடு, போலி மருந்துகளையும் கண்டுபிடித்து மோசடிகளைத் தடுக்கலாம்.

Comments

Popular posts from this blog

ஊதுகாமாலை என்றால் என்ன? நோயை தடுக்கும் வழிமுறைகள்

ஊதுகாமாலை  ✷மஞ்சள் காமாலை நோய் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் ஊது காமாலை நோய்பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர்கள். ✷கிராமப் பகுதிகளில் இந்தப் பெயர் பிரபலமடைந் திருக்கிறது. நோயாளிக்குக் கை, கால், வயிறு, முகம் ஊதிப்போய் பார்ப்பதற்கே விகாரமாய்த் தோன்றும். ✷இது போல வேறுசில நோய்களுக்கும் வயிறு முகம் வீங்கிக் கை கால்கள் நீர் சுரந்தும் காணப்படுவது உண்டு. ✷இந்த நோய் வந்தால் மேனியெல்லாம் வெளுத்துக் காணப்படும். இரத்தச் சோகை நோய் உள்ளவர்களுக்கும் உடம்பு வெளுத்திருக்கும். ✷இதனால் சிலர் சோகை நோய் என்று கருதி அதற்குரிய மருந்துகளை சாப்பிட ஆரம்பித்துவிடுவார்கள். ✷ ஊது காமாலை நோய் சாமானியத்தில் குணமாவது இல்லை. இதை நீராம்பல், மகோதரம், பாண்டுரோகம் என்றும், ஆங்கிலத்தில் Ascites என்றும் சொல்லுகிறார்கள்.  ✷சிலர் டிராப்ஸி என்றும் பல பெயர்களில் ஆங்காங்கே வழங்குகிறார்கள்.எல்லாம் இதன் இனத்தைச் சேர்ந்தவை. ✷இந்த நோய் எந்த வயதினருக்கும் வரும். இதைக் கவனிக்காமல் விட்டுவிட்டால் விபரீதங்களும் உண்டாகலாம். ✷வீங்குவது ஒன்றே இதன் வெளி அடையாளம். ✷ஊதுகாமாலை நோய் எதனால் ஏற்படுத்துகிறது என்று ஆராய்ந்தவ...

இளம் நரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய தீர்வு

இளநரைக்கு முடிவு கொடுக்க ஒரு எளிய இயற்கை தீர்வு ✍️ தேவையான மூலப்பொருட்கள்: 1.மருதாணி இலை - 1 கைப்பிடி 2.கரிசலாங்கண்ணி இலை - 1 கைப்பிடி 3.கறிவேப்பிலை - 1 கைப்பிடி 4.எலுமிச்சை - 1 பழம் ✍️ செய்முறை : 1 - 3 குறிப்பிட்ட இலையை தண்ணீர் விட்ட மைய்ய அரைத்து கொள்ளுங்கள் அதனுடன் எலுமிச்சை சாறு பிழிந்து அரைத்து கொள்ளவும் ✍️ பயன்படுத்தும் முறை: வாரம் ஒரு முறை தலை முடியில் தடவி 30 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் தலையை சீகக்காய் அல்லது உங்கள் தலைக்கு பொருந்தும் ஷாம்பூ பயன்படுத்துங்கள் ✍️ கடைபிடிக்க வேண்டியவை: 1. இளநரை மறைய குறைந்தது 10 வாரம் விடாது பயன்படுத்தினால் உறுதியான பலன் கிடைக்கும் 2.அடிக்கடி எண்ணெய் மற்றும் ஷாம்பூ மாற்ற வேண்டாம் 3.இந்த முடியில் பூசும் பொழுது முடியில் எண்ணெய் பசை இருந்தால் சுத்தமாக பலன் கொடுக்காது, தேவையான நேரத்தில் மட்டும் தயார் செய்து தலையில் தடவுங்கள் ஏற்கனவே தயார் செய்து வைத்து காய்ந்த கலவை பலன் கொடுக்காது 4.முடிந்த அளவு அந்த 30 நிமிடம் காய்வதும் வெயிலில் காய வைத்தால் இன்னும் மிக நல்ல பலனை பெறலாம் 5.இளநரை என்பது 20-40 வயதிருனருக்கு மட்டுமே பலன் கொடுக்கும் அதற்கு மேல் ...

நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்?

How do actresses face glow? நடிகைகளின் முகம் எப்படி பொலிவாக இருக்கும்? பொழுதுபோக்கு துறையில் ஒளிரும் முகத்தின் முக்கியத்துவம். பொழுதுபோக்கு துறையில் ஒரு நடிகையின் தோற்றத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று ஒளிரும் முகம். ஒரு பொலிவான நிறம் அவர்களின் அழகை அதிகரிப்பது மட்டுமல்லாமல், திரையில் அவர்களின் ஒட்டுமொத்த கவர்ச்சியையும் சேர்க்கிறது. நடிகைகள் பெரும்பாலும் கடுமையான தோல் பராமரிப்பு நடைமுறைகளை மேற்கொள்ள வேண்டும் மற்றும் குறைபாடற்ற மற்றும் ஒளிரும் முகத்தை பராமரிக்க குறிப்பிட்ட அழகு முறைகளை பின்பற்ற வேண்டும். அந்த விரும்பத்தக்க பிரகாசத்தை அடைய, நடிகைகள் பல்வேறு முறைகள் மற்றும் தயாரிப்புகளை நம்பியிருக்கிறார்கள். அவர்கள் தங்கள் சருமத்தை சுத்தப்படுத்துதல், ஈரப்பதமாக்குதல் மற்றும் தவறாமல் வெளியேற்றுவதன் மூலம் கவனித்துக்கொள்வதற்கு முன்னுரிமை அளிக்கிறார்கள். கூடுதலாக, அவர்கள் தங்கள் சருமத்தை புதியதாகவும், புத்துணர்ச்சியுடனும் வைத்திருக்க ஃபேஷியல், மசாஜ் மற்றும் பிற தொழில்முறை சிகிச்சைகளில் ஈடுபடலாம். இந்த காரணிகள் தங்கள் சருமத்தின் ஆரோக்கியத்திற்கும் பிரகாசத்திற்கும் பெரிதும் பங்களிப்பதால் ந...