யோகாசனம் - ஓர் அறிமுகம்
யோகா என்ற சொல் "யுஜ்" என்ற வடமொழிச் சொல்லில் இருந்து பெறப்பட்டதாகும்.
அதன் பொருள் இணைதல், சேர்தல், ஒருமுகப்படுத்துதல் என்பதாகும். அப்படி ஒன்று சேர்க்கப்படுகிற ஆற்றலை எப்படி பயன்படுத்துவது என்பதை பற்றி யோகா கற்றுக் கொடுக்கிறது.
சுவர் இருந்தால் தான் சித்திரம் எழுதமுடியும். என்பது போல நல்ல உடல் நலம் இருந்தால் தான் நீண்ட காலம் வாழ முடியும்.
அத்தகையை உடல் உறுப்புகளைக் கட்டுக் கோப்புடன் வைத்திருக்க ஆசனப்பயிற்சிகளை மேற் கொள்ள வேண்டும். அதே போல மனத்தூய்மையைப் பேணுவதற்கு மேற்கொள்ள வேண்டிய பயிற்சியே யோகம்.
யோகாசன பயிற்சியின் விதிமுறைகள் :
அதிகாலை 5 மணிக்குள் விழித்து கொஞ்ச தூரம் சென்று உலாவுதல், மலஜலம் கழித்தல், பல் துலக்குதல் ஆகிய கட மைகளை முடித்த பின்பே பயிற்சியை தொடங்க வேண்டும்.
ஆசனங்களை நான்கு மணியிலிருந்து ஆறு மணிக்குள் செய்து முடிக்க வேண்டும். அல்லது எட்டு மணிக்குள் செய்ய வேண்டும். அதே போல் மாலை ஐந்து மணியிலிருந்து ஏழு மணிக்குள் செய்து முடிக்க வேண்டும்.
வீட்டிற்குள்ளானாலும் வெளியிடமானாலும் சுத்தமான காற்றோட்டமுள்ளதாக இருக்கவும். வெறும் செய்யக்கூடாது. ஒரு விரிப்பின் மீது அமர்ந்து ஆசனப் பயிற்சிகளை செய்ய வேண்டும். தரையில்
செய்ய வெறும் வயிற்றோடுதான் வேண்டும். பெரும்பாலானவர்களுக்குக் காலையில் செய்வது தான் வசதியாக இருக்கும். ஆசனங்களை மாலையில் ஆகாரத்துக்குப் பின் ஆறு மணி நேரம் கழித்துப் பயிற்சி களை ஆரம்பிக்கலாம். செய்பவர்கள்
உடற்பயிற்சியை விரும்புபவர்கள் யோகாசனம் ஒரு நாளும் உடற்பயிற்சியை ஒரு நாளும் மாறி மாறிச் செய்ய வேண்டும்.
வியாதி உள்ளவர்கள் தேகநிலைக்குத் தகுந்த பயிற்சிகளை ஆசன நிபுணர்களை அருகில் வைத்துக் கொண்டு அவரின் ஆலேசனைப்படிதான் செய்ய வேண்டும்.
யோகாசானப் பயிற்சிகளை ஆரம்பிக்கும் போது மனதை ஒரு முகப்படுத்தி ஆசனத்தை செய்ய வேண்டும். பயிற்சி நேரத்தில் பேச கூடாது.
* பயிற்சிகள் செய்யும் காலத்தில் குனியும்போதும், உட்காரும் போதும். படுக்கும்போதும். உடலின் பாகங்கள் நசுங்கும்போதும் மூச்சை வெளியே விடவும்.
* தளர விடும் போது மூச்சை உள்ளிழுக்கவும்.
* ஆசனம் நிறுத்தும் காலங்களில் சாதாரணமாக உள்ளிழுத்து வெளிவிட்டுக் கொண்டிருக்க வேண்டும். மூச்சை
* ஆசனப் பயிற்சிகள் ஆரம்பிக்கும் போதும் முடிக்கும் போதும் ஐந்து நிமிடம் பத்மாசனத்தில் அமர்ந்து நாடி சுத்தி செய்ய வேண்டும்.
* அதேபோல ஆசனப் பயிற்சியின் கடைசியில் சாந்தி ஆசனம் செய்ய வேண்டும்.
Comments
Post a Comment