வியாதிகளைப் போக்குவதற்குக் இந்த ஆசனங்களைப் பயின்று வருவதுடன், முக்கியமாகப் பயிற்சிகள் ஆரம்பிக் கும் போதும் முடிக்கும் போதும், பத்து நிமிடம் வரை நாடி சுத்திப் பிராணாயாமம் செய்து வரவும்.
எல்லா வியாதி களுக்குமே ஆசனப் பயிற்சிகளுடன் அவசியம் நாடிசுத்தி செய்ய வேண்டுமென்பதால் அதனுடன் சேர்க்காமல் தனி யாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
கோபம், பயம், கவலை, மன அதிர்ச்சி இவைகளைப் போக்க எந்த மருந்துகளினாலும் முடிவதில்லை. ஆனால் யோகப் பயிற்சியின் மூலம் இதை அனைத்தையுமே நீக்கி பூரண பலன் கிடைக்க செய்யலாம்.
மனம் சம்பந்தப்பட்ட வியாதிகளுக்கு தனியாக ஓர் இடத்தில் அமர்ந்து ஐந்து நிமிடம் நாடிசுத்தி அல்லது உஜ்ஜயி பிராணாயாமம் செய்வதுடன் ஐந்து நிமிடம் சாந்தி ஆசனமும் செய்ய வேண்டும்.
இந்த ஆசனங்கள் செய்யும் போது மனதை எங்கும் சிதற விடாமல் ஒரு நிலைப் படுத்த வேண்டும்.
மனதாக வியாதி உள்ளவர்கள் ஆரம்பத்தில் தாமே இப்பயிற்சியை செய்வதை விட யோகாசன நிபுணரைக் கலந்து கொண்டு அவரின் ஆலேசனையின் பேரில் உடல் நிலைக்குத் தக்கவாறு பயிற்சிகள் செய்ய வேண்டிய நேர அளவைத் தெரிந்து செய்வது மிக நன்று.
ஆட்சிசிக்சை முறைக்குரிய ஆசனப் பயிற்சிகளைச் சிறிது சிறிதாக மேற்கொள்ள வேண்டும். ஆசனப் பயிற்சியின் பலன் பூரணமாக கிடைக்கும் வரை ஆண் பெண் சேர்க்கை யை விலக்க வேண்டும்.
உணவு விஷயத்தில் மிக கவனம் செலுத்த வேண்டும். மிதமான சத்துள்ள உணவு வகைகளை நோய்களுக்கு தக்கவாறு சரியான முறையில் சாப்பிடவும்.
நோய் குணமடைந்த பிறகும் ஆசனப் பயிற்சிகள் செய்வு தை நிறுத்தி விடாமல் தொடர்ந்து செய்து வந்தால் வியாதி யே வராமல் இருப்பதுடன் உடல் நலம் குறைவின்றி நெடு நாள் ஆரோக்கியமாக வாழலாம்.
பிராணாயாம பயிற்சியை செய்ய ஆசனத்தில் அமரும்போது நிமிர்ந்தபடி அமர்ந்து உடலை நேராக வைக்க
வேண்டும். முதுகு தண்டு சிறிதும் வளையாமல் நேராக இருக்கும்படி அமர்ந்திருக்க வேண்டும்.
உடலின் கழுத்து, மார்பு, தலை, ஆகியவை ஒரே நேர் கோட்டில் அமைந்திருக்க வேண்டும். முதுகை வளைத்துக் கொண்டு பயிற்சியை மேற்கொண்டால் உடலுக்கு கேடாகும்.
சுவாசத்தினை ஒழுங்குபடுத்துகின்ற நரம்பு மையம் எல்லா நரம்புகளையும் கட்டுப்படுத்துகின்றது. ஆகையால் முதலில் மூச்சினை நம் வயப்படுத்த வேண்டும்.
Comments
Post a Comment