வாழ்க்கையில் சில மனிதர்களைப் பார்க்கிறோம். இவர்களுக்கு நேராக இருக்கவேண்டிய கால்கள், கைகள் வளைந்து போய் இருக்கும். நடக்கும் போது முட்டிக் கால்கள் ஒன்றோடொன்று உரசும். இதுவும் ஒருவகை உடல் ஊனம்தான். மூட்டு நோய்களால் ஏற்படும் கோளாறுதான்.
உறுப்புக்களில் இப்படி ஒரு வளைவை உண்டாக்கு வது ஒரு நோயின் விளைவு என்பது பலருக்கும் தெரிவதில்லை. இந்த நோயைப் புளூராசிஸ் என்று ஆங்கிலத்தில் சொல்லுகிறார்கள்.
இந்த நோய் மனிதனுக்குள்ளே முடங்கிக் கிடந்து காலமெல்லாம் அச்சமூட்டிக்கொண்டே இருக்கும். இதனால் உயிருக்கு ஆபத்தில்லை என்றாலும் எலும்புத் தொடர்பான அங்கக் குறைவுகளை ஏற்படுத்தி உருவ அமைப்புக்களைப் பரிகசிக்கும்படி செய்து விடுகின்றது.
புளூராசிஸ் நோய் பத்து வயதுக்காரர்களை மடக்குகிறது.எப்படி?
பல் புளூராசிஸ் நோய் சிறுவர்-சிறுமியர்களின் பற்களைத் தாக்க ஆரம்பிக்கிறது.பற்களில் மஞ்சள் நிறக் கறையை உண்டாக்கிக் கடைசியில் கறுப்பு நிறத்தைப் படர விட்டு உறுதியான பற்களை உருக்குலைத்துவிடுகிறது.
புளூராசிஸ் நோய் மனிதனை மட்டும் தாக்குவதில்லை.
ஆடு,மாடுகள், எலி, மீன் ஆகியவற்றையும் தாக்கும். பிராணிகளின் பற்களைக் கறைப்படுத்தி நச்சுத் தன்மையை உண்டாக்கி சிறு அளவில் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கிறது.
புளூராசிஸ் நோய்க்கு அடிப்படைக் காரணம் குடிநீர்தான். குடிநீரில் புளோரைடு அயனியின் அளவு அதிகமானால் இந்த நோய் உண்டாகிறது. புளோரைடு எந்த அளவில் தண்ணீரில் கலந்திருக்கலாம் என்று ஒரு திட்டம் வைத்திருக்கிறார்கள்.
ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மில்லி கிராம் புளோரைடு கலந்திருக்கலாம். இதனால் எந்தவிதப் பாதிப்பும் ஏற்படுவதில்லை. இந்த அளவுக்கு மேற்பட்டால் பற்களில் பல் புளூராசிஸ் நோயும் மற்றும் சில தொந்தரவுகளும் உண்டாகின்றன.
ஹைட்ரோ புளோரிக் அமில வாயு மூலமாக புளூரைடு அயனி காற்றில் கலந்துவிடுவதாலும் நமக்குத் தீமைகள் உண்டாகின்றன.
நர் உணவுப் பண்டங்களிலும் புளோரைடு கலந்திருக் கிறது என்றாலும் இது செரிக்கப்பட்டுக் கழிவுப் பொருளாக வெளியே வந்துவிடுகிறது.
குடிநீரில் கலந்த புளோரைடு மட்டுமே இரத்தத்துடன் கலப்பதால் எலும்பு மூட்டுக்களில் பாதிப்பு ஏற்படுகிறது.
நாம் உபயோகிக்கும் பற்பசைகளில் புளோரைடு கலந்திருக்கிறதே, இதனால் பற்களும் பாதிப்பு உண்டாகாதா என்று நினைக்கலாம்.
இதில் அளவோடு கலந்திருப்பதால் பெரும்பாலும் பாதிப்பு ஏற்படுவதில்லை.
எலும்புகளிலும் மூட்டுக்களிலும் இந்த நோய் ஒரு முறை ஏற்பட்டு விட்டால் பிறகு குணப்படுத்துவது கஷ்டம் என்று சொல்லுகிறார்கள்.
இதனால் பற்களில் கறை படிந்திருந்தால் பல் டாக்டரிடம் சோதனை செய்து கொண்டு அதை நீக்க வழிசெய்ய வேண்டும்.
அடுத்து மூட்டு வாத நிபுணர்களிடம் சோதனை செய்து கொண்டு உடனே சிகிச்சை செய்து கொண்டால் இந்நோய் தோன்றாமல் தடுக்கலாம், அல்லது பாதிப்பைக் குறைக்கலாம்.
Comments
Post a Comment